சஹாரா குழுமத்தின் தலைவரும், நிர்வாக அதிகாரியுமான சுப்ரதா ராய் மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் இருதயச் சுவாசக் கோளாறு காரணமாக 75 வயதில் இன்று காலமானார். இவருடைய வளர்ச்சி கதை பலருக்கும் வியப்பு அளித்தாலும் கடந்த 10 ஆண்டுகளில் 3 கோடி முதலீட்டாளர்களிடம் இருந்து மோசடி செய்த வழக்கு தான் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.
NBFC நிறுவனமான சஹாரா இந்தியா பைனான்சியல் கார்ப்பரேஷன் லிமிடெட் (SIFCL) மீது ரிசர்வ் வங்கி 2008 ஆம் ஆண்டில், அதன் சிட்-பண்ட் செயல்பாடுகளின் கீழ் மக்களிடமிருந்து எந்த டெபாசிட்களையும் பெற கூடாது என்று தடை விதித்ததை மீறி மக்களிடம் டெபாசிட்களை பெற்றது. இதன் மூலம் 2015ல் இந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்பட்டு டெபாசிட் தொகையை திரும்ப செலுத்த உத்தரவிட்டது நீதிமன்றம்.

இதேபோல் நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சஹாரா இந்தியா ரியல் எஸ்டேட் கார்ப்பரேஷன் (SIREC) மற்றும் சஹாரா ஹவுசிங் இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் (SHIC) ஆகிய இரண்டு நிறுவனங்கள், 2008 முதல் 2011 வரையிலான காலத்தில் முழுமையாக மாற்றக்கூடிய கடனீட்டுப் பத்திரங்களை (OFCD) வழங்கியதன் மூலம் சுமார் 3 கோடி முதலீட்டாளர்களிடமிருந்து 17,656 கோடி ரூபாய்க்கு அதிகமான பணத்தை விதிமுறைகளை மீறி பொது சந்தையில் வெளியிடாமல் தனிப்பட்ட முறையில் பணத்தை வசூலித்துள்ளது. இந்த பணத்தையும் வருடம் 15 சதவீதம் வட்டியுடன் முதலீட்டாளர்களுக்கு திருப்பி செலுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
சஹாரா குழும நிறுவனங்கள் முறையற்ற வகையில் திரட்டப்பட்ட பணத்தை முதலீட்டாளர்களுக்கு திருப்பி அளிக்க அரசு தரப்பில் Sebi-Sahara Refund என்ற பெயரில் தனியாக ஒரு கணக்கு திறக்கப்பட்டது. ஜூலை மாதத்தில் இருந்து அரசு முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கும் பணிகளை துவங்கியிருக்கும் வேளையில் மார்ச் 31, 2023 முடிவில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சஹாரா குழுமம் இந்த சிறப்பு கணக்கில் 25,163 கோடி ரூபாய் டெபாசிட் செய்துள்ளது.
இந்த நிலையில் செபி அமைப்பு சஹாரா குழுமம் தொடர்பாக 17,526 விண்ணப்பங்களுக்கு தொடர்புடைய 48,326 கணக்கின் உரிமையாளர்களுக்கு 138.07 கோடி ரூபாய் விநியோகம் செய்துள்ளது என்றும், இதில் சுமார் 67.98 கோடி ரூபாய் வட்டி தொகை மட்டுமே என்றும் செபி அமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மத்திய அரசு இதற்காக CRCS Sahara portal துவங்கிய நிலையில் 2023 ஆகஸ்ட் மாதத்தில் இருந்து ரீபண்ட் அளிக்கும் பணிகள் துவங்கப்பட்டு உள்ளது. இத்தளத்தின் துவக்க கட்டமாக 112 முதலீட்டாளர்களுக்கு தலா 10000 ரூபாய் ரீபண்ட் செய்யப்பட்டது.
Humara India Credit Cooperative Society Limited கொல்கத்தா, சஹாரா கடன் கூட்டுறவு சங்கம் லிமிடெட், லக்னோ, சஹாராயன் யுனிவர்சல் மல்டிபர்ப்பஸ் சொசைட்டி லிமிடெட், போபால், ஸ்டார்ஸ் பல்நோக்கு கூட்டுறவு சங்கம் லிமிடெட், ஹைதராபாத் ஆகிய 4 நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் CRCS Sahara portal-ல் பதிவு செய்து பணத்தை ரீபண்ட் பெறலாம். அனைத்து முதலீட்டாளர்களும் ஆன்லைன் வாயிலாக மட்டுமே பெற முடியும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications