ரூ.28 லட்சம் சம்பளம் தரும் வேலையை உதறி.. கோழி விற்பனையில் ரூ.1 கோடி சம்பாதிக்கும் சாய்கேஷ் கவுட்

கடினமாக உழைத்தால் தொழிலில் முன்னேறிவிடலாம் என்பது உண்மை தான். ஆனால் கடின உழைப்போடு வித்தியாசமான முயற்சி இணைந்தால் நாம் ஜெட் வேகத்தில் தொழிலில் முன்னேறலாம். இதற்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்குபவர் சாய்கேஷ் கவுட்.

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற பெரிய கல்வி நிறுவனங்களில் படித்தால் பெரிய நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலையில் சேரலாம் என்று ஆசையில் தான் பலரும் அங்கு படிக்கின்றனர். அதேபோல் சாய்கேஷ் கவுட்டும் வாரணாசி ஐ.ஐ.டி.யில் மெக்கானிகள் என்ஜினீயரிங் படித்தார். வழக்கம் போல் படித்து முடித்தவுடன் வேலை தேட தொடங்கினார்.

ரூ.28 லட்சம்  சம்பளம் தரும் வேலையை உதறி.. கோழி விற்பனையில் ரூ.1 கோடி சம்பாதிக்கும் சாய்கேஷ் கவுட்

சாய்கேஷ் கவுட் ஒரு நிறுவனத்தில் ரூ.28 லட்சம் சம்பளத்தில் சாப்ட்வேர் நிபுணராக வேலைக்கு சேர்ந்தார். அதேசமயம், சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் இருந்து கொண்டே இருந்தது.

இதை தொடர்ந்து பணியில் சேர்ந்து சில வருடங்கள் பணியாற்றிய பின்பு சாய்கேஷ் தனது நண்பர்கள் ஹேமாம்பர் ரெட்டி மற்றும் முகமது சமி உதீன் ஆகியோருடன் இணைந்து Country Chicken co.என்ற நாட்டு கோழி வர்த்தக நிறுவனத்தை தொடங்கினார். கோழி மற்றும் இறைச்சி வணிகம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை பற்றிய ஆழமான புரிதல் இருந்ததன் காரணமாக அவர்கள் மூவரும் இணைந்து கடினமாக உழைத்தனர்.

தங்களது நாட்டு கோழி வர்த்தகத்தை பார்த்து பலர் சிரித்தாலும், நண்பர்கள் மூவரும் ஒரே வருடத்துக்குள் தொழிலை உச்சத்துக்கு கொண்டு சென்றார்கள். சாய்கேஷ் மற்றும் அவரது நண்பர்களும் இந்தியாவின் முதல் நாட்டுக் கோழி ரெஸ்ட்ராண்ட்களை ஹைதராபாத்தை சுற்றியுள்ள குகட்பல்லி மற்றும் பிரகதி நகர் ஆகிய இடங்களில் தொடங்கினர். இந்த ரெஸ்ட்ராண்ட்களில் 70 பேர் வரை பணியாற்றினர்.

சாய்கேஷின் Country Chicken co.நிறுவனம் தென் மாநிலங்களில் 15 ஆயிரம் கோழிப் பண்ணையாளர்களுடன் வர்த்தக தொடர்பை ஏற்படுத்தியது. விவசாயிகளிடம் இருந்து நாட்டுக்கோழி குஞ்சுகளை நல்ல விலைக்கு அவர்கள் வாங்கி வருகின்றனர்.

விவசாயிகளிடம் இருந்து நாட்டுக் கோழியை வாங்குவதோடு மட்டுமில்லாமல், கோழிகளுக்கு ஆரோக்கியமான உணவை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அவர்களுக்கு Country Chicken நிறுவனம் கற்பிக்க தொடங்கியது.

இதனால் சாய்கேஷ் மற்றும் அவரது நண்பர்களும் கோழிகளின் தரத்தை உறுதி செய்து சுவையான கோழியை வழங்கி வருகின்றனர். கடந்த 2022-23ம் நிதியாண்டில் Country Chicken நிறுவனத்தின் வருவாய் ரூ.5 கோடியாகும்.

2022 ஜனவரி முதல் 2023 ஏப்ரல் வரையிலான காலத்தில் Country Chicken நிறுவனத்தின் மாத வருவாய் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.1.2 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டில் Country Chicken நிறுவனம் ரூ.50 கோடி வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+