பெரிய அளவில் முதலீடு செய்ய தேவையில்லை என்றாலும் விவசாயம் மிகவும் ரிஸ்க்கான தொழில். மழை அதிகம் பெய்தாலும் சிக்கல், குறைவாக பெய்தாலும் கஷ்டம்தான். மகாராஷ்டிரா மாநிலத்தில் மராத்வாடாவில் தொடர்ச்சியான வறட்சி மற்றும் குறைந்த பயிர் விளைச்சல் ஆகியவற்றால் ஏற்படும் சவால்களை சமாளிக்க ஏழ்மையான விவசாயிகள், அங்கு சிப்பி முத்துக்கள் வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு ஆரம்பமாக இருந்தவர் சஞ்சய் நர்சிங் பவார். இவர் மருத்துவ ஆய்வக தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படித்தவர். படிப்பு முடிந்தவுடன் ஆய்வக உதவியாளராக பகுதி நேர வேலை செய்து வந்தார்.

அதேசமயம் பரம்பரை பரம்பரையாக பாரம்பரிய பயிர்களை பயிரிட்டு வருவதால் விவசாயம் அவருக்கு இயற்கையாகவே கை வந்த கலையாக இருந்தது. இருப்பினும் விவசாயம் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் லாபம் தரவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு, பாசன நோக்கங்களுக்காக ஒரு ஏக்கர் நிலத்தில் நீர் குட்டையை உருவாக்கினார்.
2020ம் ஆண்டில் நீர் குட்டையை பயன்படுத்த மீன் வளர்ப்புக்கு திரும்பினார். ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. மீன் வளர்ப்பில் அதிக மூலதன செலவுகள் செய்ய வேண்டும் என்பதால் சொற்பமான லாபமே கிடைத்தது அதனால் மீன் வளர்ப்பை கை விட்டார்.
இந்த சூழ்நிலையில சிப்பி முத்து வளர்ப்பில நல்ல லாபம் கிடைக்கும் என்பதை சஞ்சய் அறிந்தார். இதனையடுத்து 2022ல் சஞ்சய் தனது கிராமத்திலிருந்து 1,400 கி.மீ. தொலைவில் உள்ள புவனேஸ்வருக்கு சென்று சிப்பி முத்து வளர்ப்பு குறித்து முறையான பயிற்சி பெற்றார்.
ஒடிசாவில் உள்ள நன்னீர் மீன் வளர்ப்புக்கான மத்திய அரசு நிறுவனத்தில் ஏழு நாள் பயிற்சியில் கலந்து கொண்டார். மூலப்பொருளை எவ்வாறு பெறுவது, சிப்பிகளை எவ்வாறு அணுக்கருவாக்கம் செய்வது, சிப்பிகளுக்கு என்ன உணவு வழங்குவது, அதன் வாழ்க்கை சுழற்சி உள்ளிட்ட விஷயங்களை அவர் அங்கு கற்றுக் கொண்டார்.
இது அவருக்கு சிப்பி சாகுபடி செய்வோம் என்ற உந்துதலை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தனது நீர் குட்டையில் பயிரிடுவதற்காக 25,000 சிப்பிகளை வாங்கினார். இதற்காக அவர் தனது விவசாய நண்பர்களையும் இணைத்துக் கொண்டார். இவர்கள் ரூ.20 லட்சம் கூட்டு முதலீட்டில் சிப்பி வளர்ப்பை தொடங்கினர்.
ஒரு வருடத்தில் 8,000 முத்துக்களை விற்று ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டினர். இவர்களின் வெற்றியை பார்த்த சுமார் 40 விவசாயிகள் சஞ்சய் மற்றும் அவரது கூட்டுறவு நிறுவனமான 'Bless All Pearl Farmer Producer Company’உடன் இணைந்தனர்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து 50,000 சிப்பிகளை பயிரிட்டனர். சோலாப்பூரின் ஜிகேபி பேர்ல் பார்ம் மற்றும் சந்திராபூரில் உள்ள நமோ பேர்ல் பார்ம் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்தனர். சஞ்சயின் கூட்டுறவு நிறுவனம் தனது இரண்டாவது தொகுதியை எதிர்வரும டிசம்பரில் அறுவடை செய்ய உள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications