சேலத்தில்.. கமிஷன் ஆசை காட்டி கல்லூரி மாணவர்களிடம் நூதன மோசடி! மோசடிக்காரர்களின் புதிய யுக்தி அம்பலம்!

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களை குறிவைத்து நூதன மோசடி ஒன்று அரங்கேறியுள்ளது. வேலையே செய்யாமல் சிரமமின்றி பணம் சம்பாதிக்கலாம் என்று கூறி மாணவர்களிடம் மோசடிக்காரர்கள் ஆசை வார்த்தை காண்பித்துள்ளனர். இதை நம்பி மாணவர்களும் தங்களுடைய அடையாள ஆவணங்களை கொடுத்துள்ளனர். இதுவே இந்த மோசடி அரங்கேறியதற்கு காரணமாக அமைந்தது.

மோசடி எப்படி நடந்தது?: தற்போது சேலம் மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் 45 வயதான கே. கண்ணகி மற்றும் அவருடன் செயல்பட்ட 36 வயதான முத்துக்குமரனை கைது செய்துள்ளனர். கண்ணகி கல்லூரி மாணவர்களை அணுகி தான் ஒரு அறக்கட்டளை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார். அறக்கட்டளைக்காக சிலர் பணம் அனுப்புவார்கள். அந்தப் பணத்தை உங்கள் வங்கி கணக்கில் பெற்றுக் கொண்டு நான் சொல்லும் வங்கி கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளார். இப்படி செய்பவர்களுக்கு கமிஷனாக ரூ.1,000 வழங்கப்படும் என்றும் ஆசை வார்த்தை காண்பித்துள்ளார்.

சேலத்தில்.. கமிஷன் ஆசை காட்டி கல்லூரி மாணவர்களிடம் நூதன மோசடி! மோசடிக்காரர்களின் புதிய யுக்தி அம்பலம்!

இதை உண்மை என நம்பிய மாணவர்களும் கண்ணகியின் அறிவுறுத்தலின் பேரில் ரூ.1 லட்சத்தை தங்கள் வங்கி கணக்கில் பெற்று அதை மற்றொரு வங்கி கணக்கிற்கு மாற்றியுள்ளனர். இதற்காக மாணவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு, பான் கார்டு போன்ற அடையாள ஆவணங்களையும் பகிர்ந்துள்ளனர். சில நாட்களுக்குப் பிறகு எந்த வங்கியில் இருந்து ரூ.1 லட்சம் பெறப்பட்டதோ அந்த வங்கியில் இருந்து மாணவர்களுக்கு நோட்டீஸ் வந்துள்ளது. அதில் மாணவர்களின் பேரில் "கேட்டில் லோன்" என்று சொல்லப்படுகிற கால்நடை கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஈஎம்ஐ தவணையை உடனடியாக செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

Also Read

நோட்டீசை பார்த்த மாணவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. அப்போது சம்பந்தப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர்கள் மாணவர்களை மிரட்டியுள்ளனர். காவல்துறையினர் இந்த மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பணத்தை அக்கவுண்டுக்கு அனுப்பிய வங்கி அதிகாரிகளுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதற்காகத்தான் ஆள் பேர் தெரியாத நபர்களிடம் நம்முடைய அடையாள ஆவணங்களை பகிரக்கூடாது என்று சொல்லப்படுகிறது. இந்த மோசடியில் மோசடிக்காரர்கள் மாணவர்களின் அடையாள ஆவணங்களை கொடுத்து லோன் பெற்றுள்ளனர். இதுபோன்ற லோனுக்கு கையெழுத்து எதுவும் தேவையில்லை. அடையாள ஆவணங்களை வழங்கினால் போதுமானது. அடையாள ஆவணங்களை பகிரும் போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மேலும் கடன் வழங்கும் நிறுவனங்களும் வெறும் ஆவணச் சேகரிப்போடு நிற்காமல் வாடிக்கையாளருக்கு சம்மதமா? என்பதை ஒரு முறை தொலைபேசி மூலம் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இப்படி செய்வதால் உண்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன் கிடைக்கும். இது போன்ற மோசடிகளும் பெரும் அளவில் தவிர்க்கப்படும். உங்களுக்கும் இது போன்ற மோசடி நடக்காமல் இருக்க ஐந்து முக்கிய விஷயங்களை செய்ய வேண்டும்.

ஆதார் அல்லது வங்கி விவரங்களைப் பகிர வேண்டாம்: எளிதாக பணம் கிடைக்கிறது என்பதற்காக உங்களுடைய அடையாள ஆவணங்களான ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி கணக்கு விபரங்கள், ஓடிபி, ஏடிஎம் பின், டெபிட் கிரெடிட் கார்டு சிவிவி நம்பர் போன்றவற்றை ஒருபோதும் பகிரக்கூடாது.

தெரியாத அக்கவுண்டுக்கு பணப்பரிமாற்றம் செய்யாதீர்கள்: பணத்தைப் பெற்று அதை வேறொரு வங்கி கணக்கிற்கு மாற்றி விட்டால் கமிஷன் கிடைக்கும் என்று யாராவது சொன்னால்.. அதை நம்ப வேண்டாம். இதனால் நீங்கள் மோசடியில் சிக்குவதுடன் சட்டவிரோத பண பரிமாற்றத்திற்கு ஒரு காரணமாக மாறிவிடுவீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.

அக்ரிமெண்டில் கையெழுத்து போடுவதற்கு முன்பு அதை தெளிவாக படிக்கவும்: எந்த அக்ரிமெண்டாக இருந்தாலும் அதில் கையெழுத்து போடுவதற்கு முன்பு அதை கவனமாக படியுங்கள். வெற்று படிவங்களில் கையெழுத்து போடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனை குறித்து புகார் அளிக்கவும்: உங்கள் வங்கி கணக்கை பயன்படுத்தி சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனையில் நடந்திருந்தால் அது குறித்து உடனடியாக காவல்துறைக்கு புகார் அளிக்க வேண்டும்.

கடன் சலுகைகளை சரிபார்க்கவும்: இன்றெல்லாம் வங்கிகள் கடன் தேவையா என்று போன் போட்டு கேட்கின்றனர். இதை அப்படியே நம்பாமல் உண்மையிலேயே வங்கியில் இருந்து தான் கால் வந்ததா என்பதை தெரிந்து கொள்ளுங்கள் அல்லது நேரடியாக வங்கி கிளைக்கு சென்றும் கேட்டுக் கொள்ளலாம், சில பொது துறை வங்கிகளில் இருந்தும் பர்சனல் லோன் வேண்டுமா என்று கால் வருகிறது, எனவே வங்கிகளை நம்பி கடன் பெறலாம். ஆனால் அறக்கட்டளைகள் அல்லது தெரியாத நிறுவனங்களின் பிரதிநிதிகள் என கூறிக்கொண்டு கடன் வேண்டுமா என்று கேட்டால் அந்த தொடர்பை துண்டித்து விடுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+