ஹைதராபாத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் விராட் கோலியின் உணவகம் ஒன்றில் ரூ. 525 மதிப்புள்ள ஒரு உணவை ஆர்டர் செய்துள்ளார். அப்படி அந்த மாணவி ஆர்டர் செய்து பெற்ற உணவின் அளவு மிகக் குறைவாக இருந்துள்ளது. இதனால் தன் விரக்தியை அந்த மாணவி தனது X பதிவில் பதிவிட்டிருக்கிறார். இதே போல சந்தர்ப்பங்களை பலரும் சந்தித்திருப்போம்.. இது ஒரு விஷயமா? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இதில் விஷயமே இவர் சாப்பிட்ட உணவகத்தில் விராட் கோலியும் ஒரு இணை உரிமையாளர் என்பதுதான். ஒன் 8 கம்யூன் என்ற உணவகத்தில் தான் இந்த மாணவி உணவை ஆர்டர் செய்து பெற்றுள்ளார். அதோடு தான் வாங்கிய உணவின் புகைப்படத்தையும் பகிர்ந்திருந்தார்.
சினேகா என்ற அந்த மாணவி தனது X பதிவில், "இன்று ஒன் 8 கம்யூனில் இந்த உணவுக்காக ரூ. 525 செலுத்தினேன்", என்று எழுதி உணவின் ஸ்கிரீன்ஷாட்டையும் பகிர்ந்திருந்தார். சினேகா பகிர்ந்த ஸ்கிரீன்ஷாட்டில் சில துண்டுகள் சோளம், அதோடு சிறிதளவு டாப்பிங் சாஸ் கொடுக்கப்பட்டிருந்தது. சினேகா பெரி பெரி கார்ன் ரிப்ஸ் என்று சொல்லப்படுகிற உணவை ஆர்டர் செய்துள்ளார். இது சோளம், பர்மேன் சீஸ் மற்றும் ஸ்காலியன் ஆகியவற்றுடன் பரிமாறப்படும் உணவாகும்.

சினேகாவின் வருத்தமான பதிவு சமூக ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டது. சிலர் அவருடைய செலவை மிக அதிகம் என்று கமெண்ட் செய்தனர். உணவகங்களில் உணவுக்காக அதிக வட்டணம் வசூலிக்கப்படுவதை விட, உங்கள் அனுபவத்திற்காக அதிக கட்டணம் வசூலிக்கப்படலாம் என்று சிலர் கமெண்ட் செய்திருந்தனர்.
சினேகா தனது பதிவில் கேப்ஷன் எழுதி விட்டு இறுதியில் ஒரு அழும் ஸ்மைலியையும் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த ஒருவர், "ஆர்டர் செய்வதற்கு முன்பே உங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது தெரிந்திருக்கும், ஸ்டாப் கிரையிங்", என்று நகைச்சுவையாக கமெண்ட் செய்திருந்தார்.
மற்றொருவர் ஆம்பியன்ஸ், சேவை மற்றும் தூய்மை, வசதியான நாற்காலி, சுற்றிலும் உள்ள பணக்காரர்கள், அழகழகான பாத்திரங்கள் போன்றவற்றிற்காக தான் இந்த பணம் என்று கமெண்ட் செய்திருந்தார். சிலர் இதே உணவை குறைந்த விலையில் பெறுவதற்கு வேறு சாய்ஸ்களும் உள்ளது என்று கமெண்ட் செய்திருந்தார். மற்றொரு X பயனரான சுமக் ராவ் அதே உணவகத்தில் தனக்கு ஏற்பட்ட சொந்த அனுபவம் குறித்தும் பதிவிட்டார். சில பயனர்கள் கண்டிப்பாக இது அதிக விலை தான் என்று சினேகாவிற்கு ஆதரவாக கமெண்ட் செய்திருந்தனர்.


Click it and Unblock the Notifications