சவுதி அரேபியா என்றாலே அனைவரின் நினைவிக்கு வருவது கச்சா எண்ணெய் தான், உலகிலேயே மிகப்பெரிய கச்சா எண்ணெய் வளம் கொண்ட நாடு சவுதி. MBS தலைமையிலான சவுதி தனது வர்த்தகம், பொருளாதாரம், கலாச்சாரத்தில் பல மாற்றங்களை கொண்டு வரும் வேளையில், கச்சா எண்ணெய்யை மட்டுமே நம்பியிருக்க கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்கும் சவுதி சமீபத்தில் சுரங்க துறையில் அதிகப்படியான கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் சுரங்க வரலாற்றில் மிகப்பெரிய அளவிலான தங்க வளம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. கச்சா எண்ணெய் வளம் மிகுந்த நாட்டில் தற்போது உலோகம் உற்பத்தி முக்கியமானதாக மாறியுள்ளது.

சவுதி அரேபியாவில் சமீபத்தில் செய்யப்பட்ட சுரங்க பணிகளுக்கான ஆய்வில் அந்நாட்டின் நான்கு இடங்களில் மொத்தம் 78 லட்சம் அவுன்ஸ் அதாவது சுமார் 242.6 டன் தங்க வளம் கண்டறியப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் அரபியன் ஷீல்ட் பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத அதிகப்படியான கனிம வளமாகும்.
மாடென் (Maaden) என்ற அரசு ஆதரவு சுரங்க நிறுவனம் செய்த ஆய்வில் தங்கம் வளம் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. நாடு முழுவதும் இயங்கும் சுரங்கங்கள், ஆரம்ப நிலை திட்டங்கள் மற்றும் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள் என பல இடங்களில் கனிமவள இருப்பை கண்டுப்பிடிக்க விரிவான துளையிடல் பணிகள் நடத்தப்பட்டன. ஜனவரி 12, 2026 அன்று இந்த கண்டுபிடிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மாடென் நிறுவனம் செய்த இந்த ஆய்வில், ஆரம்ப துளையிடல் மூலம் 90 லட்சம் அவுன்ஸுக்கும் மேல் தங்க வளம் அடையாளம் காணப்பட்டது. ஆனால் தரநிலை சரிபார்ப்பு, செலவு மற்றும் பொருள் விலை அனுமானங்கள் உள்ளிட்டவை கணக்கிடப்பட்ட பிறகு, சுமார் 78 லட்சம் அவுன்ஸ் தங்க வளம் இருப்பதாகவும், இதை சவுதி அரேபியாவின் மொத்த தங்க வளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஜபல் ஷைபான் மற்றும் ஜபல் அல் வகில் ஆகிய பகுதிகளில் செய்யப்பட்ட துளையிடல் மூலம் தாமிரம், நிக்கல் மற்றும் பிளாட்டினம் உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவை பெரிய அளவிலான கனிம இருப்புகள் இருப்பதை காட்டுவதாகவும் மாடென் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கண்டுபிடிப்பு சவுதி அரேபியாவின் பொருளாதார பல்வகைப்படுத்தல் திட்டத்திற்கு மிகப்பெரிய வாய்ப்பாக அமைகிறது. கச்சா எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்திலிருந்து விலகி சுரங்கம், தொழில்துறை மற்றும் சுற்றுலா போன்ற துறைகளை வளர்க்கும் விஷன் 2030 திட்டத்தின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.
மேலும் தங்கம், வெள்ளி, காப்பர், பிளாட்டினம் என பலதரப்பட்ட உலோகங்களின் விலை அதிகரித்து வருவது மூலம் தற்போது சவுதி அரேபியா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளில் கனிமவள இருப்புகளை கண்டு பிடிப்பதற்கான ஆய்வு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளது.

தங்க விலைக்கு இதன் மூலம் பாதிப்பா..?
உலக அளவில் தங்க விலை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது - புவிசார் பதற்றங்கள், பணவீக்கம், அமெரிக்க டாலர் மதிப்பு, மத்திய வங்கிகளின் கொள்கைகள், தங்க கையிருப்பு ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளது. சவுதி அரேபியாவின் இந்த புதிய கண்டுபிடிப்பு நீண்டகாலத்தில் தங்க விநியோகத்தை அதிகரிக்க வாய்ப்புள்ளது, இதனால் சப்ளை உறுதி செய்யப்படும் வாய்ப்பு உள்ளது, மேலும் டிமாண்ட் மூலம் விலை உயர்வை கட்டுப்படுத்தப்படும். ஆனால் இது உடனடியாக சந்தையை பாதிக்காது.
தங்க சுரங்கம் தொடங்கி உற்பத்தி வரை பல ஆண்டுகள் ஆகும். இந்த 78 லட்சம் அவுன்ஸ் வளம் முழுமையாக சுரக்கப்படுவதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் ஆகலாம். எனவே குறுகிய காலத்தில் (1-3 ஆண்டுகள்) தங்க விலைக்கு பெரிய தாக்கம் இதன் மூலம் ஏற்பட வாய்ப்பில்லை. மாறாக, உலகளாவிய தேவை அதிகரித்தால் அல்லது புவிசார் பதற்றங்கள் தொடர்ந்தால் விலை உயரும் வாய்ப்பே அதிகம்.
இருப்பினும், நீண்டகாலத்தில் (2030-க்கு பிறகு) சவுதி அரேபியா உலக தங்க உற்பத்தியில் முக்கிய நாடாக உருவெடுக்கலாம். இது உலக சந்தையில் சவுதி அரேபியாவின் பங்கை அதிகரிக்கும். மேலும், தாமிரம், நிக்கல், பிளாட்டினம் போன்ற பிற கனிமங்களும் முக்கிய இடம் வகிக்கும்.
More From GoodReturns

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

வெனிசுலாவில் கிடைத்த தங்க புதையல்!! 1000 கிலோ தங்கம்னா சும்மாவா!! நினைத்ததை சாதித்த டிரம்ப்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று என்ன நிலவரம்? நிபுணர்கள் சொல்வது என்ன? இது தான் நல்ல சான்ஸ்..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம், வெள்ளி விலை 3-8% சரியும் அபாயம்.. ஈரான் - அமெரிக்கா போருக்கு மத்தியில் திடீர் திருப்பம்..!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலை தடாலடியாக ரூ.6000 உயர்வு.. MCX சந்தையில் நடப்பது என்ன..?

ஈரான் போர்: ஞாயிற்றுக்கிழமையிலும் உயர்த்தப்பட்ட தங்கம் விலை!! இனி தங்கம் விலையை கையில பிடிக்க முடியாது!!



Click it and Unblock the Notifications