புதிய இந்து சம்வத் 2081 ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று, இந்தியப் பங்குச் சந்தை நல்ல தொடக்கத்தைக் கண்டது. சென்செக்ஸ் குறியீடு 335 புள்ளிகள் உயர்ந்து 79,724 புள்ளிகளாகவும், நிஃப்டி 99 புள்ளிகள் உயர்ந்து 24,304 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது.
நிஃப்டி வங்கி குறியீடு 197 புள்ளிகள் உயர்ந்து 51,673 புள்ளிகளாகவும், மிட்கேப் இன்டெக்ஸ் 376 புள்ளிகள் உயர்ந்து 56,489 புள்ளிகளாகவும் முடிவடைந்தது முதலீட்டாளர்கள் புதிய சம்வத் 2081 ஆம் ஆண்டிற்கு நல்ல துவக்கத்தைக் கொடுத்து ஊக்குவித்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் அடங்கிய பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆரம்பம் முதல் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து தொடர்ந்து 3 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியில் இருந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 3.29 சதவீதம் உயர்ந்து 2817 ரூபாய் அளவில் முடிந்தது.
மஹிந்திராவுக்கு அத்தப்படியாக அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ் ஆகியவை தலா 1 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி, நெஸ்லே, என்டிபிசி, கோட்டாக் மஹிந்திரா வங்கி, டைட்டன், டாடா ஸ்டீல் ஆகியவை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இதேபோல் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி (0.04%), டெக் மஹிந்திரா (0.33%), ஹெச்சிஎல் டெக் (0.55%) ஆகியவை சிறிய அளவிலான சரிவை பதிவு செய்துள்ளது.
நிஃப்டி குறியீட்டில் 100, 200, 500, மிட்கேப், ஸ்மால்கேப், லார்ஜ் கேப், மைக்ரோ கேப் என அனைத்து குறியீடுகளும் உயர்வுடன் முடிந்துள்ளது. துறை வாரியாக பார்க்கும் போது ஆட்டோமொபைல் குறியீடு 1.24 சதவீதம் வரையில் உயர்ந்துள்ளது.
இன்று நாட்டின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் மாதாந்திர விற்பனை விவரங்களை வெளியிட்டதைத் தொடர்ந்து, ஆட்டோமொபைல் பங்குகள் பெரும்பாலும் உயர்வுடன் முடிவடைந்தன. இதில் முக்கியமாக மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, இந்த வருடத்திலேயே அதிகப்படியான வாகனங்களை விற்பனை செய்து மாதாந்திர விற்பனையைப் பதிவு செய்த பிறகு, நிஃப்டி குறியீட்டிலும், சென்செக்ஸ் குறியீட்டிலும் அதிக லாபம் பெற்ற நிறுவனமாகத் திகழ்கிறது.
ONGC, அடானி போர்ட்ஸ், BEL, டாடா மோட்டார்ஸ் மற்றும் டைட்டன் ஆகியவை நிஃப்டியின் அதிகம் லாபம் பெற்ற நிறுவனங்களாக உள்ளது. NCC, RBL, Vi, PNB, NBCC, Aarti Ind ஆகியவை நிஃப்டி குறியீட்டின் அதிகம் இழப்பை சந்தித்த நிறுவனங்களாக உள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சுந்தரராமன் ராமமூர்த்தி, முதலீட்டாளர்களுக்கு சம்வத் 2081 ஆண்டு ஆரோக்கியமான வருமானத்தைத் தரும் என்று எதிர்பார்ப்பதாக கூறுகிறார்.
More From GoodReturns

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!



Click it and Unblock the Notifications