ரூ.2 லட்சத்திற்கு நகை வாங்குறீங்களா? ரூ.1,99,999-க்கு மேல 1 ரூபாய் கூட ரொக்கமா கொடுக்க முடியாது? ஏன் தெரியுமா?

வருமான வரி சம்பளம் பெறும் தனிநபர்களுக்கு மட்டுமல்ல.. வணிகத்தில் ஈடுபடுபவர்களும் தங்களுடைய வருமானத்திற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். நகைக் கடைகளில் அதிகளவிலான நகை வாங்கினால் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக கொடுக்க முடியாது. கண்டிப்பாக இதை கடைக்காரர் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த நடைமுறை ஏன் தெரியுமா? நம் நாட்டில் இருக்கும் கடுமையான வருமான வரி விதிகளால் தான்.

யூபிஐ பயன்படுத்துவதற்கும் வரம்பு இருக்கிறது. நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சத்திற்கும் மேல் பரிவர்த்தனை செய்ய முடியாது. அதேபோல நகைக்கடைகளில் நகை வாங்குவது, வேறு ஏதாவது பொருட்கள் வாங்குவது மற்றும் நிறுவனங்களிடமிருந்து சேவை பெறுவது என எதுவாக இருந்தாலும் ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் ரொக்கமாக கொடுத்து பெற முடியாது.

ரூ.2 லட்சத்திற்கு நகை வாங்குறீங்களா? ரூ.1,99,999-க்கு மேல 1 ரூபாய் கூட ரொக்கமா கொடுக்க முடியாது? ஏன் தெரியுமா?

உங்களிடம் ரூ.1,99,999 மேல் 1 ரூபாய் கூட ரொக்கமாக வாங்க மாட்டார்கள். இதற்கு காரணம் வருமான வரித்துறையின் விதிகள். புதிய வருமான வரிச் சட்டம், பிரிவு 156-இன் கீழ் ஒரு பரிவர்த்தனையில் பெறப்படும் ரொக்க தொகை ரூ.2 லட்சம் அல்லது அதற்கு மேல் இருந்தால் அந்த தொகையை பெறுபவர்.. முழு தொகையையும் அபராதமாக செலுத்த நேரிடலாம்.

Also Read

அதாவது ரூ. 2 லட்சத்திற்கு அப்படியே ரூ. 2 லட்சம் அபராதம் விதிக்கப்படும். பணத்தை செலுத்தி சேவையைப் பெறுபவருக்கோ அல்லது பொருட்களை பெறுபவருக்கோ எந்தப் பிரச்சனையும் இல்லை. அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படாது. ஆனால் பணத்தை பெற்றவருக்கு தான் பிரச்சனை. அவரே முழு அபராதத்தையும் செலுத்த வேண்டும்.

உதாரணமாக ஒரு விற்பனையாளர் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை விற்பனை செய்கிறார். அது நகைகளாக இருக்கலாம் அல்லது வேறு பொருட்களாக இருக்கலாம் அல்லது ஒரு சேவையாக கூட இருக்கலாம். இதில் எதுவாக இருந்தாலும் அவர் ரூ. 2 லட்சத்திற்கும் மேலான தொகையை உங்களிடம் ரொக்கமாக வாங்க மாட்டார். விற்பனையாளர் விற்கும் பொருளுக்கும் 10 சதவீதம் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ரூ. 2 லட்சத்தில் 10% என்றால் ரூ.20,000.

ஆனால் வருமானவரித்துறையினர் ரூ.2 லட்சத்திற்கும் மேல் அல்லது ரூ.2 லட்சம் வரையிலான தொகையை நீங்கள் வாங்கி இருக்கிறீர்கள் என்று கண்டுபிடித்தால் அந்த விற்பனையாளருக்கு முழு 2 லட்சமும் அபராதமாக விதிக்கப்படும். இதன் விளைவாக அவருக்கு கிடைக்கும் லாபம் போவதுடன் சொந்த பணத்திலிருந்து ரூ.1,80,000 வரை இழப்பு ஏற்படும். இதுதான் வணிகர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு ஏற்படும் பெரும் பிரச்சனை.

ஏன் இந்த விதிமுறை?: பொதுவாக வங்கி பரிவர்த்தனைகள் எல்லாம் டிஜிட்டல் முறையில் நடக்கிறது. இதனால் அதிகளவிலான பரிவர்த்தனை செய்யும் நபர்களை கண்டுபிடித்து வங்கியே வருமானவரித்துறைக்கு தெரிவித்துவிடும். ஆனால் ரொக்கமாக செய்யப்படும் பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு மட்டுமே தெரியும். அதை தாமாகவே முன்வந்து அவர்கள் ITR தாக்கல் செய்யும்போது தெரிவித்தால் ஒழிய வருமானவரித்துறைக்கு தெரியாது.

இதனால் 99.9% பெரிய அளவிலான தொகை கணக்கில் காட்டப்படாத பணமாகவோ அல்லது கருப்பு பணமாகவோ மாற வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்தி கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் தான் வருமானவரித்துறை இத்தகைய விதிமுறையை வகுத்துள்ளது.

இந்த விதி வணிகத்திற்கு மட்டும் கிடையாது. உங்களுடைய பெற்றோர் அல்லது உறவினர்கள் ரூ.2 லட்சம் ரொக்கமாக கொடுத்தால் அதற்கும் இந்த விதி பொருந்தும். உதாரணமாக ஒரு தந்தை தன்னுடைய பிள்ளைக்கு ரூ.2 லட்சத்தை பேங்க் டிரான்ஸ்பர் செய்கிறார் என்றால் அதற்கு வரி கிடையாது. அதுவே அவர் ரொக்கமாக வழங்கினால் பணத்தை பெறுபவர் 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும். ரூ.2 லட்சம் வழங்கினால் ரூ.2 லட்சத்தை அப்படியே வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டியிருக்கும்.

பணமாக கொடுக்கும் போது அது எப்படி வருமானவரித்துறைக்கு தெரியும்? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். வணிகம் செய்பவர்கள் ஒவ்வொரு ஆண்டும் வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அப்போது நிறுவனத்தின் கணக்கு புத்தகங்கள் அனைத்தும் சோதிக்கப்படும். இதில் ரூ.2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக பெறப்பட்டுள்ளது தெரிய வந்தால் உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிடும்.

அதேபோல வீடுகளில் நடத்தப்படும் வருமான வரி சோதனையின் போதும் அதிக அளவிலான ரொக்கம் பிடிபட்டால் அப்போதும் பணத்தை பெறுபவர் மற்றும் கொடுத்தவர் சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது.

உங்கள் உறவினராக இருந்து பணத்தை கொடுத்திருந்தாலும் அவர் வங்கி கணக்கில் ரூ.2 லட்சம் ரொக்கமாக எடுத்திருக்கிறார் என்பது தெரியவந்து.. அந்த பணம் எங்கு சென்றது என்பதற்கு முறையான கணக்கு இல்லை என்றால் இரு தரப்புமே சிக்கிக் கொள்ளும் வாய்ப்புள்ளது. இப்படி வருமான வரித்துறைக்கு உங்களுடைய விவரங்கள் 52-க்கும் மேற்பட்ட மூலங்களில் இருந்து தெரிந்து விடும். வருமான வரி விதிகளுக்குட்பட்டு தான் உங்களுடைய பரிவர்த்தனை இருக்க வேண்டும். மேலும் உங்களிடம் இருக்கும் நகை மற்றும் பணம் எங்கிருந்து வந்தது என்பதற்கான ஆதாரம் உங்களிடம் இருந்தால் எதற்கும் பயப்படத் தேவையில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+