சூரத்தில் உள்ள ஒரு தெருவோர கடையில் உணவு விற்பனை செய்யும் ஒருவர் 13,000 ரூபாய்க்கு அவோகேடோ டோஸ்டை விற்பனை செய்து சர்ச்சையை கிளப்பியுள்ளார். இன்றெல்லாம் ஃபுட் பிளாகர்கள் அதிகரித்து விட்டனர். வெவ்வேறு இடங்களுக்குச் சென்று விதவிதமான உணவுகளை ருசித்து அவற்றின் தரம், விலை போன்றவற்றை வீடியோவாக பதிவிடுகின்றனர். இதனால் எந்த கடைகளில் உணவு விலை மலிவாகவும், அதே நேரத்தில் சுவையாகவும் கிடைக்கிறது என்ற விவரங்கள் மக்களுக்கு தெரிய வருகிறது. அந்த வகையில் ஃபுட் பிளாகர் ஒருவர் தனது இன்ஸ்டாகிராமில் 13,000 ரூபாய்க்கு அவகேடோ டோஸ்டை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.
பலர் தங்களுடைய தினசரி உணவில் பழங்களை எடுத்துக் கொள்கின்றனர். சில பழங்கள் மிகவும் விலைமலிவாக கிடைக்கிறது. உதாரணமாக வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளலாம். சில பழங்கள் நடுத்தரமான விலையில் கிடைக்கும். ஆப்பிள், ஆரஞ்சு போன்றவற்றை வைத்துக் கொள்ளலாம். சில பிரீமியம் பழங்கள் உள்ளன. அவை பிற பழங்களை விட சற்று விலை அதிகம். அப்படி இருக்கையில் அவோகேடோ வைத்து செய்யக்கூடிய டோஸ்ட்டை 13,000 ரூபாய்க்கு எப்படி விற்க முடியும்? என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம். இந்த டோஸ்டுக்கு ஏன் இவ்வளவு விலை? என்பதை ஃபுட் பிளாகர் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

foodie_addicted என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்திருக்கும் ஒரு உணவு பிரியர் அதில் விலை உயர்ந்த அவோகேடோ டோஸ்ட் டிஷ் 13,000 ரூபாய்க்கு விற்கப்படுவதாக ஒரு வீடியோவை போஸ்ட் செய்துள்ளார். வெளியான வீடியோவில் ஒருவர் நறுக்கப்பட்ட அவோகேடோ பழங்களை ஒரு கிண்ணத்தில் போட்டு.. அதில் ஆலிவ் எண்ணெய், ஸ்பெஷல் மசாலா, லெமன் ஜூஸ் ஆகியவற்றை போட்டு நன்றாக மிக்ஸ் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த உணவை விலை உயர்ந்ததாக மாற்றும் பொருளே இதில் போடப்படும் புளே சீஸ் என்று கூறப்படுகிறது.
அதில் விற்பனையாளர் சைபீரியாவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்ட புளே சீஸை போடுவதாக தெரிவித்தார். ஒரு ரொட்டியை தட்டில் வைத்து அதற்கு மேல் புளே சீஸை வைத்து, அதோடு தயார் செய்த அவகேடோ பழங்களையும் வைத்து கடைசியாக மேலே எள்ளைத் தூவி வழங்குகிறார்.
இந்த டோஸ்டில் அவகேடோ பழங்கள் முக்கிய பொருளாக இருந்தாலும் செர்பியாவில் உள்ள ஜசாவிகா ஸ்பெஷல் நேச்சர் ரிசர்வ்விலிருந்து இறக்குமதி செய்யப்படும் புளே சீஸ் தான் அதன் விலையை உயர்த்துகிறதாம். ஏனெனில் புளே சீஸ் என்பது 60% கழுதை பால் மற்றும் 40% ஆட்டு பாலை கொண்டு ரகசிய செய்முறையுடன் தயாரிக்கப்படும் சீஸ் ஆகும். இதன் அரை கிலோ விலை இந்திய ரூபாய் மதிப்புக்கு 51,000 ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் ஒரு கிலோ புளே சீஸ் செய்வதற்கு சுமார் 25 லிட்டர் கழுதை பால் தேவைப்படும். அதோடு ஆண்டுக்கு 6 முதல் 15 கிலோ சீஸ் மட்டுமே விற்கப்படுகிறது.
இந்த போஸ்ட்க்கு பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு பயனர் இந்தியாவில் இப்படித்தான் ஆரோக்கியமான உணவை ஆரோக்கியமற்ற உணவாக மாற்றுவார்கள் என்று கருத்து தெரிவித்திருந்தார். மற்றொரு நபர், நல்ல வேலை எனக்கு அவகேடோ பழங்கள் பிடிக்காது என்று கமெண்ட் செய்திருந்தார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications