எஸ்.பி.ஐயின் வாராக்கடன் ரூ.1.63 லட்சம் கோடி.. காரணம் இவர்கள் தான்..!

மும்பை: நாட்டின் முன்னணி கடன் வழங்குனரான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, கடன் வழங்குவதில் மட்டும் அல்ல வாராக்கடன் அதிகரிப்பிலும் முதலாவதாக உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் எஸ்.பி.ஐயின் வாராக்கடன் அளவு 1.63 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக சில தனியார் நிறுவனங்கள் தாங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்தவில்லை என்றும், இதன் கடன் தொகையே கணிசமான அளவு வாராக்கடனாக அதிகரித்து உள்ளது என்றும் இந்த வங்கி தெரிவித்துள்ளது.

சில தனியார் நிறுவனங்கள் அடக்கம்

சில தனியார் நிறுவனங்கள் அடக்கம்

அலோக் இண்டஸ்ட்ரீஸ். டாடா ஸ்டீல் பி.எஸ்.எல் (பூஷன் ஸ்டீல்), எலக்ட்ரோஸ்டீல், எஸ்.கே.எஸ் பவர் ஜெனரேஷன் ,அற்றும் அபான் ஹோல்டிங்க்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்கள் தான் இந்த வாரக்கடன் தள்ளுபடி செய்யப்பட்ட முதல் பத்து கடனாளிகள் ஆகும். இந்த முதல் பத்து நிறுவனங்களின் மொத்த கடன் தொகை அளவு 20,000 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எஸ்.பி.ஐயின் வாராக்கடன்

எஸ்.பி.ஐயின் வாராக்கடன்

இது தவிர ஏபிஜி ஷிப்யார்ட், டெக்ரோ சிஸ்டம்ஸ், கார்ப்பரேட் பவர் லிமிடெட், மோனட் இஸ்பாட் & எனர்ஜி, ரோஹித் ஃபெரோ லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் எஸ்.பி.ஐயின் மொத்தம் வாராக்கடன்களின் விகிதம் 1,63,934 கோடி ரூபாயாகும். இந்த தொகையில் பெரும்பகுதி கடந்த இரண்டு ஆண்டுகளில் எழுதப்பட்டது என்றும் கூறப்படுகிறது.

திவால் சட்டமும் ஒரு வகையில் காரணம்

திவால் சட்டமும் ஒரு வகையில் காரணம்

வங்கிகளின் இழப்புக்கு ஒரு வகையில் திவால் சட்டமும் காரணம் என்று அண்மையில் ஒர் அறிக்கையில் கூறப்பட்ட்டுள்ளது. காரணம் நலிவடைந்த நிறுவனங்கள் தங்களை சீரமைத்துக் கொள்வதற்காக திட்டத்தை வங்கிகளுக்கு அளிக்க திவால் சட்டத்தில் வழியில்லாமல் உள்ளது. திவாலை நோக்கி தள்ளப்பட்ட நலிவடைந்த நிறுவனத்தை, வெளியேறச் செய்வதே இதன் பெரும் இழப்பீட்டுக்கு காரணமாக அமைக்கிறது என்றும் கூறப்படுகிறது.

நஷ்டம் அதிகரிப்பு

நஷ்டம் அதிகரிப்பு

மேலும் இந்த திவால் நிலைக்கு தள்ளப்பட்ட நிறுவனத்திற்கும் இதன் மூலம் பெரும் நஷ்டம், இதனால் பல வேலையிழப்பு போன்றவற்றை திவால் சட்டம் ஏற்படுத்துவதாகவும் கூறப்பட்டது. திவால் நிறுவனத்தை போட்டி நிறுவனங்கள் குறைந்த விலையில் கையகப்படுத்துகின்றன. இதனால் வங்கிகளுக்கு கிடைக்க வேண்டிய சரியான தொகையும் கிடைப்பதில்லை. இதனால் வங்கிகளுக்கு வாராக்கடன் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அதிகளவில் திவால் நிலைக்கு தள்ளப்படுகின்றன

அதிகளவில் திவால் நிலைக்கு தள்ளப்படுகின்றன

இந்த டாப் 10 நிறுவனங்களில் எஸ்.கே.எஸ் பவர் ஜெனரேஷன் நிறுவனத்தின் விஷயத்தில் வங்கி ஒரு முறை தீர்வை கண்டதாகவும்,மீதமுள்ள நிறுவனங்கள் திவால் நடவடிக்கைக்கு தள்ளபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு திவால் நிலைக்கு அதிகமான வழக்குகள் தள்ளப்படுவதால், வாராக்கடன்களின் அளவு அதிகரிக்கும்.

யார் யார் எவ்வளவு வாராக்கடன்?

யார் யார் எவ்வளவு வாராக்கடன்?

இதில் கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக்கடன் 99,838 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும், இதை தொடர்ந்து விவசாயக்கடன் 27,577 கோடி ரூபாயாகவும், சிறு குறு மற்ற்ய்ன் நடுத்தர நிறுவனங்களின் வாராக்கடன் 25,205 கோடி ரூபாயாகவும், இதுவே தனி நபர் கடன் 7,142 கோடி ரூபாயாகவும் உள்ளது. இது தவிர சர்வதேச அளவில் 1,874 கோடி ரூபாய் வாராக்கடனாக உள்ளது.

நிலுவையில் உள்ள வழக்குகள்

நிலுவையில் உள்ள வழக்குகள்

தற்போதைய காலத்தில் அதிகளவிலான நிறுவனங்கள் திவால் நிலைக்கு தள்ளப்படுவதால் வாராக்கடனும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த செப்டம்பர் 2019ன் படி 541 வழக்குகள் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 1.16 லட்சம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+