இந்தியாவில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ரஷ்யாவின் அதிரடி முடிவு தான் காரணம்!!

2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தது. இதற்கு சர்வதேச காரணிகளும், உலக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததும் முக்கிய காரணம். 2025 ஆம் ஆண்டு இறுதியில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு சவரன் தங்கம் விலை 1 லட்சம் ரூபாய் என்ற மைகல்லையும், ஜனவரியில் 1.30 லட்சம் என்ற மைல்கல்லையும் கடந்தன.

ஜனவரி 29ஆம் தேதிக்கு பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வர்த்தகம் முடியும்போது எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கத்தின் விலை 1,56,200 ரூபாயாக இருந்தது, அதே வேளையில் கோமெக்ஸ் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸ் 5,046 டாலர்கள் என இருந்தது. இந்திய சந்தையிலும் சரி சர்வதேச சந்தையிலும் சரி வரலாற்று உச்சத்தில் இருந்து 10% வரை சரிவில் இருக்கிறது தங்கம்.

இந்தியாவில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ரஷ்யாவின் அதிரடி முடிவு தான் காரணம்!!

இந்நிலையில் தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணமாக இருந்த முக்கிய காரணிகள் அனைத்தும் தணிந்து விட்டதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். குறிப்பாக சர்வதேச வர்த்தகத்தில் மீண்டும் அமெரிக்க டாலரை பயன்படுத்த ரஷ்யா முடிவு செய்து இருப்பதாகவும் ப்ளூம்பெர்க் செய்தி குறிப்பிடுவதால் தங்கம் விலை பெருமளவில் சரியும் என்கின்றனர்.

அண்மையில் தான் அமெரிக்கா தந்த அழுத்தத்தால் இந்தியா ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது. ஏற்கனவே அமெரிக்காவின் பொருளாதார தடைகளை எதிர்கொண்டுள்ள ரஷ்யா, தற்போதைக்கு அமெரிக்காவுடன் சமாதானமாக செல்ல திட்டமிட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யா மீண்டும் அமெரிக்க டாலர் அடிப்படையிலான வர்த்தகத்திற்கு மாற முடிவு செய்துள்ளதாம். இது அமெரிக்க டாலருக்கு மிகப்பெரிய அளவில் வலு சேர்க்கிறது. அமெரிக்க டாலர் வலுவடைந்தால் தங்கம் விலை குறையும்.

இந்தியாவில் தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு கீழ் குறைகிறதா? ரஷ்யாவின் அதிரடி முடிவு தான் காரணம்!!

ஏற்கனவே சீனா உள்ளிட்ட நாடுகள் அதிகமாக தங்கம் வாங்கி இதன் மூலம் டாலரை வலுவிழக்க செய்ய திட்டமிட்டன. இதற்கு டிரம்பின் வர்த்தக மோதல்களும், பொருளாதார தடைகளும் காரணம். சீனாவை பின் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் கடந்த ஆண்டு அதிக தங்கம் வாங்கின. இந்நிலையில் டாலரில் வர்த்தகம் செய்யும் ரஷ்யாவின் முடிவு உலக வர்த்தகத்தையே மாற்றி அமைக்க போகிறது.

பல்வேறு நாடுகளும் சர்வதேச வர்த்தகத்திற்கு அமெரிக்க டாலரை பயன்படுத்துவதால் உலகிலேயே வலிமையான ஒரு நாணயமாக அமெரிக்க டாலர் திகழ்கிறது. பேஸ் 360 நிறுவனத்தின் தலைவரான அமித் கோயல் ப்ளூம்பெர்க் நிறுவனம், மீண்டும் ரஷ்யா அமெரிக்க டாலரில் வர்த்தகம் செய்ய போவதாக செய்தி வெளியிட்டு இருக்கிறது. அமெரிக்காவுடன் வர்த்தக உறவை மேம்படுத்தவும் திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வந்து அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே ஒரு சுமூகமான உறவு ஏற்படும் போது இது சாத்தியம் என கூறுகிறார்.

ரஷ்யா இது குறித்த எந்த ஒரு அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் இது நடந்தால் தங்கத்தின் விலை பெருமளவு குறையும் என தெரிவிக்கிறார். ப்ளூம்பெர்க் நிறுவனம் ரஷ்யா அரசின் ஆவணங்களை ஆய்வு செய்து தான் இந்த தகவலை வெளியிட்டிருக்கிறது என்பதால் ரஷ்யாவின் முடிவினை அடுத்து பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை வாங்குவதை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

மத்திய வங்கிகள் தங்கம் வாங்குவதை குறைத்தால் தங்கத்திற்கான டிமாண்ட் குறையும் எனவே விலை குறையும் என்கின்றனர் நிபுணர்கள். ரஷ்யா மீண்டும் அமெரிக்க டாலரை கொண்டு வர்த்தகம் செய்தால் கட்டமைப்பு ரீதியிலான ஒரு மாற்றமே நடக்கும் என்கிறார். அதாவ்து ரஷ்யா கையில் இருக்கும் தங்கத்தை விற்க தொடங்கும். இதனால் டிமாண்ட் குறைந்து சப்ளை அதிகரித்து விலை குறையும். இது நடந்தால் இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 1 லட்சம் ரூபாய்க்கு கீழ் சரிவடையும் , உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் 3000 டாலருக்கு கீழ் செல்லும் என கூறுகிறார். இது ஒரே நாளில் நடந்து விடாது என்பதையும் அவருக்கு தெரிவிக்கிறார். அதாவது தொடர்ந்து குறைந்து குறைந்து இந்த நிலையை எட்டுவதற்கு வாய்ப்புள்ளதாக அவர் சுட்டிக் காட்டுகிறார். இது நடக்க வேண்டும் என்பது தான் கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் ஆசை.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+