இந்தியாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக வங்கியில் இருந்து பேசுவதாக பொதுமக்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு otp உள்ளிட்டவற்றை பெற்று அவர்களின் கணக்கிலிருந்து பணத்தை திருடுவது என பல்வேறு மோசடிகள் நாட்டில் நடக்கின்றன. இதனை தடுப்பதற்காக வங்கிகள் தரப்பிலும் தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் தான் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு முக்கியமான அறிவிப்பை அனுப்பியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் +91-1600 என்ற எண்ணில் தொடங்கக்கூடிய தொலைபேசி எண்கள் வழியாக மட்டுமே எஸ்பிஐ நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் தொடர்பு கொள்ளும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வேறு எண்களிலிருந்து யாரேனும் தொடர்பு கொண்டு எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக கூறினால் அது மோசடி மற்றும் போலியான அழைப்பு என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என எஸ்பிஐ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

+91-1600 என்ற எண்ணில் தொடங்கக்கூடிய தொலைபேசி எண்ணில் இருந்து அழைப்பு வந்து வங்கியிடம் இருந்து பேசுவதாக கூறினால் நீங்கள் அச்சப்பட வேண்டாம். எஸ்பிஐ இந்த எண்களில் தொடங்கக்கூடிய தொலைபேசி எண் வாயிலாக மட்டுமே வாடிக்கையாளரை தொடர்பு கொள்வோம் என கூறப்பட்டிருக்கிறது. மேலும் சேவை சம்பந்தப்பட்ட அழைப்புகளுக்காக மட்டுமே இந்த எண்கள் பயன்படுத்தப்படும் என்றும் உங்களின் ஓடிபி, ஏடிஎம் பின் உள்ளிட்டவற்றை ஒருபோதும் தொலைபேசி வாயிலாக எஸ்பிஐ நிறுவனம் கோராது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
ஜனவரி மாதம் இந்திய ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்வதற்கு "1600xx என்ற எண்ணில் தொடங்கக்கூடிய தொலைபேசி எண்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவித்திருந்தது . மேலும் மார்க்கெட்டிங் மற்றும் பிரமோஷனல் கால்களுக்கு "140xx" என தொடங்கும் எண்களில் இருந்து மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலம் அழைப்பு வரும்போது அந்த தொலைபேசி எண்ணை கொண்டே மக்கள் இது மோசடி அழைப்பா அல்லது உண்மையாகவே வங்கியில் இருந்து தான் பேசுகிறார்களா என்பதை கண்டுபிடித்துக் கொள்ள முடியும் என ரிசர்வ் வங்கி தெரிவித்தது .
இதனை அடுத்து தான் எஸ்பிஐ நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிற. தொடர்பாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் உங்களின் பாதுகாப்பே முக்கியமானது என குறிப்பிட்டு இருக்கிறது. சைபர் குற்றங்களிலிருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு இருக்கும் எஸ்பிஐ வங்கி எந்தெந்த எண்களெல்லாம் எஸ்பிஐ நிறுவனத்தின் தொலைபேசி எண்கள் என்ற விவரத்தையும் வெளியிட்டு உள்ளது.
1600-01-8000
1600-01-8003
1600-01-8006
1600-11-7012
1600-11-7015
1600-01-8001
1600-01-8004
1600-01-8007
1600-11-7013
1600-00-1351
1600-01-8002
1600-01-8005
1600-11-7011
1600-01-7014
1600-10-0021
மேலே கூறிய எண்கள் மட்டுமே எஸ்பிஐ வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ள பயன்படுத்தும் எண்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications