சமீபத்தில் வெளியான ஒரு உணவு பில் தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது. இந்தியாவைச் சேர்ந்த ஒரு பிரபல யூடியூபர் ஒரு உணவகத்திற்கு சென்று சாப்பிட்ட பில்லை தனது X பதிவில் பகிர்ந்துள்ளார். இந்த உணவகத்தின் சிறப்பு என்னவென்றால் இங்கு வரும் வாடிக்கையாளர்களிடம் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இந்த உணவகத்தில் வழங்கப்படும் உணவின் விலையை பார்த்து இணையவாசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வாடிக்கையாளரிடமிருந்து சேவைக் கட்டணம் வசூலிக்காத உணவகத்தின் கொள்கையை பாராட்டுவதற்காக இந்தியாவின் பிரபல யூடியூபரான இஷான் சர்மா தனது X பதிவில் தான் சாப்பிட்ட பில்லை பகிர்ந்திருந்தார். அவர் எதற்காக அந்த பில்லை பகிர்ந்தாரோ அதற்கு பதிலாக உணவின் விலையை பார்த்து பலரும் ஆச்சர்யமடையத் தொடங்கினர். ஸ்டார்ட் அப் நிறுவனர் மற்றும் தொழில் முனைவோரான இஷான் "உணவகங்களே கவனியுங்கள்" என்ற கேப்ஷனுடன் தான் சாப்பிட்ட 5 உணவுப் பொருட்களின் பில்லை பகிர்ந்திருந்தார்.

சைவ உணவுகளான பனீர் குர்ச்சான், தால் புக்காரா, கஸ்தா ரொட்டியுடன் கூடிய பனீர் மக்கானி மற்றும் புதினா பரந்தா ஆகியவை அடங்கும். இந்த 5 உணவுப் பொருள்களுக்கும் சேர்த்து ரூ.10,030 வந்துள்ளது.
இஷான் என்னவோ சேவைக் கட்டணங்கள் வசூலிக்காத உணவகங்களை பாராட்டவே இந்த பதிவை போஸ்ட் செய்திருந்தார். ஆனால் ஒரு வட இந்திய உணவுக்கு இவ்வளவு அதிக விலையா என்று பயனர்கள் பலரும் அதிர்ச்சடைந்தனர். பனீர் மக்கானிக்கு ரூ.2900, 3 பரந்தாவுக்கு ரூ.1125 மற்றும் ஒரு ரொட்டிக்கு ரூ.400 என்ற விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

ஒரு பயனர் வார இறுதி விடுமுறை அல்லது ஷாப்பிங்கிற்கு பெரும்பாலான மக்கள் செலவழிக்கும் தொகை 10,000 ரூபாய் என்று கூறியிருந்தனர். இந்த விலைக்கு நல்ல இயர்போன்களை வாங்கி இருக்கலாம் என்று பரிந்துரை செய்தனர். சிலர் ஏற்கனவே உணவுக்காக அதிக பணம் கொடுத்து விட்டு சர்வீஸ் சார்ஜ் இல்லாமல் இருப்பதை பாராட்டியதற்காக இஷானை கிண்டல் செய்திருந்தனர். ரூ. 25 மதிப்புள்ள ரொட்டிக்கு ரூ. 375 அதிகம் செலவு செய்துள்ளார் என்று கமெண்ட் செய்தனர்.
சர்வீஸ் கட்டணம் இல்லாத உணவகங்களை பாராட்டுவதற்காக அவர் போட்ட போஸ்டுக்கு எதிர்மாறான கருத்துகள் கிடைத்துள்ளன. இந்த போஸ்ட் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. உணவகங்களின் விலை நிர்ணயம் மற்றும் சேவை கட்டணம் தொடர்பான விவாதத்தை தூண்டியுள்ளது.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!



Click it and Unblock the Notifications