இந்திய பங்குச்சந்தை இஸ்ரேல் - ஹமாஸ் போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை சர்வதேச சந்தை தாக்கத்தின் மூலம் எதிர்கொண்டு வருகிறது. இன்று காலை வர்த்தகமும் சரிவுடன் துவங்கியது மட்டும் அல்லாமல் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் வெறும் 4 நிறுவனங்கள் மட்டுமே உயர்வுடன் இருந்தது.
இந்த நிலையில் பங்குச்சந்தை கட்டுப்பாடு ஆணையமான செபி அமைப்பின் நடவடிக்கை அனைத்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லாக்டவுன் காலத்தில் இருந்து இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்வோர் எண்ணிக்கை வேகமாக வளர்ந்து வருகிறது.

இதேவேளையில் புதிய மற்றும் சிறு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் சிறிதும், பெரிதுமாக பல பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர்கள் அதிகரித்து வருகின்றனர். இவர்கள் யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமுகவலைத்தளம் வாயிலாக முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கும் காரணத்தால் இவர்களின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது.
இதை நீண்ட காலமாக கூர்ந்து கவனித்து வந்த செபி பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர்கள் மீது தனி கவனகத்தை செலுத்த துவங்கியது மட்டும் அல்லாமல் சில மோசடிகளையும் கண்டு பிடித்தது. இந்த நிலையில் தற்போது செபி அமைப்பு முறையாக பதிவு செய்யாமல் சமுக வலைத்தளத்தில் முதலீட்டு டிப்ஸ்-களை வழங்குவோர் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க துவங்கியுள்ளது.
இதில் முதல் நடவடிக்கையாக செபி முகமது நசிருதீன் அன்சாரி என்ற பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர் மற்றும் இவருடன் தொடர்புடைய இரண்டு நிறுவனங்களும் பங்குச்சந்தையில் இருந்து தடை செய்ய செபி உத்தரவிட்டு உள்ளது.
மேலும் முகமது நசிருதீன் அன்சாரி மற்றும் இரு நிறுவனங்கள் அவருடைய பாலோவர்களிடம் இருந்து பெறப்பட்ட 17.2 கோடி ரூபாயை திருப்பித் செலுத்த செபி உத்தரவிட்டு உள்ளது. முகமது நசிருதீன் அன்சாரி-யின் யூடியூப் சேனலுக்கு சுமார் 5 லட்சம் பேர் சப்ஸ்கிரிப் செய்து உள்ளனர்.
முகமது நசிருதீன் அன்சாரி ஒரு இணைய தளத்தை உருவாக்கி கல்விப் பயிற்சி அளிப்பது என்ற போர்வையில் முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு டிப்ஸ் வழங்கியதாக செபி தனது விசாரணையில் கண்டுப்பிடித்துள்ளது. செபி இந்த வருடம் குறைந்து 3 பெரிய பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர்-கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
லாக்டவுன் காலத்தில் பங்குச்சந்தை தடாலடியாக சரிந்த போது இதை முக்கிய வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட மக்கள் அதிகளவில் பங்குச்சந்தை முதலீட்டில் இறங்கினர். இதில் பெரிய அளவில் லாபமும் கிடைத்தது, ஆனால் நிலைமை சீரடைந்த பின்பு பங்குச்சந்தை முதலீட்டு குறித்து முறையான புரிதல் இல்லாத காரணத்தால் இத்தகைய பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர்-களின் உதவியை பலர் நாட துவங்கினர். இதை பலர் சரியான அனுமதியுடன் செய்து வந்தாலும், பலர் இதை முறைகேடாக செய்து, பல மோசடி திட்டங்களை நடத்தி வந்தனர்.
மார்ச் 2020 சரிவை தொடர்ந்து நிஃப்டி 50 இன்டெக்ஸ் டாலர் மதிப்பீட்டில் மட்டுமே சுமார் 130 சதவீதம் உயர்ந்துள்ளது. இது ஸ்மால் கேப், லார்ஜ் கேப் குறியீடுகளில் இன்னும் அதிகமான வளர்ச்சியை கண்டு உள்ளது. 2020ல் இருந்து செபி சுமார் 29 பதிவு செய்யப்படாத நிறுவனங்கள், தனிநபர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
இதில் முக்கியமாக தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல பைனான்சியல் இன்ஃப்ளூயன்சர் மற்றும் ஆப்ஷன்ஸ் டிரேடர் பி.ஆர். சுந்தர்-ம் அடக்கம். இவர் செபியின் உத்தரவுக்கு இணங்க சுமார் 47 லட்சம் ரூபாய் திருப்பி செலுத்தினார். இதில் முகமது நசிருதீன் அன்சாரி தனது வாடிக்கையாளர்களுக்கு மாதம் 6 லட்சம் ரூபாய் லாபம் கொடுப்பதாக உத்தரவாதம் அளித்து பலரை சேர்த்துள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications