டாடா கொடுத்த செம சான்ஸ்.. 280% லாபம்.. ஜாக்பாட் தான்..!

இந்தியாவின் முன்னணி வணிக குழுமமான டாடா குழுமம், உணவில் உபயோகப்படுத்தும் உப்பு முதல் கொண்டு சொகுசு காரான ஜாகுவார் வரையில் பல வணிகங்களை செய்து வருகின்றது.

பாரம்பரிய வணிக நிறுவனமான இது வாகன வணிகத்திலும் கொடி கட்டி பறந்து வருகின்றது.

இதற்கிடையில் கடந்த 12 மாதங்களில் மட்டும் டாடா மோட்டார்ஸ் பங்கு விலையானது 280% அதிகரித்துள்ளது. இது கொரோனா நெருக்கடி காலகட்டத்தில், வாகன துறையானது மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பங்கு விலை செம அதிகரிப்பு

பங்கு விலை செம அதிகரிப்பு

இது கடந்த மே 26, 2020ல் 83.1 ரூபாயாக இருந்த பங்கின் விலையானது, மே 26, 2021 அன்று 315.50 ரூபாயினை எட்டியுள்ளது. இது சுமார் 280% அதிகரித்துள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது சென்செக்ஸ் வெறும் 67% மட்டுமே இந்த காலகட்டத்தில் அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டில் முதலீடு?

கடந்த ஆண்டில் முதலீடு?

கடந்த ஆண்டில் இந்த பங்கில் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் 1200 பங்குகள் உங்களால் வாங்கியிருக்க முடியும். இன்று அதன் விலை 315 ரூபாய் என்று வைத்துக் கொண்டால் கூட, உங்களது முதலீடு 3,78,000 ரூபாயாக மாறியிருக்கும்.

டெக்னிக்கலாக?

டெக்னிக்கலாக?


டாடா மோட்டார்ஸின் பங்கின் விலையானது இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து மட்டும் 71% அதிகரித்துள்ளது. இந்த பங்கு விலையானது தற்போது 5 நாள், 10 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள், 200 நாள் மூவிங் ஆவரேஜ்ஜூக்கு மேலாக வர்த்தகமாகி வருகின்றது.

டாடா மோட்டார்ஸில் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா முதலீடு

டாடா மோட்டார்ஸில் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா முதலீடு

அதோடு இதன் சந்தை மூலதனமும் 1,04,755.71 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தியாவின் வாரப் பஃபெட் என்று அழைக்கப்படும் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா, கடந்த செப்டம்பர் 2020வுடன் முடிவடைந்த காலாண்டில் 4 கோடி பங்குகளை வாங்கியுள்ளார். இது ஆட்டோமொபைல் நிறுவனத்தில் ராகேஷ் செய்த நேரடி முதலீடாகும்.

ரேகா ஜூன் ஜூன்வாலா முதலீடு

ரேகா ஜூன் ஜூன்வாலா முதலீடு

ராகேஷ் ஜூன் ஜூன்வாலாவின் மனைவி ரேகா ஜூன் ஜூன்வாலாவும் கடந்த செப்டம்பர் காலாண்டில் 17.51 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளார். சமீபத்தில் 12 பங்குகளில் தனது முதலீடுகளை குறைத்த ராகேஷ் ஜூன் ஜூன்வாலா, டாடா மோட்டார்ஸில் 1.29% பங்குகளில் மீண்டும் முதலீடு செய்தது குறிப்பிடத்தக்கது.

மார்ச் காலாண்டில் நஷ்டம்

மார்ச் காலாண்டில் நஷ்டம்

அதிகரித்து வரும் மூலதன பொருட்களின் விலைக்கு மத்தியில் நிறுவனம் செலவினை குறைக்க திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த மார்ச் 2021ம் ஆண்டில் நிறுவனம் 7,585 கோடி ரூபாய் நஷ்டத்தினை சந்தித்துள்ளது. எனினும் வருவாய் 89,319 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 63,057 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த நிதியாண்டில் என்ன நிலவரம்

கடந்த நிதியாண்டில் என்ன நிலவரம்

கடந்த 2020 - 21ம் நிதியாண்டில் இந்த நிறுவனம் நஷ்டமாக 13,395 கோடி ரூபாயினை சந்தித்துள்ளது. இதே முந்தைய ஆண்டில் 11,975 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டுள்ளது. இதே வருவாய் 2,52,438 கோடி ரூபாயாகும். இதே இதற்கு முந்தைய ஆண்டில் 2,64,041 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+