புதுடெல்லி: பங்குச் சந்தை வர்த்தகத்தை கற்பிப்பதில் பெயர் பெற்ற ரவீந்திர பாலு பார்தி, சட்டவிரோதமாக சம்பாதித்த ரூ.12 கோடி தொகையைத் திருப்பித் தருமாறு இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி உத்தரவிட்டு உள்ளது. மேலும், இந்தப் பணத்தை தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சிறப்புக் கணக்கில் டெபாசிட் செய்யுமாறு ரவீந்திர பாலு பார்தியிடம் SEBI கூறியுள்ளது.
ரவீந்திர பாலு பார்தி தனது மனைவி சுபாங்கி பார்தியுடன் இணைத்து, 2016 ஆம் ஆண்டில் ரவீந்திர பார்தி எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட் (RBEIPL) என்ற நிறுவனத்தை நிறுவினார். பங்குச் சந்தை வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்காக இந்த நிறுவனம் அமைக்கப்பட்டது.

ரவீந்திர பாலு பார்தி, RBEIPL இன் இயக்குநராக பிப்ரவரி 3, 2016 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 3, 2023 ஆம் ஆண்டு வரை தனது சொந்த நிறுவனத்தில் பணியாற்றினார். அவர் ABC லிமிடெட் என்ற ஸ்டாக் ப்ரோக்கரான பாலு மோதிராமின் மகன் ஆவார்.
ரவீந்திர பார்தி எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட் (RBEIPL) எனப்படும் பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசனை நிறுவனத்திற்கு எதிராக செபி தற்காலிக தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு அதன் முன்னாள் இயக்குனர் ரவீந்திர பாலு பார்தி மற்றும் அவரது மனைவி சுபாங்கி பார்தி மற்றும் தற்போதைய இயக்குனர்கள் ராகுல் ஆனந்த கோசாவி மற்றும் தனஸ்ரீ சந்திரகாந்த் கோசாவி ஆகியோருக்காக வழங்கப்பட்டுள்ளது.

செபி விசாரணையைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தில் பணிபுரியும் நபர்கள் முதலீட்டு ஆலோசனை சேவைகளை வழங்குவதையும், முதலீட்டு ஆலோசகர்களாக செயல்படுவதையும் நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்த சேவைகளையும் செய்ய கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
பதிவு செய்யப்படாத முதலீட்டு ஆலோசனை நிறுவனமாக செயல்பட்டு பெற்ற ரூ. 12,03,82,130.91 கோடி பணத்தைத் திருப்பி செலுத்துமாறு வழக்கின் முதல் குற்றவாளிக்கு செபி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ரவீந்திர பார்தி இரண்டு யூடியூப் சேனல்களையும் நடத்தி வருகிறார், 'பாரதி ஷேர் மார்க்கெட் மராத்தி', அதில் 10.8 லட்சம் சந்தாதாரர்கள் மற்றும் 'பாரதி ஷேர் மார்க்கெட் - ஹிந்தி', இதில் 8.22 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர்.
முதலீட்டாளர்களின் நம்பிக்கை அளிக்கும் வகையில் சில தவறான தகவல்களை கொடுத்து ஏமாற்றி சில நிறுவனங்கள் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்த உத்தரவு வெளிப்படுத்துகிறது என்று நோட்டீஸ் நம்பர் 1 இல் (ரவீந்திர பார்தி எஜுகேஷன் இன்ஸ்டிடியூட் பிரைவேட் லிமிடெட்) செபி கூறியுள்ளது.
தனிப்பட்ட லாபத்திற்காக இவர்கள் இதனைக் கையாண்டுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், தங்கள் சொந்த தேவைககளுக்காக சட்டங்களை மீறுவதற்கான வழிகளை கண்டுபிடித்துள்ளது என்றும் செபி கூறியுள்ளது..
அதன்படி, 1000% வரை உத்தரவாதமான வருமானத்தை வழங்குவதாகவும் பங்குச்சந்தையில் முதலீட்டாளர்களை ஏமாற்ற, அவர்களை சுரண்டும் நோக்கிலும் இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது என்று செபி ஆர்டர் குறிப்பிடுகிறது. 25% முதல் 1000% வரை வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளுடன் முதலீட்டாளர்கள் இந்த ஆலோசனைச் சேவைகளுக்கு ஈர்க்கப்பட்டதே இதற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications