மாஸ்டர் ஸ்ட்ரோக்.. தங்கத்தை அடகு வைத்து ரகசியமாக கடன் வாங்கிய மன்மோகன் சிங்..!

மன்மோகன் சிங் என்ற உடனே அனைவருக்கும் 1991 ஆம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக அவர் கொண்டு வந்த பொருளாதார சீர்த்திருத்தங்கள் தான் நினைவுக்கு வரும். அப்படி 1991 ஆம் ஆண்டு இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது, மன்மோகன் சிங் என்னென்ன நடவடிக்கைகளை கொண்டு வந்து அதனை மீட்டெடுத்தார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

1990களில் இந்திய பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்தது. இந்தியாவின் வெளிநாட்டு கடன், நாட்டின் மொத்த ஜிடிபியில் 23 சதவீதம் இருந்தது .உள்நாட்டு பொதுக் கடன் 55 சதவீதம் இருந்தது. பணவீக்க விகிதம் 13 சதவீதம் சில்லறை பணவீக்கம் 17 சதவீதம் என இருந்தது .

மாஸ்டர் ஸ்ட்ரோக்.. தங்கத்தை அடகு வைத்து ரகசியமாக கடன் வாங்கிய மன்மோகன் சிங்..!

ஒருபுறம் வேலை வாய்ப்புகள் கிடைக்கவில்லை மறுபுறம் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே சென்றது என மக்கள் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர். அந்த சமயத்தில் இந்தியாவில் வெளிநாட்டு கரன்சி கையிருப்பு வெறும் 1.2 மில்லியன் டாலர்களாகத்தான் இருந்தது.

அதனை கொண்டு அடுத்த மூன்று வாரங்களுக்கு அடிப்படை பொருட்களை மட்டுமே இந்தியா இறக்குமதி செய்ய முடியும். அதன் பிறகு இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு கரன்சி கையிருப்பு இல்லை என்ற சூழல் நிலவியது.

ரகசிய தங்க கடன்: அப்போது பிரதமர் சந்திரசேகர் தலைமையிலான அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்தியாவிடம் இருந்த 67 டன் தங்கத்தை பணயமாக வைத்து கடன் வாங்கப்பட்டது. இதற்காக ரிசர்வ் வங்கி 47 டன் தங்கத்தை பேங்க் ஆப் இங்கிலாந்துக்கும், 20 டன் தங்கத்தை சுவிட்சர்லாந்து வங்கிக்கும் விமானம் மூலம் கொண்டு சென்று 600 மில்லியன் டாலர்களை கடனாக பெற்றது.

இதனை அடுத்து தான் இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது அந்த தேர்தலில் நரசிம்மராவ் இந்திய பிரதமராக பொறுப்பேற்றார். அப்பொழுது பொருளாதார நிபுணராக இருந்த மன்மோகன் சிங்கை நாட்டின் நிதி அமைச்சராக பதவியில் அமர வைத்தார். இந்திய பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்தது அதனை சரி செய்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு மன்மோகன் சிங்கிடம் வழங்கப்பட்டது.

நரசிம்மராவ் - மன்மோகன் சிங் டீம்: 1991 ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி மன்மோகன் சிங் நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு தேவையான பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்தார். அதில் முக்கியமானது பண மதிப்பிழப்பு திட்டம் . வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை 9% குறைத்தார் இரண்டு நாட்களுக்கு பின்னர் அதை 11% என மேலும் குறைத்தார். இந்தியாவின் ஏற்றுமதியை அதிக போட்டித் தன்மை கொண்டதாக மாற்றி நாட்டின் நிதி பற்றாக்குறையை சரி செய்வதே இதன் நோக்கமாக இருந்தது.

அந்நிய முதலீடுகளுக்கு வரவேற்பு : இந்தியாவில் வெளிநாட்டு நிறுவனங்கள் எளிமையான முறையில் வந்து முதலீடு செய்து செய்வதை ஊக்குவிக்கும் வகையில் தாராளமயமாக்கல் தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் கொள்கையை கொண்டு வந்தார்.

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் மூலம் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை தனியார்மயமாக்கியது மற்றொரு முக்கியமான முடிவாகும். இந்த சீர்திருத்தங்கள் மூலம் உலகப் பொருளாதாரத்தோடு இந்திய பொருளாதாரம் இணைந்து செயல்பட உதவியது. வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்கு கதவுகள் திறக்கப்பட்டன.

தனியார் நிறுவனங்களுக்கு வரவேற்பு: மன்மோகன் சிங் கொண்டு வந்த பொருளாதாரக் கொள்கை அப்பொழுது ஒட்டுமொத்த தேசத்தின் மனநிலையையும் மாற்றும் வகையில் இருந்தது. அதாவது இந்தியாவில் அரசு நிறுவனங்கள் ஊழல் நிறைந்தவையாகவும் , திறமையற்றதாகவும் இருக்கின்றன என்ற ஒரு எண்ணம் மக்கள் மனதில் இருந்த நிலையில் மன்மோகன் சிங் தனியார் நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தி தந்தார் .

குறிப்பாக வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தங்களுடைய தொழில்நுட்பங்களை கொண்டு வந்து தொழில்களை தொடங்க ஊக்குவிக்கப்பட்டன. காலப்போக்கில் இது இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த கொள்கைகளுக்கு பல்வேறு எதிர்ப்புகள் இருந்தாலும் அவர் தன்னுடைய நோக்கத்தில் உறுதியாக இருந்தார். இந்திய பொருளாதாரம் இதன் விளைவாக மீண்டும் வளர்ச்சி பாதையை நோக்கி திரும்பியது.

1991 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் கொண்டு வந்த பல்வேறு பொருளாதாரக் கொள்கைகளும் நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு வந்தன. இதன் காரணமாக இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையிலிருந்து மீண்டு வந்தனர். இந்த காலகட்டத்தில் தான் இந்தியாவின் முக்கியமான மிடில் கிளாஸ் என்ற பிரிவு தொடங்கியது என கூறலாம். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொலைதொடர்பு நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள் எளிதாக இந்தியாவில் வந்து முதலீடு மேற்கொண்டு தொழில்களை தொடங்கின. இது லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கியது.

உலகிற்கே அறிவுரை வழங்கியவர்: 2008 ஆம் ஆண்டு உலகமே நிதி நெருக்கடியை சந்தித்தது. அப்போது பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர், பிரஞ்சு அதிபர் நிக்கோலஸ் சர்கோசி உள்ளிட்ட சர்வதேச தலைவர்களும் இந்த நெருக்கடியை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து மன்மோகன் சிங்கிடம் தான் ஆலோசனை பெற்றனர். அந்த வகையில் இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுத்ததோடு மட்டுமில்லாமல் இந்தியாவை சர்வதேச அளவில் ஒரு முன்னணி இடத்தில் கொண்டு சென்று நிறுத்தியவர் என்ற பெருமையும் மன்மோகன் சிங்கையே சாரும்.

Story written by: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+