தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா..? முதல்ல இதை படிங்க.. செபி புது உத்தரவு..!

இந்திய பங்குச் சந்தையின் ஒழுங்குமுறை ஆணையமான SEBI, எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்ட்கள் (ETFs) விலை அடிப்படை மற்றும் விலை வரம்பு (price band) கணக்கீட்டில் முக்கிய மாற்றங்களை செய்ய முடிவு செய்துள்ளது.

பிப்ரவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்ட செபி அமைப்பின் ஆலோசனை அறிக்கையில் இந்த மாற்றங்கள் குறித்து மக்களின் விவாதத்துக்கு, கருத்துக்களை பெறவும் முன் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் மார்ச் 6 வரை கருத்துகளை செபிக்கு அனுப்பலாம். இந்த மாற்றங்கள் அமல்படுத்தப்பட்டால், ETFகள் மிகவும் துல்லியமான விலையில் வர்த்தகமாகும், விலை வேறுபாடுகள் குறையும் என செபி நம்புகிறது.

தங்கம், வெள்ளி ETFகளில் முதலீடு செய்துள்ளீர்களா..? முதல்ல இதை  படிங்க.. செபி புது உத்தரவு..!

அடிப்படை விலை (Base Price) நிர்ணயம்:
இப்போது ETF விலை அடிப்படை (Base Price) T-2 NAV அடிப்படையில் கணக்கிடப்படுகிறது, அதாவது இரண்டு நாட்களுக்கு முந்தைய வர்த்தகத்தின் முடிவில் பதிவான NAV (நிகர சொத்து மதிப்பு) அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதனால் இரண்டு நாள் தாமதம் விலை நிர்ணயத்தில் ஏற்படுகிறது. மேலும் சந்தை தினசரி மாறும் போது, இரண்டு நாள் பழைய தரவு பயன்படுத்துவது விலை பொருந்தாது. இதேபோல் கார்ப்பரேட் நடவடிக்கைகள் (போனஸ், டிவிடெண்ட், ஸ்ப்ளிட் போன்றவை) சரியாக பிரதிபலிக்காமல் போகலாம் என செபி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

SEBI என்ன மாற்றம் முன்மொழிகிறது?
T-2 NAVக்கு பதிலாக T-1 நாள் அதாவது முந்தைய வர்த்தக நாள் தரவை பயன்படுத்த வேண்டும் என்று SEBI கூறுகிறது. இதற்கும் மூன்று தேர்வுகளையும் செபி தனது அறிக்கையில் கொடுத்துள்ளது.

T-1 நாள் முடிவு வர்த்தக விலை, T-1 நாளின் கடைசி 30 நிமிடங்களின் சராசரி iNAV (indicative NAV) விலை, அல்லது T-1 நாள் முடிவு NAV (கிடைத்தால்) அதை அடிப்படை விலையாக நிர்ணயம் செய்யலாம் என தெரிவித்துள்ளது.

இந்த மாற்றம் மூலம் ETF மதிப்பு சமீபத்திய சந்தை நிலையை பிரதிபலிக்கும். கார்ப்பரேட் நடவடிக்கைகள் அதாவது போனஸ், டிவிடெண்ட், ஸ்ப்ளிட் போன்றவை T-1 நாளில் நடந்தால் தானாக விலை அடுத்த நாளில் சரியாகும்.

விலை வரம்பு (price band):
விலை வரம்பு என்பது ஒரு நாளில் ETF விலை எவ்வளவு உயரலாம் அல்லது குறையலாம் என்பதன் எல்லை அளவுகள். தற்போது பெரும்பாலான ETFகளுக்கு (+/-)20% நிலையான வரம்பு உள்ளது. ஆனால் இது அடிப்படை சொத்துகளின் உண்மை ஏற்ற இறக்கத்துடன் பொருந்தாமல் இருக்கலாம் என செபி கருதுகிறது.

SEBI முன்மொழிவு:
இந்த நிலையில் செபி ஈக்விட்டி மற்றும் டெப்ட் ETFகளுக்கு ஆரம்ப வரம்பு (+/-)10% இதை தேவைக்கேற்ப (+/-)20% வரை மாற்றிக்கொள்ளலாம், இதை தொடர்ந்து தங்கம்/வெள்ளி ETFகளுக்கு ஆரம்ப விலை வரம்பு (+/-) 6% உடன் துவங்கி 15 நிமிட கூலிங் கால இடைவெளிக்கு பின்பு (+/-)20% வரை நீட்டிக்கவும், ஓவர்நைட் ETFகளுக்கு (+/-)5% தொடரும் செபி பரிந்துரை செய்துள்ளது. இந்த அளவுகள் சந்தை ஏற்ற இறக்கத்துடன் மாற்றப்படும்

தங்கம், வெள்ளி ETF
SEBIயின் 7 பக்க ஆலோசனை ஆவணத்தில், தங்கம் மற்றும் வெள்ளி ETFகளுக்கு ஆரம்ப விலை வரம்பு (+/-)6% என்று முன்மொழியப்பட்டுள்ளது. இது வர்த்தக நாளில் தேவைக்கேற்ப (+/-)20% வரை நெகிழ்வாக்கப்படலாம் , ஆனால் கூலிங்-ஆஃப் காலம் (cooling-off period) உடன் இது நடைமுறைப்படுத்தப்படும். உதாரணமாக ஆரம்ப விலை வரம்பு முழுமையாக பயன்படுத்தப்பட்ட பிறகு 15 நிமிட கூலிங்-ஆஃப் காலம் இருக்கும். அதன்பிறகு விலை வரம்பு 3% அளவுக்கு உயர்த்தப்படம்.

சர்வதேச சந்தையில் விலை ஏற்ற இறக்கம் 9% விட அதிகமாக இருந்தால், பங்குச்சந்தை அமைப்புகள் மேலும் 3% அளவுக்கு வரம்பை தளர்த்தலாம், மீண்டும் 15 நிமிட கூலிங்-ஆஃப் காலத்துடன் இது தொடரும். ஒரு நாளின் அதிகபட்ச மாற்றம் (single day maximum variation) (+/-)20% ஆக இருக்கும் என விளக்கம் கொடுத்துள்ளது.

இது முதலீட்டாளர்களுக்கு ஏன் முக்கியம்?
செபியின் இந்த முன்மொழிவு சமீப காலத்தில் தங்கம், வெள்ளி விலைகளில் ஏற்பட்ட அதிக ஏற்ற இறக்கத்தால் வந்துள்ளது. தற்போது உள்ள நிலையான (+/-)20% வரம்பு சில சமயங்களில் போதுமானதாக இல்லை, ETF விலை அடிப்படை சொத்துகளுடன் சரியாக பொருந்தாமல் போகிறது. இந்த மாற்றங்கள் அமலானால், ETF வர்த்தகம் மிகவும் நியாயமாகவும், சந்தை நிலைக்கு ஏற்பவும் இருக்கும்.

இந்த மாற்றங்கள் அமலானால் சிறு முதலீட்டாளர்கள் ETFகளை பாதுகாப்பாக, திறம்பட வர்த்தகம் செய்யலாம். குறிப்பாக தங்கம், வெள்ளி ETFகளில் சமீப கால ஏற்ற இறக்கத்தால் இந்த மாற்றம் தேவைப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+