இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபி யூடியூபர் ரவீந்திர பாலு பார்தி மற்றும் அவருடைய சொந்த நிறுவனமான ரவீந்திர பார்தி எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் ஆகியவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது. பதிவு செய்யாமல் முதலீட்டு ஆலோசனையை வழங்கியதற்காக ரவீந்திர பாலு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து செபி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதோடு 2025-ஆம் ஆண்டின் ஏப்ரல் 4-ஆம் தேதி வரை பங்குச்சந்தையில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சட்டவிரோதமாக ஈட்டிய ரூ. 9.5 கோடியை முதலீட்டாளர்களிடமே மீண்டும் திருப்பித் தரவும் அவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ரவீந்திர பாலு பார்தியும், அவருடைய நிறுவனமும் முதலீட்டு ஆலோசனைகள், பரிந்துரைகள் மற்றும் அனுபவமே இல்லாத முதலீட்டாளர்களை பங்குச்சந்தையில் ஈர்ப்பதற்காக பல்வேறு செயல்முறைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது செபியின் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவருடைய 2 யூடியூப் சேனல்களில் மொத்தமாக 19 லட்சம் சப்ஸ்கிரைபர்கள் இருக்கின்றனர். அதோடு இவருக்கு ஆன்லைன் ஃபாலோவர்ஸ்களும் அதிகம்.

பங்குச்சந்தை முதலீட்டுகளுக்கு உயர் வருமானம் தருவதாகக் கூறி பல்வேறு விளம்பரங்களை இந்நிறுவனம் செய்துள்ளது. ஆனால் பங்குச்சந்தை முதலீடுகளோடு தொடர்புடைய அபாயங்கள் குறித்து வெளிப்படுத்த தவறியதற்காகவும், செபியின் பதிவு இல்லாமல் இயங்கியதற்காகவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு யுக்திகளை கற்றுக் கொடுப்பது அவர்களை முடிவெடுக்க விடாமல் நிறுவனமே முடிவுகள் எடுப்பது போன்ற சூழ்ச்சி தந்திரங்களையும் கையாண்டதாக கூறப்படுகிறது.
விதிக்கப்பட்ட தண்டனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்ன?: முதலீட்டாளர்களுக்கு பணத்தைத் திருப்பிச் செலுத்தும் உத்தரவுக்கு கூடுதலாக செபி, ரவீந்திர பாலு பார்தி மற்றும் அவரது நிறுவனத்தின் கூட்டாளிகள் 2025-ஆம் ஆண்டு வரை எந்த ஒரு பங்குச்சந்தை நடவடிக்கைகளும் ஈடுபடக்கூடாது என்றும் தடை விதித்துள்ளது. முறையான செபி பதிவு இல்லாமல் முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்குவது சட்டப்படி குற்றமாகும். இதன் காரணமாக ரவீந்திர பாலு பார்தி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செபியின் இந்த நடவடிக்கை முறையான அங்கீகாரம் மற்றும் பதிவு இன்றி பங்கு சந்தையில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
செபி தொடர்ந்து இதுபோன்ற சட்டவிரோதமாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் மீது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முதலீடாளர்கள் அதுவும் குறிப்பாக இளம் முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை மீது உள்ள மோகத்தால் பதிவு செய்யப்படாத நிறுவனங்களை நம்பி பல லட்ச ரூபாயை இழக்கின்றனர். இதன் காரணமாகவே செபி இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!

3 வாரத்தில் சின்னாபின்னமான துபாய் ரியல் எஸ்டேட்.. தள்ளுபடி விற்பனை ஆரம்பம்.. இந்த ஏரியாவில் தடாலடி விலை சரிவு



Click it and Unblock the Notifications