இன்றைய உலகில் சந்தேகத்திற்கு இடமில்லாத வகையில் அப்பாவி மக்களை குறிவைத்து பல்வேறு மோசடி சம்பவங்கள் நடக்கின்றன. அப்படித்தான் சூரத்தை சேர்ந்த ஒருவரும் ரூ.5 லட்ச ரூபாயை இழந்துள்ளார். பொதுவாக இது போன்ற மோசடிகள் குறித்து பொதுமக்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் மோசடிக்காரர்கள் பயன்படுத்தும் யுத்தி என்னவென்று தெரியவரும். சிலர் இதுதான் அவர்கள் பயன்படுத்தும் தந்திரம் என்பதை தெரியாமலேயே ஏமாறுகின்றனர். இந்த பதிவில் பாதிக்கப்பட்டவர் எப்படி ரூ.5 லட்ச ரூபாயை இழந்தார்? என்பது குறித்து பார்ப்போம்.
சூரத்தைச் சேர்ந்த 36 வயதான தொழிலதிபரான திவ்யாவுக்கு, வால்ஜி என்ற ஆள் பெயர் தெரியாத நபரிடமிருந்து ஒரு அழைப்பு வந்துள்ளது. வால்ஜி என்ற நபர் திவ்யாவிடம் கரன்சி எக்ஸ்சேஞ்ச் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இந்தத் திட்டத்தில் பங்களிப்பதனால் லாபகரமான வருமானம் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார். அதன் பின்னர் வால்ஜி திவ்யாவை யூசூப் என்ற நபரிடம் அறிமுகப்படுத்தியுள்ளார்.

விரைவில் திவ்யாவை விர்பூர் என்ற பகுதிக்கு அழைத்துள்ளனர். இந்த கரன்சி எக்ஸ்சேஞ்ச் திட்டத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதற்கு கமிஷன் கிடைக்கும் என்றும் ஆசை வார்த்தை காட்டியுள்ளனர். மேலும் 5 லட்ச ரூபாயை வழங்கும் படி வற்புறுத்தியுள்ளனர். திவ்யா இந்த செயல்முறையை நம்பி பணத்தை கொடுத்து கமிஷன் கிடைக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்துள்ளார். ஆனால் கடைசியில் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தன்னுடைய பணத்தை கேட்டு திவ்யா தொந்தரவு செய்ததால் யூசுப் திவ்யாவுக்கு கொலை மிரட்டலும் விடுக்க தொடங்கியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த திவ்யா பின்னர் ராஜ்கோட்டில் உள்ள விர்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆசை வார்த்தை காட்டி மக்களின் ஆசையை தூண்டி அபகரிக்கும் யுக்தி தான் இது. இதை புரிந்து கொண்டு அதிக லாபம் தருவதாக கூறும் எந்த ஒரு மோசடியிலும் சிக்காமல் இருக்க வேண்டும்.
என்னதான் காவல்துறையினர் தொடர்ந்து எச்சரித்தாலும் இன்னமும் மக்கள் லட்ச லட்சமாக ஏமாந்து கொண்டு தான் இருக்கின்றனர். இதுபோன்ற மோசடிகள் ஒரு பக்கம் இருக்கையில், பங்குச்சந்தை மோசடிகளும் அதிகரிக்க தொடங்கியுள்ளன. விரைவில் அதிக லாபம் தருவதாக கூறி பணத்தை அபகரிக்கின்றனர். ஏமாந்த பிறகு தான் தாங்கள் ஒரு மோசடி கும்பலிடம் சிக்கியதாக தெரிய வருகிறது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நேரம் இது.


Click it and Unblock the Notifications