ரஷ்யாவின் மத்திய வங்கி தனது இருப்பில் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்யத் தொடங்கியுள்ளதாக மாஸ்கோ டைம்ஸ் பத்திரிக்கை அதிர்ச்சி தகவலை புதன்கிழமை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் கடுமையான தடைகளுக்கு மத்தியில் வர்த்தகம் செய்ய முடியாமலும், புதிய வருவாய் ஈர்க்க முடியாமல் மாட்டிக்கொண்டு இருக்கும் ரஷ்யா தங்கத்தை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
இதுவரையில் அந்நாட்டின் NWF அதவாது நேஷ்னல் வெல்த் பண்ட்-ல் இருந்த டிஜிட்டல் வடிவிலான தங்கத்தை மட்டுமே டிஜிட்டல் முறையில் விற்று வந்த ரஷ்யா, இப்போது மத்திய வங்கியின் கஜானா-வில் இருக்கும் உலோக தங்கத்தை நேரடியாக சந்தையில் விற்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. இந்த விற்பனை நிதி அமைச்சகத்தின் பட்ஜெட் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்காக மேற்கொள்ளப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளது.

உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் தங்கம் விற்பனை தீவிரம்
ரஷ்யாவின் தங்க இருப்பு உலகில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மொத்தம் 2,300 டன்களுக்கும் மேல் தங்கம் வைத்துள்ளது. உக்ரைன் மீதான முழு அளவிலான படையெடுப்பு தொடங்குவதற்கு முன்பு நேஷ்னல் வெல்த் பண்ட்-ல் 405.7 டன் தங்கம் இருந்தது.
அதன் பிறகு பட்ஜெட் பற்றாக்குறையை சமாளிக்க 57 சதவீதம் அதாவது 232.6 டன் தங்கத்தை விற்றுவிட்டது. நவம்பர் 1 ஆம் தேதி நிலவரப்படி அந்த சிறப்பு நிதியத்தில் வெறும் 173.1 டன் தங்கம் மட்டுமே மீதமுள்ளது. இப்போது மத்திய வங்கியின் சொந்த இருப்பில் இருந்து உலோக வடிவிலான தங்கத்தை விற்கத் தொடங்கியிருப்பது பொருளாதார நெருக்கடியின் பாதிப்பை படம் போட்டு காட்டுகிறது.
ஏன் இப்போது உண்மையான தங்கம் விற்கப்படுகிறது?
கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யாவின் உள்நாட்டு தங்கச் சந்தை பெரிதும் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் மத்திய வங்கி இதுவரை சீன யுவான் நாணயத்தின் மூலம் மட்டுமே நடத்தி வந்த வர்த்தக நடவடிக்கைகளை இப்போது தங்கம் மூலமாகவும் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த விற்பனை எப்போது தொடங்கியது, எவ்வளவு அளவு தங்கம் விற்கப்பட்டது என்பதை அந்நாட்டின் மத்திய வங்கி வெளியிடவில்லை. ஆனால் இது ரூபிள் நாணயத்தை வலுப்படுத்தவும், யுவான் இருப்பில் உள்ள அழுத்தத்தை குறைக்கவும் உதவும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
National Wealth Fund நிலைமை மோசம்
National Wealth Fund மொத்த திரவ சொத்துகள் தங்கம் மற்றும் யுவான் உள்ளிட்டவை சேர்த்து 55 சதவீதம் குறைந்து 51.6 பில்லியன் டாலராக உள்ளது. போர் செலவு, மேற்கத்திய நாடுகள் தடைகள், எண்ணெய் வருவாய் குறைவு ஆகியவை ரஷ்யாவின் பட்ஜெட்டை பெரிதும் பாதித்துள்ளன. இதனால் தங்கம் விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
உலக சந்தைக்கு என்ன பாதிப்பு?
ரஷ்யா உலகின் மிகப்பெரிய தங்க உற்பத்தி நாடுகளில் ஒன்று. இப்போது அரசு தனது இருப்பில் இருந்து தங்கத்தை விற்பனை செய்வது உலக தங்கச் சந்தையில் விநியோகத்தை சற்று அதிகரிக்கும். ஆனால் ரஷ்யாவின் தங்க விற்பனை அளவு மிகக் குறைவாக இருப்பதால் உடனடியாக தங்க விலையில் பெரிய மாற்றம் ஏற்படுத்தாது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இருப்பினும் ரஷ்யாவின் இந்த நடவடிக்கை அந்நாட்டின் பொருளாதார நெருக்கடியை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது. போர் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் ரஷ்யா தனது தங்க இருப்பை மேலும் குறைக்க வேண்டியிருக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
More From GoodReturns

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!



Click it and Unblock the Notifications