கடன் கொடுக்க நாங்க ரெடியாதான் இருக்கோம்.. வாங்கத்தான் ஆளைக் காணோம்.. எஸ்பிஐ கவலை!

பிரதமர் மோடியின் 5 டிரில்லியன் டாலர் இலக்கை அடைய, முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். முதலீடுகள் இல்லாவிட்டால் பொருளாதார இலக்கை அடைவது சாத்தியமில்லை என்று எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார்.

அதுவும் தற்போதைய பொருளாதார நிலையில் முதலீடுகளை அதிகாரிக்காவிட்டால், இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக அதிகரிப்பது கஷ்டம் தான் என எஸ்பிஐ தலைவர் கூறியுள்ளார்.

இதற்காக தொழில்துறை தலைவர்களை முதலீட்டை உயர்த்துவதற்காக, கடன் வாங்கும் திறனை வளர்த்துக் கொள்ளுங்கள் என்றும் ரஜ்னிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

கடன் தேவை இல்லை

கடன் தேவை இல்லை

அதிலும் தற்போதுள்ள நிலையில் நிதிக்கு பஞ்சமில்லை. அதிலும் தற்போதுள்ள நிலையிலிருந்து வங்கிகள் மார்ச் இறுதிக்குள் இன்னும் சிறந்த நிலைக்கு தள்ளப்படும் என்றும் குமார் தெரிவித்துள்ளார். மேலும் தொழில் துறையிலிருந்து போதுமான கடன் தேவை இல்லாததால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தனது கடன் தடை வரம்புகளை குறைத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

முதலீடுகளை அதிகரிக்க வேண்டும்

இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய வேண்டுமானால், பொருளாதாரத்தில் முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். அது சாத்தியமாகவிட்டால் அது சாத்தியமில்லை. இன்றைய நிலுவையில் உள்ள வங்கிகளின் நிலுவைக் கடன் 96 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார். ஆக நாம் 5 டிரில்லியன் டாலர் இலக்கினை அடைய கடனை இருமடங்காக அதிகரிக்க வேண்டும் என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

வங்கிகளுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு

வங்கிகளுக்கு இது மிகச் சிறந்த வாய்ப்பு

FICCI-ன் 92-வது மாநாட்டில் பேசிய ரஜ்னிஷ் குமார், இது வங்கிகளுக்கு சிறந்த வணிக வாய்ப்பு. மேலும் தற்போது 30 சதவிகிதமாக இருக்கும் மொத்த மூலதன விகிதம் குறைந்தது 37 - 38 சதவிகிதமாக உயர வேண்டும் என்றும் குமார் தெரிவித்துள்ளார். தற்போது வங்கி முறையுடன் போதுமான அளவு நிதி கிடைப்பதாக குமார் கூறியுள்ளார். ஆனால் போதுமான திட்டங்கள் தான் இருப்பதாக தெரியவில்லை. நாங்கள் தான் மிகப்பெரிய திட்டங்களின், மிகப்பெரிய நிதியாளர். எங்களிடம் மிகப்பெரிய குழு உள்ளது. ஆனால் தற்போது அது பயன்பாட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

நிதி வழங்கல்

நிதி வழங்கல்

கடந்த ஆண்டு நாங்கள் மிகப்பெரிய இரண்டு கடன் திட்டங்களை மட்டுமே முடித்தோம். ஒன்று ராஜஸ்தானில். உள்ள ஹிந்துஸ்தான் ரீபைனரி திட்டத்திற்காக 50,000 கோடி ரூபாயாகும். இதே மும்பை நாக்பூர் சூப்பர் கம்யூனிகேஷன் எக்ஸ்பிரஸ்வே திட்டத்திற்கு 50,000 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதில் பாதி அளவு பணம் வங்கியாளர்களிடம் இருந்து தான் வந்தது என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

கடன் கொடுக்க திட்டங்கள் இல்லை

கடன் கொடுக்க திட்டங்கள் இல்லை

இன்றைய நாளில் நிதி தேவையானது 2,000 - 2,500 கோடி ரூபாய்க்கு மேல் என்னிடம் நிதி தேவை என்னிடம் இல்லை. ஆக நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன். திட்டங்கள் இல்லையென்றால் நான் எப்படி கடன் கொடுப்பேன். யாருக்கு கடன் கொடுப்பது என்றும் தொழிலதிபர்களுடன் கலந்து கொண்ட மாநாட்டில் குமார் தெரிவித்துள்ளார்.

கடன் வரம்பு

கடன் வரம்பு

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் தற்போது லோன் வரம்புகள் 8 லட்சம் கோடி ரூபாய் வரை உள்ளன. ஆனால் தற்போது வங்கியில் 5 - 5.6 லட்சம் கோடிகள் மட்டுமே உபயோகப்படுத்தப்படுகின்றது என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளார். மேலும் தொழில் துறையில் வங்கிகள் கடன் கொடுக்க மறுக்கின்றன என்றும் கூறுகிறார்கள். ஆனால் வங்கிகள் நாங்கள் நிதியுடன் தயாராக இருக்கிறோம். ஆனால் கடன் வாங்கத்தான் ஆளில்லை என்றும் கூறுகின்றன என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

வாராக்கடனில் எச்சரிக்கை

வாராக்கடனில் எச்சரிக்கை

வங்கிகள் முன்பை விட தற்போது வாரக்கடன் மற்றும் பணப்புழக்கம் குறித்து எச்சரிக்கையாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுவும் முன்பை விட கூடுதலாகவும் எச்சரிக்கையுடனும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் தற்போதுள்ள நிலைமை காரணமாக பிரச்சனைகள் அதிகரித்திருப்பதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.

திவால் சட்டம் குறித்து கருத்து

திவால் சட்டம் குறித்து கருத்து

சமீபத்திய எஸ்ஸார் ஸ்டீல் குறித்த சமீபத்திய சீர்திருத்தங்கள் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும். இது திவால் சட்டம் மற்றும் தற்போதைய சூழ்நிலையில் திவால் நிலைக் குறியீடு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதிலும் பல பெரிய டிக்கெட்கள் அழுதப்பட்ட சொத்துகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. இதனால் பெரும்பாலான வங்கிகளை பொருத்தவரை நாங்கள் வரும் மார்சுக்குள் நன்றாக இருக்கப் போகிறோம். அங்கு குறைந்தபட்ச வாரக்கடன் விகிதம் மற்றும் செயல்படாத சொத்துகளின் மதிப்பும் குறைய வாய்ப்பிருப்பதாகவும் குமார் தெரிவித்துள்ளார்.

தேவை குறைவு

தேவை குறைவு

உள்கட்டமைப்பு மற்றும் நுகர்வோர் கடன் அளவு குறைவாக உள்ளதாகவும் குமார் தெரிவித்துள்ளார். ஆனால் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் நாங்கள் வீட்டுக் கடன் துறையில் நாங்கள் 16 சதவிகிதமாக வளர்ந்து வருகிறது. இதே சம்பளத்துக்கு எதிரான கடன் வளர்ச்சிகள் 25 சதவிகிதமாக வளர்ந்து வருகின்றன என்றும் குமார் தெரிவித்துள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+