டெல்லி: வழக்கமாக இந்திய பொருளாதாரம் பற்றியும், அவற்றை எப்படி சீரமைக்கலாம் என்பது பற்றியும் பலர் தங்களது கருத்துக்களை கூறி வந்தாலும், நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்குனரான எஸ்பிஐ சொல்வது சற்று யோசிக்க வேண்டிய விஷயமாகத் தான் இருக்கும்.
இந்த நிலையில் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார், இந்தியாவின் பொருளாதார இலக்கான 5 டிரில்லியன் டாலரினை அடைய வேண்டுமானால், அடுத்த ஐந்து ஆண்டுளுக்கு கடன் வளர்ச்சியை இரு மடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக சொல்லப்போனால் இந்திய வங்கிகள் சங்கத்தின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட குழு விவாதித்தில் பேசிய அவர், மத்திய அரசின் பொருளாதார இலக்கினை அடைய கடன் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும்
அதிலும் தற்போதைய கடன் நிலுவை தொகையான 95 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் இதை இரட்டிப்பாக்க வேண்டும் என்றும் குமார் தெரிவித்துள்ளார். இதே இது குறித்து பேசிய யூனியன் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக தலைவருமான ஜி ராஜ்கிரன் ராய், 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்பது ஆண்டுக்கு சராசரியாக 15% கடன் வளர்ச்சியைக் குறிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
வங்கித்துறையை மேம்படுத்த வேண்டும்
மேலும் குறைந்த தேவை மற்றும் பயன்பாட்டு திறன், சொத்து தர சிக்கல்கள் காரணமாக தற்போது கடன் வளர்ச்சியானது போராடி வருகிறது. வங்கித் தொழிலை மேம்படுத்த தொழில் நுட்பத்தை பயன்படுத்துவதன் மூலம் மேம்படுத்த முடியும். அதே நேரத்தில் 15% கடன் இலக்கினை அடைய உள்கட்டமைப்பு நிதியானது முக்கிய பங்கு வகிக்கும் என்றும் ராய் தெரிவித்துள்ளார்.
கடன் வளர்ச்சி
நாட்டில் அதிக கடன் வளர்ச்சியானது கடந்த 2005 -2008 காலகட்டத்தில் இருந்தது. ஆக கடந்த காலங்களில் இந்த உயர் வகையாக கடன் வளர்ச்சியை அடைந்துள்ளோம். ஆக அதை எங்களால் மீண்டும் அடைய முடியும் என்றும் குமார் தெரிவித்துள்ளார். எனினும் இந்த வளர்ச்சியை அடைய வங்கிதாரர்களுக்கு இன்னும் பல நிபந்தனைகள் உள்ளன என்றும் குமார் கூறியுள்ளார்.
என்ன நிபந்தனை?
வங்கிகள் கடன் வளர்ச்சியை ஊக்குவிக்கவும், லாபம் ஈட்டவும், மூலதனத்தின் அளவு, நிர்வாகத்தில் முன்னேற்றம், கடன் வழங்கும் வரம்பு, அதில் உள்ள சிக்கல்கள், கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் எஸ்பிஐ தலைவர் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைப்பு உதவும்
இதே பொதுத்துறை வங்கிகளில் பெரிய வங்கிகளை உருவாக்க, பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவு 5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்திற்கு பங்களிக்க உதவும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியும், நிர்வாக தலைவருமான சி.ஹெச்.எஸ்.எஸ் மல்லிகார்ஜூன் ராவ் தெரிவித்துள்ளார்.
திவால் நடவடிக்கை
இதே இந்திய வங்கிகள் சங்கத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுனில் மேத்தா திவால் சட்டம், கடன் சந்தையில் ஒரு புதிய கலாச்சாரத்தையும் ஒழுக்கத்தையும் உருவாக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதே சிண்டிகேட் வங்கியின் நிர்வாக தலைவரும் தலைமை செயல் அதிகாரியுமான மிருதுஞ்சய் மகாபத்ரா வங்கியில் தொழில்நுட்பத்தின் பங்கு குறித்து பேசியுள்ளார். மேலும் டிஜிட்டல் வங்கிகள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் உலகளவில் ஒரு அடிப்படை சுகாதாரமாக மாறிவிட்டன என்றும் கூறியுள்ளார்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications