பொதுவாக பெரிய தொழிலதிபர்களை குறித்து நாம் பேசும்போது அவருக்கு என்னப்பா கோடிக் கணக்கில் பணம் இருக்கு என்று சொல்வோம். ஆனால் அந்த பணத்தை சம்பாதிக்க எந்த அளவு கடினமாக உழைத்தார்கள், எவ்வளவு தடைகளை தாண்டி வந்தார்கள் என்பது நமக்கு தெரியாது.

அப்படிப்பட்ட தொழிலதிபர்களின் வாழ்க்கை வரலாற்றை நாம் படிக்கும் போது அது நமக்கு ஒரு உத்வேகம் அளிக்கும். அப்படி நமக்கு ஒரு உத்வேகம் அளிக்கக்கூடிய ஒரு தொழிலதிபர் தான் கைலாஷ் கட்கர்.
இன்று சைபர் செக்யூரிட்டி நிறுவனமான Quick Heal வாயிலாக ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் ஈட்டும் கைலாஷ் கட்கர் 9ம் வகுப்பை பாதியில் விட்டவர் மற்றும் வறுமையில் வாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவின் ரஹிமத்பூரில் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் கைலாஷ் கட்கர். இவர் படிப்பில் சராசரியான மாணவர் தான். கைலாஷ் கட்கர் 9ம் வகுப்பு படிக்கும்போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டதால் படிப்பை பாதியில் விட்டு விட்டார்.
படித்தவர்களே வேலைக்கு திண்டாடும் போது, 9ம் வகுப்பை பாதியில் நிறுத்தியவருக்கு என்ன வேலை கிடைக்கும்? வேலை தேடி தேடி அலைந்தார். ஆனாலும் அவர் மனம் தளரவில்லை, நம்பிக்கை இழக்கவில்லை. இறுதியில் ரூ.400 மாத சம்பளத்தில் ரேடியோ மற்றும் கால்குலேட்டர் பழுதுபார்க்கும் கடையில் வேலைக்கு சேர்ந்தார்.
கடையில் கிடைத்த அனுபவம் அவரை சொந்தமாக கடை திறக்க தூண்டியது. இதனையடுத்து 1991ல் புனேவில் ரூ.15 ஆயிரம் முதலீட்டில் சொந்தமாக கடையை திறந்தார்.
இந்த காலகட்டத்தில், கைலாஷ் கட்கரின் தம்பி சஞ்சய் கட்கர் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் கல்வியை தொடர சிரமப்பட்டார். ஆனால் நம்மால் தான் படிக்க முடியவில்லை தம்பியாவது நல்ல படிக்க வேண்டும் என்று, கைலாஷ் கட்கர் நான் பணம் தருகிறேன் நீ தொடர்ந்து படி என்று தம்பியிடம் வலியுறுத்தினார்.
சொன்னதோடு நிற்காமல், தம்பியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கான கட்டணமான ரூ.5 ஆயிரத்தையும் கைலாஷ் கட்கர் கொடுத்தார். கைலாஷ் கட்கர் தனது 22 வயதில் முதல் முறையாக கம்ப்யூட்டரை ஒரு வங்கியில் பார்த்தார். எதிர்காலம் கணினிகளால் ஆளப்படும் என்பதை கைலாஷ் அப்போதே கணித்தார். ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ஒரு கம்ப்யூட்டரை வாங்கினார்.
1993ல் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனமான கைலாஷ் சி.ஏ.டி. கம்ப்யூட்டர் சர்வீசஸ் நிறுவனத்தை தொடங்கினார். ரிப்பேருக்கு வந்த பெரும்பாலான கம்ப்யூட்டர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டவை என்பதை அவர் புரிந்து கொள்கிறார். இதனையடுத்து தனது தம்பி சஞ்சய் கட்கரிடம் வைரஸ் தடுப்பு துறையில் கவனம் செலுத்தும்படி கூறினார்.
கைலாஷ் மற்றும் சஞ்சய் கட்கர் இருவரும் ஆன்டி வைரஸை உருவாக்கி அதனை பாதிக்கப்பட்ட கம்ப்யூட்டர்களில் சோதனை செய்தனர். கட்கர் சகோதரர்களின் முயற்சி வெற்றியடைந்தது. இதனையடுத்து அவர்கள் ஹார்டுவேர் சர்வீசில் இருந்து ஆன்டி வைரஸ் சாப்ட்வேருக்கு மாற தொடங்கினர்.
1995ல் கட்கர் சகோதாரர்கள் தங்களது முதல் தயாரிப்பான Quick Heal-ஐ ரூ.700க்கு அறிமுகம் செய்தனர். இது அவர்களுக்கு ஏராளமான வர்த்தக வாய்ப்புகளை திறந்தது. அதனை கட்கர் சகோதரர்கள் கெட்டியாக பிடித்துக் கொண்டு வர்த்தகத்தில் அசுர வேகத்தில் வளர்ச்சி காண தொடங்கினர்.
அதேசமயம் சில கடினமாக நேரங்களை சந்தித்தார்கள் இருப்பினும் அவற்றை சமாளித்து தங்கள் தலைவிதியை மாற்றினார்கள். இன்று Quick Heal Technologies Ltd நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக கைலாஷ் கட்கரும், இணை நிர்வாக இயக்குனராக சஞ்சய் கட்கரும் உள்ளனர். 2023ம் நிலவரப்படி கைலாஷ் கட்கரின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.1.40 லட்சம் கோடி வருவாய் ஈட்டுகிறது.
Quick Heal நிறுவனம் 2010 இல் Sequoia Capital நிறுவனத்திடமிருந்து 60 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றது. முதலீட்டை பெற்ற கையோடு புதிய கிளை அலுவலகத்தை தமிழ்நாட்டின் மதுரையில் திறக்கப்பட்டது. இதை தொடர்ந்து 2012ல், ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன, 2013ல் ஆப்பிரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.
2016 ஆம் ஆண்டில், குயிக் ஹீல் டெக்னாலஜிஸ், செக்ரைட் சர்வீசஸ் என்ற நிறுவனத்தை தொடங்க, ஜுன்கோ டெக்னாலஜிஸ் என்ற ஐடி பாதுகாப்பு நிறுவனத்தை கைப்பற்றி விரிவாக்கம் செய்தது. குயிக் ஹீல் டெக்னாலஜிஸ் லிமிடெட் 2016ல் ஐபிஓ வெளியிட்டு BSE மற்றும் NSE இல் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்போது இந்நிறுவனத்தின் மதிப்பு 1,500 கோடி ரூபாயாக இருந்தது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications