இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செயல்படுகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருக்கிறார்கள். ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு பண பரிவர்த்தனை தொடர்பான மிக முக்கியமான ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறது.
நம்முடைய வங்கி கணக்கிலிருந்து மற்ற வங்கி கணக்கிற்கு பணம் அனுப்புவதற்கு இந்தியாவில் பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் ஐஎம்பிஎஸ் (IMPS) எனப்படும் immediate payment service அதாவது நாம் பணம் அனுப்பிய உடனே நம்முடைய கணக்கிலிருந்து சம்பந்தப்பட்ட நபரின் கணக்குக்கு பணமானது சென்றுவிடும். இதுவே neft முறை என்றால் ஒரு மணி நேரத்திலிருந்து 2 மணி நேரம் வரை நேரம் எடுத்துக் கொள்ளும்.

உடனடியாக வங்கி கணக்கிலிருந்து இன்னொரு வங்கி கணக்கு பணம் அனுப்புவதற்கு ஐஎம்பிஎஸ் சேவையை நாம் பயன்படுத்துகிறோம். தற்போது எஸ்பிஐ வங்கியில் ஆன்லைன் வழியாக ஐஎம்பிஎஸ் சேவை பயன்படுத்துபவர்களுக்கு எந்த ஒரு சர்வீஸ் கட்டணமும் வசூல் செய்யப்படுவது கிடையாது. ஆனால் பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து ஐஎம்பிஎஸ் சேவைகளுக்கு கட்டணம் வசூல் செய்யப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்திருக்கிறது.
எஸ்பிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி ஆன்லைனில் ஐஎம்பிஎஸ் பரிவர்த்தனை முறையில் 25,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு எந்த ஒரு சேவை கட்டணமும் வசூல் செய்யப்படாது. ஆனால் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ஐஎம்பிஎஸ் முறையில் பணம் அனுப்பும்போது சேவை கட்டணம் செலுத்த வேண்டி இருக்குமாம். 25,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை ஐஎம்பிஎஸ் முறையில் நீங்கள் அனுப்பும் போது 2 ரூபாயும் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும்.
அதேபோல 1 லட்சம் ரூபாயிலிருந்து 2 லட்சம் ரூபாய் வரையிலான பரிவர்த்தனைக்கு ஆறு ரூபாய் கட்டணமும் அத்துடன் சேர்த்து ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும். 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாய் வரையிலான பணத்தை ஐஎம்பிஎஸ் முறையில் அனுப்பும்போது 10 ரூபாய் கட்டணமும் ஜிஎஸ்டியும் வசூல் செய்யப்படும் என எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.
எனவே ஐஎம்பிஎஸ் முறையில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நீங்கள் பணத்தை அனுப்பும் போது அதற்கு கட்டணம் செலுத்தியாக வேண்டும். பிப்ரவரி 15ஆம் தேதியிலிருந்து இது நடைமுறைக்கு வருகிறது. இது டிஜிட்டல் பிளாட்பார்ம் வழியாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். நீங்கள் வங்கி கிளைக்கு சென்று ஐஎம்பிஎஸ் முறையில் பணம் அனுப்பினால் தற்போது உள்ள நடைமுறையே நீடிக்கும்.
அதே வேளையில் சம்பள கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இந்த ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் பொருந்தாது என்றும் ஒரு நாளைக்கு ஒரு நபர் ஐஎம்பிஎஸ் வழியாக 5 லட்சம் ரூபாய் வரை அனுப்ப முடியும் என்றும் எஸ்பிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications