கொரோனா காலத்தில் மக்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட வர்த்தகம் செய்யப்பட்ட பொருட்களில் ஒன்றான சாநிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் மூலப்பொருட்களைத் தவறான பிரிவில் பட்டியலிட்டு வரி விதிப்பில் இருந்து தப்பித்து வரி ஏய்ப்புச் செய்து வருவதாகக் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.
இதனால் சரக்கு மற்றும் சேவை வரித்துறை தற்போது சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் அனைத்தையும் கண்காணிப்பு கீழ் வைத்துள்ளது.
சரி என்ன தான் பிரச்சனை..?
சானிடைசர் மீதான வரிப் பிரச்சனை
தற்போது சானிடைசர்-ஐ மெடிகாமென்ட்ஸ் பிரிவில் சேர்ந்து 12 சதவீதம் ஜிஎஸ்டி வரியின் கீழ் சேர்ப்பதா, இல்லை டிஸ்இன்பெக்டன்ட் பிரிவில் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டி கீழ் சேர்ப்பதா என்பது தான் முக்கியக் கேள்வியாக விளங்குகிறது.
18 சதவீதம் ஜிஎஸ்டி
பார்மா நிறுவனங்கள் அனைத்தும் சானிடைசர்-ஐ மெடிகாமென்ட்ஸ் என அறிவித்து அதற்கான வரியைச் செலுத்தி வருகிறது, ஆனால் வரித் துறை சானிடைசர்-ஐ டிஸ்இன்பெக்டன்ட் பிரிவில் சேர்த்து 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க வேண்டும் எனக் கூறுகிறது.
DGGI அமைப்பு
இதற்காகத் தற்போது மறைமுக வருமான வரித் துறையின் விசாரணை பிரிவான பொது ஜிஎஸ்டி இன்டலிஜென்ஸ் தலைமை இப்பிரச்சனையைக் களைய புதிய விசாரணையைத் துவங்கியுள்ளது. இதோடு சானிடைசர் தயாரிக்கும் பல நிறுவனங்களுக்கு நோட்டீஸ்-ம் DGGI அமைப்பு அனுப்பியுள்ளது.
குஜராத் மற்றும் மகாராஷ்டிரா
மேலும் DGGI அமைப்பு குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் இருக்கும் 100க்கும் மேற்பட்ட சானிடைசர் தயாரிக்கும் நிறுவனங்களைத் தனது கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளது.
பார்மா நிறுவனங்கள்
கொரோனா-வுக்கு எதிரான போராட்டத்தில் சானிடைசர் மிகவும் முக்கியப் பங்கு வகிக்கும் காரணத்தாலும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் இது மிகவும் முக்கியமானதாகவும் இருக்கும் காரணத்தாலும் பார்மா நிறுவனங்கள் சானிடைசர்-ஐ மெடிகாமென்ட்ஸ் பிரிவில் சேர்ந்து 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி மட்டுமே விதிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து இதற்காக வழக்கும் தொடுத்து வருகிறது.


Click it and Unblock the Notifications