டிரம்பின் பெயரை கொண்டு போலி செயலி.. ஏஐ மூலம் வீடியோ உருவாக்கி ரூ.1 கோடியை சுருட்டி சென்ற கும்பல்..

பெங்களூரு, கர்நாடகா: இந்தியாவில் சைபர் கிரைம் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றன. புதுப்புது வகைகளில் எல்லாம் மோசடியாளர்கள் சாமானிய மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக இந்த திட்டங்களில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும், ஒரு மாதத்திலேயே உங்களுடைய பணம் இரட்டிப்பாகும், இவ்வளவு முதலீடு செய்தால் மாதம்தோறும் இவ்வளவு தொகை உங்களுக்கு வருமானமாக வழங்கப்படும் என ஆசை வார்த்தைகளை கூறி சாதாரண மக்களின் பணங்களை பறித்து செல்கின்றனர். அப்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பெயரை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் ஒரு கும்பல் 150 பெயரிடமிருந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

டிரம்பின் பெயரை கொண்டு போலி செயலி.. ஏஐ மூலம் வீடியோ உருவாக்கி ரூ.1 கோடியை சுருட்டி சென்ற கும்பல்..

மோசடியாளர்கள் மக்களை ஏமாற்ற வேண்டும் என்பதற்காகவே அமெரிக்க அதிபர் டொனால்ட் பேசுவதைப் போல செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோக்களை பயன்படுத்தி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. டெக்கன் ஹெரால்டு நாளிதழில் வெளியாகி இருக்கக்கூடிய செய்தியின் படி கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சுமார் 150 பேரிடம் இந்த மோசடி கும்பல் ஒரு கோடி ரூபாய் வரை ஏமாற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது.

பலரும் தங்களுடைய பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு காவல் நிலையத்தில் தற்போது புகார் அளித்துள்ளனர். தமக்குரு மற்றும் மங்களூர் ஆகிய நகரங்களை சேர்ந்த மக்கள் இந்த மோசடியாளர்களிடம் சிக்கி தங்களுடைய பணத்தை இழந்துள்ளனர். டிரம்ப் ஹோட்டல் ரெண்டல் (Trump Hotel Rental) என்ற பெயரில் ஒரு செயலியை மோசடியாளர்கள் உருவாக்கியுள்ளனர். இந்த செயலி மூலம் மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு விண்ணப்பம் செய்யலாம் அதுமட்டுமின்றி தங்களுடைய பணத்தை முதலீடு செய்யலாம் என விளம்பரம் செய்திருக்கின்றனர்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த செயலிக்கு ஆதரவாக பேசுவது போலவும் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் என பேசுவது போலவும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஒரு வீடியோவை உருவாக்கி அதை வைத்து விளம்பரம் செய்திருக்கின்றனர். ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட வீடியோவை உண்மை என நம்பி ஏராளமான மக்கள் இதில் முதலீடு செய்து இருக்கின்றனர் .

குறிப்பாக ஹவேரி பகுதியில் மட்டும் சுமார் 15 பேர் இவ்வாறு ஏமாந்துள்ளனர் என ஹேவேரி பகுதிக்கான சைபர் குற்றப்பிரிவு காவல் ஆணையரான சிவசங்கர் கனாச்சாரி டெக்கன் ஹெரால்டுக்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அளித்துள்ள பேட்டியில் 1500 ரூபாய் கொடுத்து இந்த செயலியில் ஒரு கணக்கு உருவாக்க சொன்னார்கள் அவ்வாறு நான் செய்தேன் இதனை அடுத்து பல்வேறு நிறுவனங்கள் குறித்து கட்டுரைகளை எழுதி வழங்க சொன்னார்கள் நான் தந்தேன். இவ்வாறு நான் ஒவ்வொரு கட்டுரை எழுதும் போதும் என்னுடைய கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகையானது சேரும் அப்படி என்னுடைய கணக்கில் ஒரு லட்சம் ரூபாய் வரை சேர்ந்தது ஆனால் எனக்கு வரவேண்டிய தொகையை அவர்கள் வழங்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் பணத்தை இந்த செயலி வாயிலாக முதலீடு செய்யும்போது உங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான பணத்தை நாங்கள் திரும்ப தருகிறோம் என கூறினார்களாம், அந்த பணமும் எனக்கு வரவில்லை எனக் கூறியிருக்கிறார். இது தொடர்பாக கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் புகார் பதிவு செய்யப்பட்டு தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டிரம்பின் பெயரை கொண்டு போலி செயலி.. ஏஐ மூலம் வீடியோ உருவாக்கி ரூ.1 கோடியை சுருட்டி சென்ற கும்பல்..

