உலகளவில் மிகவும் பிரபலமான பாஸ்ட்புட் உணவு செயின் நிறுவனமான சப்வே விற்பனை செய்யப்பட்டு உள்ளது, இந்தியாவில் இருக்கும் சப்வே வர்த்தகத்தை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்குவதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மொத்த வர்த்தகமும் விற்பனை செய்யப்பட்டு உள்ளது.
சப்வே நிறுவனம் Roark Capital என்னும் தனியார் பங்கு முதலீட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது. Roark Capital நிறுவனத்திற்கு ஏற்கனவே உணவகம் மற்றும் உணவு நிர்வாக துறையில் அனுபவம் கொண்டு இருக்கும் காரணத்தால் புதிய நிர்வாகத்தின் கீழ் சப்வே சாண்ட்விச் செயின் வேகமாக வரிவாக்கம் செய்யப்படுவது மட்டும் அல்லாமல் தொடர்ந்து மேம்படுத்தப்படும்.

இந்த வாரத்தின் துவக்கத்தில் இதுக்குறித்த தகவல்கள் வெளியானாலும் உறுதியான அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை, இந்த நிலையில் அமெரிக்காவின் பிரபலமான வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை சப்வே சாண்ட்விச் செயின் பிராண்டை அட்லாண்டா-வை தலைமையிடமாக கொண்டு இயங்கும் Roark Capital சுமார் 9.6 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கியிருக்க கூடும் என தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் சப்வே சாண்ட்விச் நிறுவனத்தின் சிஇஓ ஆக சேர்ந்த ஜான் சின்சி கூறுகையில் Roark Capital நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலம் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சி அடித்தளமிட்டு உள்ளதாக தெரிவித்துள்ளார். சப்வே நிறுவனம் உணவகங்களை மார்டனாக மாற்றவும், வெளிநாட்டுகளில் பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டு இருந்தது, இதை Roark Capital உடன் இணைந்து செய்யப்பட உள்ளது.
மேலும் Roark Capital கைப்பற்றலுக்கு பின்பும் சப்வே சாண்ட்விச் நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகத்தில் எவ்விதமான பெரிய மாற்றமும் இருக்காது என கூறப்படுகிறது. Roark Capital சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்பிலான தனியார் பங்கு முதலீட்டு நிறுவனமாகும், இதன் கீழ் 2 ஹோல்டிங் கம்பெனி உள்ளது அதன் கீழ் பல்வேறு பாஸ்ட்புட் மற்றும் ரெஸ்டாரென்ட் வர்த்தகம் உள்ளது.
1965 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட சப்வே சாண்ட்விச் நிறுவன இன்னும் அதன் நிறுவனர்கள் குடும்பத்தின் கையில் தான், சுமார் 100 நாடுகளில் 37000 கிளைகள் உடன் இயங்கி வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications