காளான் பலருக்கும் பிடித்தமான உணவுகளில் ஒன்றாக விளங்குகிறது. அசைவ உணவுக்கு ஈடான சுவையுடன், சைவ உணவு தயாரிப்பதில் காளான் முதல் இடத்தில் உள்ளது. மக்கள் விரும்பி சாப்பிடுவதால் காளான் வளர்ப்பில் பெரிய வர்ததக வாய்ப்பு குவிந்து கிடக்கிறது.
காளான் வளர்ப்பு தொழிலுக்கு பெரிய முதலீடு தேவையில்லை. குறைந்த முதலீட்டில் நல்ல லாபம் சம்பாதிக்கலாம். ஒடிசாவை சேர்ந்த சந்தோஷ் மிஸ்ரா காளான் வளர்ப்பின் மூலம் லட்சாதிபதியாகி விட்டார்.

ஒடிசா மாநிலத்தின் பூரி மாவட்டத்தில் உள் பிபிலி தாலுகாவில் உள்ள தண்டமுகந்தா பூர் என்ற கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் சந்தோஷ் மிஸ்ரா. புவனேஸ்வரில் உள்ள பி.ஜே.பி. கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார்.
படிப்பில் சிறந்து விளங்கிய போதிலும், கடுமையான பொருளாதாதர நெருக்கடிகள் அவரது மேற்படிப்புக்கு தடையாக விழுந்தன. மேற்படிப்பிற்கான வசதி இல்லாததால், 1989ல் புவனேஸ்வரில் உள்ள ஒடிசா வேளாண்மை மற்றும தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் காளான் வளர்ப்பு பயிற்சி திட்டத்தில் கலந்து கொண்டார்.
பல ஆண்டுகளில் கஷ்டப்பட்டு ரூ.36 சேமித்து வைத்திருந்தார். அந்த பணத்தை முதலீடாக போட்டு காளான் வளர்ப்பில் இறங்கினார். காளான் தொழில்முனைவோரின் தொழில்நுட்ப தீவிர தன்மையை புரிந்து கொண்ட சந்தோஷ், அதிக ஈரப்பதம், பூஞ்சை மாசுபாடு மற்றும் போதிய வெளிச்சமின்மை போன்ற காளான் வளர்ப்பில் உள்ள ஆரம்ப சவால்களை சரி செய்வதற்கு OUAT விஞ்ஞானிகளிடமிருந்து வழிகாட்டுதல்களை கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து தனது அப்பாவிடம் கடன் வாங்கி வீட்டு கொட்டகையில் காளான் வளர்ப்பை 100 படுக்கைகளாக விரிவுப்படுத்தினார். 1989 மே மாதத்தில் எதிபாராத விதமாக 150 கிலோ காளான்களை அறுவடை செய்தார்.
உற்பத்தியில் சாதித்த போதிலும் அதனை விற்பனை செய்வதில் அவர் ஆரம்பகால சவால்களை சந்தித்தார். 5.2 கிலோ சிப்பி காளான்களை ரூ.120க்கு தனது கல்லூரிக்கு அருகில் உள்ள கார்ப்பரேஷ் அலுவலகங்களுக்கு விற்பனை செய்தார். இப்படித்தான் அவர் தொழில்முனைவோர் பயணம் ஆரம்பமானது.
இது அவருக்கு புது உற்சாகத்தை கொடுத்தது. அந்த உத்வேகத்தில் கடன் உள்பட ரூ.60,000 முதலீடு செய்து 3,000 படுக்கைகளாக விரிவுப்படுத்தினார். 1990களில் அவரது தினசரி வருமானம் ரூ.2,500ஐ தாண்டியது, அவருக்கு காளான் கோடீஸ்வரர் அந்தஸ்தை கொடுத்தது.
ஒடிசா, மேற்கு வங்கம், சத்தீஸகர், அசாம் மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் இருந்து வருவோரின் காளான் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அவர் தனது கிராமத்தில் கலிங்க காளான் மையம் என்ற ஒரு விதை உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தை நிறுவினார். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட தனிநபர்களுக்கு குறிப்பாக பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பின்னணியில் உள்ளவர்களுக்கு இலவசமாக காளான் வளர்ப்பு பயிற்சி அளித்துள்ளார்.
மேலும் சந்தோஷ் மிஸ்ரா நடத்திய கட்டண பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு 9 லட்சத்துக்கும் அதிகமானோர் பயன் அடைந்துள்ளனர். கலிங்க காளான் மையம் தினமும் 2,000 பாட்டில்கள் காளான் விதைகள் தயாரிப்பதில் ஈடுபட்டுள்ளது. தற்போது காளான் மாவு, ஊறுகாய், தின்பண்டங்கள் மற்றும் பல்வேறு பொருட்களை தயாரிப்பதற்காக ரூ.2 கோடி மதிப்பில் உணவு பதப்படுத்தும் ஆலையை நிறுவும் பணியில் சந்தோஷ் மிஸ்ரா ஈடுபட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications