ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அதிகரித்து வரும் அதிநவீன டீப்பேக் மோசடி வீடியோக்கள் குறித்த எச்சரிக்கை பதிவை X தளத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோக்கள் சமீப காலமாக அதிக அளவில் பரவி வருகின்றன. அந்த வீடியோவில் இந்திய அரசாங்கம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுடன் இணைந்து எஸ்பிஐ, AI மூலம் இயங்கும் முதலீட்டு தளத்தை உருவாக்கியுள்ளதாகவும், இதில் முதலீடு செய்தால் அதிக வருமானம் பெறலாம் என்றும் பொய்யாக பகிரப்பட்டுள்ளது.
வெளியான மோசடி வீடியோக்களில் எஸ்பிஐ, ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பத்தை கொண்டு இயங்கி வரும் முதலீட்டு தளம் ஒன்றை அறிமுகப்படுத்தியிருப்பதாகவும், இந்த தளம் எஸ்பிஐ பேங்க்-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றன.

SBI ஒரு நம்பகமான பொதுத்துறை வங்கி என்பதால் அதன் பெயரை பயன்படுத்தி தான் இந்த மோசடிக்கு நம்பகத்தன்மையை உருவாக்குகின்றனர். சில வீடியோக்களில் எஸ்பிஐ வங்கியின் லோகோக்கள் மற்றும் போலியான அறிக்கைகள் கூட இடம்பெறலாம். இதன் மூலம் உண்மையிலேயே, இது எஸ்பிஐ திட்டம் தான் என்று மக்கள் நம்புவார்கள்.
AI மோசடி எவ்வாறு செயல்படுகிறது?: டீப் ஃபேக் என்ற தொழில்நுட்பம் என்பது ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் டிப் லேர்னிங் போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு நபரின் உருவத்தை போலியாக உருவாக்கி, அவருக்கு குரல் கொடுத்து அவரே பேசுவது போல போலியான வீடியோக்களை உருவாக்கும் தொழில்நுட்பமாகும். ஏற்கனவே இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குறிப்பிட்ட நபரின் முகபாவனைகள், உதடு அசைவுகள் போன்றவற்றை வைத்து தத்ரூபமான வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
இதை தான் மோசடி செய்யவும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த போலி வீடியோக்களில் உயர் அதிகாரிகள் பேசுவது போலவும், மக்கள் இந்த திட்டங்களை உண்மையானவை என்று நம்பும் அளவிற்கு தத்ரூபமானதாகவும் காண்பிக்கின்றனர். வீடியோவில் குறுகிய காலத்தில் அதிக லாபம் கிடைக்கும் என்றும் வாக்குறுதி அளிக்கின்றனர். இதனால் பலர் ஆசைப்பட்டு உண்மைதன்மையை ஆராயாமல் முதலீடு செய்ய முன்வருகின்றனர்.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதுபோன்ற வீடியோக்கள் பகிரப்பட்டால்.. அதன் உண்மை தன்மையை ஆராய அதிகாரபூர்வ இணையதளத்தை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். அதேபோல இது போன்ற பதிவுகள் வெளியாகும்போது அருகில் உள்ள எஸ்பிஐ கிளைகளுக்கு சென்று தகவல்களைச் சரி பார்க்கலாம்.
X பதிவில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா இது போன்ற எந்த ஒரு முதலீட்டு திட்டத்தையும் எஸ்பிஐ உருவாக்கவில்லை என்றும், முதலீட்டு தொடர்பான எந்த ஒரு தளமும் எஸ்பிஐ-யால் அங்கீகரிக்கப்படவில்லை என்றும், இது போன்ற வீடியோக்கள் அனைத்தும் போலியானவை என்றும் அதிகாரபூர்வமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டு தளத்தை ஆதரிப்பது போன்ற டீப்பேக் வீடியோ இணையத்தில் பிரபலமானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications