சர்வதேச வர்த்தக சந்தையில் ரஷ்யா எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பது உக்ரைன் மீதான போருக்கு பின்பு தான் உலக நாடுகள் உணர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இன்று வரையில் போதுமான கச்சா எண்ணெய், எரிவாயு, பிற கச்சா எண்ணெய் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கி வருகிறது.
ஐரோப்பிய பொருளாதார மந்தநிலைக்கு மிக முக்கியமான காரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விளங்குகிறது என்றால் மிகையில்லை. இந்த நிலையில் ரஷ்யா அடுத்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது, இது கச்சா எண்ணெய்யை விடவும் மோசமானது என்றால் மிகையில்லை.
ரஷ்யா தற்போது சர்வதேச உணவு சந்தையின் சப்ளை-யை கைப்பற்றி அதை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
உணவு பொருட்கள்
உலகின் மிகப்பெரிய உணவு பொருட்கள் வர்த்தக நிறுவனங்கள் ரஷ்யாவில் இருந்து வெளியேற்றப்பட்டது மூலம் அந்நாட்டின் ஒட்டுமொத்த உணவு பொருட்கள் வர்த்தக சந்தையை ரஷ்யா அரசு கைப்பற்றியுள்ளது.
உக்ரைன் போர்
உக்ரைன் போர் துவங்கியது முதல் ரஷ்யாவில் இருந்து பல முன்னணி வெளிநாட்டு நிறுவனங்கள் தத்தம் நாடுகளின் உத்தரவு காரணமாக வெளியேறிய நிலையில், உலகின் மிகப்பெரிய உணவு பொருட்கள் வர்த்தக நிறுவனங்களான Cargill, Viterra, Archer-Daniels-Midland Co ஆகியவை வெளியேறாமல் இருந்தது.
Cargill, Viterra வெளியேறியது
இந்த நிலையில் டிசம்பர் மாதம் முதல் ரஷ்ய தரப்பில் இருந்து கடுமையான நெருக்கடிகள் கொடுக்கப்பட்ட நிலையில் Cargill, Viterra ஆகியவை ரஷ்யாவில் இருக்கும் வர்த்தகம், சொத்துக்கள் என அனைத்தையும் விடுத்து வெளியேறியது. இதை தொடர்ந்து Archer-Daniels-Midland Co ரஷ்யாவை விட்டு வெளியேறும் வழியை தேடி வருகிறது.
ரஷ்யா ஆதிக்கம்
இந்த நிலையில் 3 வெளிநாட்டு நிறுவனங்களின் வர்த்தகம், சொத்துக்களை கைப்பற்றியது மூலம் ரஷ்ய நிறுவனங்கள், ரஷ்ய அரசு நிறுவனங்கள் சர்வதேச தாணிய ஏற்றுமதியில் பெரும் பகுதி வர்த்தகத்தை கைப்பற்றியுள்ளது. சர்வதேச சந்தையில் பெரும் ஆதிக்கத்தை ரஷ்யா பெற்றுள்ள வேளையில் சப்ளை, விலை ஆகியவற்றை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வர உள்ளது.
கச்சா எண்ணெய்
இனி வரும் காலத்தில் கச்சா எண்ணெய் வாயிலாக மட்டும் அல்லாமல் தாணிய ஏற்றுமதி சந்தையில் இருந்தும் அதிக வருமானத்தை ஈட்ட உள்ளது. இதை ரஷ்யா ஒரு ஆயதமாகவும் பயன்படுத்த முடியும் என்பது தான் தற்போது உலக நாடுகளின் அச்சம். ரஷ்யா தனது நட்பு நாடுகளுக்கு அதிகமான சப்ளை செய்ய முடியும், இதேபோல் தனது எதிர் நாடுகளுக்கான சப்ளையை மொத்தமாக குறைக்கவும் முடியும்.
14 சதவீதம் ஏற்றுமதி
ரஷ்யாவின் ஒட்டுமொத்த தாணிய உற்பத்தியில் சுமார் 14 சதவீதம் Cargill, Viterra ஆகிய இரு நிறுவனத்திடம் இருந்தது, இதை மொத்தமாக ரஷ்யா அரசு தரப்பில் கைப்பற்றிய நிலையில் இதன் விலையை பெரிய அளவில் உயரத்த அதிக வாய்ப்பு உள்ளது. இது ரஷ்யா தாணியங்களை நம்பியிருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இதர G7 நாடுகளுக்கு தான் பெரிய பிரச்சனை.
விலை நிர்ணயம்
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்க்கு G7 நாடுகள் ஏற்கனவே 60 டாலர் என்ற விலை நிலையை நிர்ணயம் செய்துள்ளது, இந்த நிலையில் தாணிய ஏற்றுமதியில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை குறைக்க என்ன செய்யப்போகிறது.


Click it and Unblock the Notifications