உத்தர பிரதேச மாநில அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கான்பூர் மேம்பாட்டு ஆணையம் (கேடிஏ) ஐஐடி-கான்பூர் கல்லூரி உருவாக்கிய தொழில்நுட்படத்தின் உதவியுடன், பங்குச் சந்தையில் நிலத்தை விற்பனை செய்ய உள்ளது.
ஐஐடி கான்பூர் உருவாக்கிய பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் அரசு அமைப்பு அதிகாரம் கான்பூர் மேம்பாட்டு ஆணையம் ஆகும். இத் தொழில்நுட்பத்தின் சிறப்பை KDA அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் சிங் தலைமைச் செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ராவுடன் பிகிரப்பட்டது.
இந்தியாவில் முதல் முறையாக இத்தகைய முயற்சியை எடுத்துள்ளது உத்தர பிரதேச மாநில அரசு தான்.
பிளாக்செயின் தொழில்நுட்பம்
பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கொண்டு பணத்தை அனுப்புவதே பெரும் சவாலாக இருக்கும் நிலையில் ஐஐடி கான்பூர் உருவாக்கிய பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பங்குச் சந்தையில் நிலத்தை விற்பனை செய்யும் முயற்சியில் உத்தர பிரதேச மாநில அரசின் கான்பூர் மேம்பாட்டு ஆணையம் இறங்கியுள்ளது.
கான்பூர் நகர மக்கள்
இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கான்பூர் நகர மக்கள் பெரும் நிவாரணம் பெறுவார்கள் என்று கூறப்படும் நிலையில், நில உரிமையாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப பங்குச் சந்தையில் நிலத்தை பொது உபயோகத்திற்காக விற்கவோ அல்லது மாற்றவோ முடியும் என திட்டத்தின் விளக்கத்தில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கான்பூர் மேம்பாட்டு ஆணையம்
கான்பூர் மேம்பாட்டு ஆணையத்தால் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், நாட்டின் 7 சிறந்த நடைமுறைப் பணிகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மத்திய நிதி அமைச்சகம், மாநில வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் முதன்மைச் செயலர், தலைமைச் செயலாளர், ஆகியோருக்கு இத்திட்ட ஆலோசனை குறித்த விளக்க கடிதம் அனுப்பப்பட்டது.
செயல்பாடு
லக்னோவில் செய்யப்பட்ட இத்திட்டத்தின் விளக்கக் கூட்டத்தில் கான்பூர் மேம்பாட்டு ஆணையம் துணை தலைவர் கூறுகையில், பொது பயன்பாட்டிற்கான எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தும்போது ஒரு நிலம் கண்டறியப்படும் நிலையில், அதன் உரிமையை தனியார் நில உரிமையாளரிடம் இருந்தால், அதை மதிப்பீடு செய்யலாம். இந்த மதிப்பீடு சான்றிதழ் மூலம் உரிமை மாற்றிக்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
லாபம்
ஐஐடி கான்பூரின் கீழ் இயங்கும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலம் சேதப்படுத்துதல் அல்லது சட்டவிரோத நுழைவும் தடுக்கப்படும். இதேபோல் அரசு நிலத்தின் மீதான சொத்து பதிவுகள்,மோசடி போன்ற சூழ்நிலைகளை இந்த தொழில்நுட்பம் மூலம் தடுக்க முடியும்.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!



Click it and Unblock the Notifications