சென்னை: தங்கம் சார்ந்த மிகப்பெரிய ஒரு முறைகேடு மிக நுணுக்கமான முறையில் திட்டமிடப்பட்டு சென்னையில் அரங்கேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரயில் டிக்கெட்களை துப்பாக வைத்து கொண்டு 941 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வருவாய் புலனாய்வு இயக்குனரகம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின் படி சென்னையை சேர்ந்த ஆறு நகை கடைகள் வங்கிகள் போன்ற ரிசர்வ் வங்கியின் நியமனம் செய்யப்பட்ட நிறுவனங்களிடமிருந்து ஏற்றுமதிக்குத் தேவையான தங்க நகைகளை உற்பத்தி செய்வதற்காக வரி இல்லாத இறக்குமதி செய்யப்பட்ட தங்க கட்டிகளை வாங்கி உள்ளன.

ஆனால் அதில் 90 சதவீத தங்கம் கருப்பு சந்தைக்கு மாற்றப்பட்டுள்ளது. மீதமுள்ளவை கொல்கத்தா, மும்பை , ராஜ்கோட் மற்றும் சென்னையில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு இமிடேட் ஜூவல்லரிஸ் எனப்படும் ஃபேஷன் நகைகளை தயாரிக்க அனுப்பப்பட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் இவை 22 கேரட் நகை என தவறாக குறிப்பிடப்பட்டு சென்னை ஏர் கார்கோ வளாகத்தில் துபாய் மற்றும் மலேசியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதற்கு கார்கோ பிரிவில் இருந்த அதிகாரிகளும் துணை போயுள்ளனர். இவ்வாறு மொத்தமாக 2,507 கிலோ தங்கம் பார்களாக வரி இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்டு அதில் 2170 கிலோ தங்கம் கருப்பு சந்தைக்கு திருப்பிவிடப்பட்டு, 337.02 கிலோ எடை கொண்ட தங்கம் இமிடேஷன் ஜுவல்லரிகளை தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளன என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இந்த மிகப்பெரிய முறைகேட்டுக்கு பின்னணியில் இருப்பது நகை ஏற்றுமதியாளர்கள் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது இவர்கள் அனைத்து தங்க கட்டிகளுமே உற்பத்தியாளர்களுக்கு அனுப்பப்பட்டதாக காட்ட போலியாக ஆவணங்களை உருவாக்கியுள்ளனர்.
உதாரணமாக கொல்கத்தாவுக்கு தங்க நகைகளை கொண்டு செல்வதாக ஒரு முகவரை ஏற்பாடு செய்து அவருக்கு ஐஆர்சிடிசி அங்கீகாரம் பெற்ற முகவர் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். இந்த ரயில்வே டிக்கெட்டை ஆய்வு செய்தபோதுதான் வருவாய் புலனாய்வு இயக்குனரகத்திற்கு மிகப்பெரிய மோசடி தெரியவந்துள்ளது.
அதாவது இந்த டிக்கெட்டுகள் பெரும்பாலானவை வெயிட்டிங் லிஸ்ட் எனப்படும் காத்திருப்பு பட்டியலிலேயே இருந்துள்ளன. அவை ஒருபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை அந்த டிக்கெட்டுகளில் யாரும் பயணமும் செய்யவில்லை. அதாவது கொல்கத்தாவிற்கு யாரும் பயணம் செய்யவில்லை .
ஆனால் இங்கிருந்து ஒரு நபர் தங்கத்தை கொண்டு சென்று கொல்கத்தாவில் டெலிவரி செய்தது போல போலியான டிக்கெட் ஆவணங்களை இவர்கள் தயாரித்து வழங்கியுள்ளனர். இதனை உறுதி செய்வதற்காக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் டவர்களை ஆய்வு செய்தனர்.
அதில் தங்க கட்டிகளை கொண்டு செல்வதாக கூறப்படும் நபர்கள் சென்னையை விட்டு வெளியேறவில்லை என கண்டறியப்பட்டது. மேலும் நகை உற்பத்தியாளர்கள் தங்க கட்டிகளைப் பெற்றுக் கொண்டு நகைகளை உற்பத்தி செய்ததாக போலியான ஆவணங்களை தயாரித்து அதனை கொரியரில் அனுப்பி உள்ளனர். ஆனால் அந்த கொரியரில் நகை எதுவும் கிடையாது வெறும் போலி ஆவணங்கள் மட்டுமே இருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இப்படி சென்னையை மையமாக கொண்டு இவ்வளவு பெரிய தங்கம் மோசடி நடந்திருப்பது விசாரணையில் தெரிய வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Written by: Devika
More From GoodReturns

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி சரிவு; இந்த நிலை அப்படியே நீடிக்குமா?

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: இனி வரும் நாட்களில் விலை ஏறுமா? இறங்குமா?

எல்லாம் காலியாக போகுது.. தங்கம், பிட்காயின் தான் இனி ராஜா! ராபர்ட் கியோசாகியின் பகீர் எச்சரிக்கை!

கோவையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: சாமானிய மக்கள் அதிர்ச்சி!!

மதுரை மக்களே உங்க ஊரில் இன்று தங்கம் விலை குறைந்ததா? உயர்ந்ததா?

ஈரான் போர் நிறுத்தம்: உயர்ந்தது தங்கம் விலை; சரிந்தது கச்சா எண்ணெய் விலை!! ஓவர் நைட்டில் எல்லாமே மாறியது!!

Gold விலை ஏறினாலும் தணியாத மோகம்! இந்தியர்களின் அதிரடி வேட்டை! கவலையில் நிதியமைச்சகம்?

Akshaya Tritiya 2026:குறைந்த விலையில் தங்கம் வாங்க இப்பவே பிரைஸ் லாக் செய்யலாம்! கவலையே வேண்டாம்?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

போர் பதற்றத்திலும் தங்கம் வீழ்வது ஏன்? டாலரின் ஆதிக்கம் மீண்டும் தொடங்குமா? உங்கள் முதலீடு எங்கே?

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?



Click it and Unblock the Notifications