செபி (SEBI) தங்கம் மற்றும் வெள்ளி அடிப்படையிலான எக்ஸ்சேஞ்ச் ட்ரேடட் ஃபண்ட்கள் (ETF) மதிப்பீட்டில் முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுவரை பெரும்பாலான ETFகள் லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் (LBMA) விலையை அடிப்படையாகக் கொண்டு, அதை ரூபாய் மாற்று விகிதம் மற்றும் இறக்குமதி வரியுடன் சரிசெய்து உள்நாட்டு விலையாக மாற்றின.
ஆனால் உள்ளூர் சந்தையில் உள்ள பிரீமியம் விலை அல்லது டிஸ்கவுண்ட் விலை காரணமாக இந்த விலை உண்மையான இந்திய சந்தை விலையிலிருந்து வேறுபட்டது. சில ETFகள் இந்த வேறுபாட்டை சரிசெய்தாலும், பெரும்பாலான ஈடிஎப்-கள் இதை சரிசெய்வது இல்லை. இதனால் தங்கம் ஈடிஎப், வெள்ளி ஈடிஎப் மதிப்பீட்டில் வித்தியாசம் இருந்து வருகிறது. இதை சரி செய்ய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி முடிவு செய்து முக்கியமான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

இன்று செபி வெளியிட்ட புதிய விதியின்படி, ETFகளில் உள்ள உண்மையான தங்கம் மற்றும் வெள்ளியின் மதிப்பீடு அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு பங்குச்சந்தை வெளியிடும் polled spot price அடிப்படையில் இருக்க வேண்டும். தற்போது இதை மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் ஆஃப் இந்தியா (MCX) உள்ளிட்ட எக்ஸ்சேஞ்ச்கள் வழங்குகின்றன.
இந்த விலை உண்மையான உள்நாட்டு சந்தை நிலவரத்தை பிரதிபலிப்பதால், அனைத்து ETFகளின் NAV (நெட் அசெட் வேல்யூ) மதிப்பீடு ஒரே மாதிரியாக இருக்கும். இதனால் முதலீட்டாளர்களுக்கு துல்லியமான வருமானம் கிடைக்கும்.
மியூச்சுவல் ஃபண்ட் ஆலோசனைக் குழு (MFAC) விவாதங்கள், பொதுமக்கள் கருத்து கேட்பு மற்றும் அனைத்து தரப்பினருடனான ஆலோசனைகளுக்குப் பிறகு இந்த மாற்றம் முடிவு செய்யப்பட்டது என செபி தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தைகள் வெளிப்படைத்தன்மை மற்றும் ஒழுங்குமுறை கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டவை என்பதால், அவை வெளியிடும் spot price உள்நாட்டு சந்தை நிலவரத்தை துல்லியமாக பிரதிபலிக்கும் என்று செபி தெரிவித்துள்ளது.
உலோக ரீதியாக வழங்கப்படும் தங்கம் மற்றும் வெள்ளி டெரிவேட்டிவ் ஒப்பந்தங்களை செட்டில்மென்ட் செய்யும் எக்ஸ்சேஞ்ச்-களின் polled spot pricesஐ மட்டுமே மியூச்சுவல் பண்ட் அமைப்புகள் பயன்படுத்த வேண்டும். SEBI அவ்வப்போது வெளியிடும் spot polling வழிகாட்டுதல்களை இந்த முறை கடைபிடிக்க வேண்டும் என செபி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

மேலும் AMFI (அசோசியேஷன் ஆஃப் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் இன் இந்தியா) செபி உடன் கலந்தாலோசித்து இதற்கான ஒரே மாதிரியான கொள்கையை வகுக்கும் என தெரிலித்துள்ளது.
இந்த மாற்றம் தங்கம் மற்றும் வெள்ளி முதலீட்டாளர்களுக்கு பெரும் நன்மை அளிக்கும். உள்நாட்டு சந்தை விலையை அடிப்படையாகக் கொண்ட இந்த மதிப்பீடு ETFகளின் NAV-ஐ துல்லியமாகவும் ஒரே மாதிரியாகவும் மாற்றும். முன்பு ஏற்பட்ட விலை வேறுபாடு இனி இருக்காது.
இது தங்கம் மற்றும் வெள்ளி ETFகளில் முதலீடு செய்யும் மக்களுக்கு பெரும் நம்பிக்கையை அளிக்கும். செபி-யின் இந்த நடவடிக்கை மியூச்சுவல் ஃபண்ட் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை மேம்படுத்தும் முக்கிய படியாகும்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

கோவையில் இன்று தங்கம் விலை உயர்வு: இந்த திடீர் விலை உயர்வுக்கு காரணம் என்ன?

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

தங்கம், வெள்ளி விலை மேலும் 10% குறையுமா? எல்லாம் டிரம்ப் எடுக்கும் முடிவில் தான் இருக்கு!!

தங்கம், வெள்ளி விலை லைவ் அப்டேட்ஸ்: தங்கம் விலை இனி குறையுமா? உயருமா?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

வாரத்தின் முதல் நாளே குட் நியூஸ்: குறைந்தது தங்கம் விலை!! நகைப்பிரியர்கள் ஹேப்பி!!

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?



Click it and Unblock the Notifications