2024 ஆம் ஆண்டில் மட்டும் மணி கண்ட்ரோல் தளம் நடத்திய ஆய்வு அடிப்படையில் பார்க்கும்போது இந்தியாவில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, அதாவது ஒவ்வொரு நிமிடத்திற்கும் இந்தியாவில் நான்கு சைபர் குற்றங்கள் பதிவாவது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் இந்தியாவில் சைபர் குற்றங்களின் மதிப்பு எண்ணிக்கை ஏழு மடங்கு உயர்ந்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில் 0.26 மில்லியனாக இருந்த சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 2022-23 ஆம் ஆண்டில் 1.5 மில்லியன் என உயர்ந்திருக்கிறது. இது போன்ற சைபர் குற்றங்களில் தப்பிப்பதற்கு மக்கள்தான் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என காவல்துறையினரும் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர்களும் தொடர்ந்து அறிவுறுத்திய வண்ணம் இருக்கின்றனர்.

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள் முதலீடு சம்பந்தப்பட்ட திட்டங்களில் சிக்கி தங்களுடைய பணத்தை பறி கொடுப்பது அதிகரித்து வருகிறது. காலம் மாற்றத்திற்கு ஏற்ப மோசடியாளர்கள் புதுப்புது செயலிகளை உருவாக்கி நீங்கள் பணம் கொடுத்தால் அதை நாங்கள் பங்குச்சந்தையில் முதலீடு செய்து உங்களுக்கு அதிக லாபம் தருகிறோம் என ஆசை வார்த்தைகளை கூறி மக்களை ஏமாற்றிய வண்ணம் இருக்கின்றனர். டெலிகிராம், வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகள் வாயிலாக குரூப்களை உருவாக்கி அதில் சாமானிய மக்களை சேர வைத்து தினம்தோறும் இந்த பங்கில் முதலீடு செய்தோம் எவ்வளவு லாபம் இன்று கிடைத்தது என்பன உள்ளிட்ட போலி செய்திகளை உள்ளீடு செய்து மக்கள் மனதில் ஆசைகளை விதைத்து முதலீடு செய்ய வைக்கின்றனர்.

ஒரு சிலர் போலியாக நிறுவனங்களையே அமைத்து உங்கள் பணத்தை எங்களிடம் தாருங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு மாதத்திற்கு ஏழு சதவீதம் வட்டி தருகிறோம் ஓராண்டில் உங்களுடைய பணத்தையும் திரும்ப தந்து விடுவோம் என்பன உள்ளிட்ட வார்த்தைகளை எல்லாம் கூறி விளம்பரம் செய்து பணத்தை பறிக்கின்றனர். 2018-19 ஆம் ஆண்டில் ஒரு சைபர் கிரைம் மோசடிக்கு 3.8 லட்சம் ரூபாயை மக்கள் இழந்து வந்த நிலையில் 2023- 24 ஆம் ஆண்டில் அது ஒரு மோசடிக்கு 5 லட்சம் ரூபாய் என அதிகரித்திருப்பதாக மணி கண்ட்ரோல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது.

இந்தியாவில் டிஜிட்டல் அரெஸ்ட் முறையில் பணம் பறிக்கும் சம்பவங்களும் தொடர்கின்றனர். உங்கள் பெயரில் பார்சல் வந்திருக்கிறது உங்கள் உங்களுடைய பெயரில் போதைப்பொருள் கடத்தப்படுகிறது உங்களை கைது செய்யப் போகிறோம் என ஆன்லைன் வாயிலாக அச்சுறுத்தி டிஜிட்டல் அரெஸ்ட் செய்து அவர்களின் வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை பறிக்கும் மோசடிகள் எல்லாம் தற்போது வேகமாக அரங்கேறி வருகின்றன.

இது போன்ற நிதி மோசடிகள் தொடர்பாக அரசு தரப்பிலும் காவல்துறை தரப்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மோசடியாளர்களுக்கு ஏஐ தொழில்நுட்பமும் சாதகமாக வந்துவிட்டது. போலி வீடியோக்களை உருவாக்கி மோசடி செய்கின்றனர். எனவே மக்கள் தான் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்படுகின்றனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+