கடந்த சில தினங்களாக சமூக வலைதளங்களில் பிரபல பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் பெயர் பரவலாக அடிப்பட்டு வருகிறது. இப்போது எந்தவொரு பேட்மின்டன் போட்டித் தொடரும் நடைபெறவில்லை அப்புறம் எப்படி அவர் பெயர் அடிபடுகிறது என்ற சந்தேகம் எல்லோருக்கும் எழும்.
அது சரிதான். அவர் வாங்கிய ஒரு சொகுசு பொருள்தான் அவரை மீண்டும் ஊடக வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. சாய்னா நேவால் ரூ.1.8 கோடி மதிப்பிலான மெர்சிடிஸ் காரை வாங்கியதுதான் பலரது புருவத்தையும் தூக்க வைத்துள்ளது.

சாய்னா நேவால் ரூ.1.8 கோடி மதிப்பிலான புதிய மெர்சிடிஸ் AMG GLE53 4MATIC+ Coupe sports காரை வாங்கியுள்ளார். கார் டெலிவரி படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சாய்னா நேவால் ரூ.1.8 கோடியில் கார் வாங்கிய தகவல் மின்னல் வேகத்தில் சமூக வலைதளங்கள் வாயிலாக பரவியது.
பிரபலங்கள் மத்தியில் பிரபலமான சில சொகுசு கார்களில் இந்த மாடல் காரும் ஒன்றாகும். முன்னாள் உலக அழகியும் பாலிவுட் நடிகையுமான சுஷ்மிதா சென் அண்மையில் மெர்சிடிஸ் எஸ்.யு.வி. காரை வாங்கி இருந்தார்.
மெர்சிடிஸ் AMG GLE53 4MATIC+ Coupe sports காரில் பல சிறப்பம்சங்கள் உள்ளன. இந்த காரானது3.0 லிட்டர் ஆறு சிலிண்டர் இன்லைன் டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் மைல்ட-என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 435 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும்.
இந்த கார் மணிக்கு 249 கி.மீ. என்ற வரையறுக்கப்பட்ட அதிகபட்ச வேகத்தை கொண்டுள்ளது.5.3 வினாடிகளில் 0லிருந்து 100 கி.மீட்டர் வேகத்தை எட்டும். மேலும் இரட்டை 12.3 இன்ச் டிஸ்ப்ளே, பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பல சிறப்பம்சங்கள் உள்ளன.
இந்தியாவின் பிரபலமான பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால். 2012ல் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்.2018ல் சக பேட்மின்டன் வீரர்பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் கொண்டார். அதன் பிறகும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
இருப்பினும், தொடர்ச்சியான முழங்கால் பிரச்சினை உள்பட பல காயங்களால் முன்பு மாதிரி சிறப்பாக விளையாட முடியவில்லை. பேட்மின்டன் தர வரிசையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளார். பத்ம மற்றும் அர்ஜூனா விருதுகளை பெற்றவர். 2020ல் யாரும் எதிர்பாராத வண்ணம் பா.ஜ.க.வில் அவர் இணைந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications