தங்கம் மற்றும் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் இருவரும் ஒரே மாதிரியான வெற்றி பாதையில் சென்று கொண்டிருக்கின்றனர். இருவருக்கும் பொதுவானது 'கன்வெக்ஸ்' (convex) வெற்றி.
அதாவது, பல ஆண்டுகள் சாதாரணமாகவோ அல்லது மெதுவாகவோ இருந்து, திடீரென ஒரு காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவது தான் 'கன்வெக்ஸ்' வெற்றி . இது முதலீட்டாளர்களுக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும் எப்போதும் உத்வேகத்தையும், நம்பிக்கையையும் கொடுக்கும் ஒரு விஷயம்.

2026 டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இந்த வரலாற்று போட்டியை கோடிக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் மிட்செல் சாண்ட்னர் தயக்கமின்றி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இரு அணிகளும் வலிமையான அணியாக இருப்பதால், இன்றைய ஆட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன்
2026 டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் தனது ஆட்டத்தால் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 50 பந்துகளில் 97 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்துக்கு எதிராக 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்தார். இதனால் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறி இன்று நியூசிலாந்து அணியை எதிர்கொண்டு இருக்கிறது.
சஞ்சு சாம்சன் முன்பு அணியின் விளிம்பிலும், பென்ச்-ல் உட்காரவைக்கப்பட்டவர், இப்போது அணியின் முதுகெலும்பாக மாறியுள்ளார். இது ஒரு சாதாரண வெற்றி அல்ல - நீண்ட காலம் காத்திருந்த பிறகு வந்த பெரிய திருப்பம்.
இன்றும் சஞ்சு சாம்சன் 22 பந்துகளில் 38 ரன்களை எடுத்துள்ளார்.

தங்கம் விலை
தங்கம் விலையும் அதே போன்ற பாதையை கடந்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில் சாதாரணமாகவே இருந்தது. ஆனால் 2024-ல் 27 சதவீதம், 2025-ல் 64-65 சதவீதம் உயர்ந்தது. 2026 ஆரம்பத்தில் 19-20 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்து $5,000 ஒரு அவுன்ஸ் தாண்டியுள்ளது.
முன்பு 'சாதாரண பாதுகாப்பு முதலீடு' என்று பார்க்கப்பட்ட தங்கம், இப்போது போர்ட்ஃபோலியோவில் மிக முக்கியமான சொத்தாக மாறியுள்ளது.
தங்கம் சனிக்கிழமை வர்த்தக முடிவில் 22 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை 15,050 ரூபாயாக உள்ளது. 24 கேரட் தங்கம் விலை 16,418 ரூபாயாக உள்ளது.
இதுதான் 'கன்வெக்ஸ்' வெற்றி
சஞ்சு சாம்சனும் தங்கமும் ஒரே மாதிரியான வெற்றி முறையைக் கொண்டுள்ளன. பல ஆண்டுகள் சாதாரணமாக இருந்து, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மிகப்பெரிய வெற்றியை அடைவது. இதுவே 'கன்வெக்ஸ்' வெற்றி. இது முதலீட்டாளர்களுக்கு முக்கிய பாடம்.
ஒரே சொத்தில் முதலீடு செய்வது மூலம் வெற்றி பெற முடியாது. இதேபோல் ஒரு அணியில் ஓரே விளையாட்டு வீரரை நம்பியிருந்தால் வெற்றிப்பெற முடியாது. பல்வேறு வீரர்கள் அல்லது பல்வேறு சொத்துகளை உங்கள் போட்போலியோவில் வைத்திருப்பது அவசியம். யாராவது ஒருவர் திடீரென வெற்றி பெறலாம். அதுவே அணி அல்லது போர்ட்ஃபோலியோவின் லாபத்தை பெற வழிவகுக்கும்.
முதலீட்டாளர்களுக்கு நல்ல பாடம்
ஒரு சொத்தில் அல்லது ஒரு வீரரில் எல்லாம் வெற்றி பெற முடியாது. பல்வேறு சாத்தியக்கூறுகளை வைத்திருப்பது அவசியம். சஞ்சு சாம்சன் போல் யாராவது ஒருவர் திடீரென வெற்றி பெறலாம். தங்கம் போல் ஒரு சொத்து திடீரென உயரலாம். இது அணி மற்றும் போர்ட்ஃபோலியோவின் லாபத்தை பல மடங்கு உயர்த்தும்.
இந்த இறுதிப்போட்டி இரு அணிகளுக்கும் மிக முக்கியமானது. இந்தியா தனது டி20 உலகக் கோப்பை கனவை நிறைவேற்ற முயல்கிறது. நியூசிலாந்து தனது வலிமையை மீண்டும் நிரூபிக்க போராடி வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் இன்று நடக்கும் இந்த மோதல் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களின் கண்களை ஈர்க்கும்.


Click it and Unblock the Notifications