மும்பை: இந்திய பங்குச் சந்தையின் முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி 50 குறியீடுகள் இன்று 3 சதவீதத்திற்கு மேல் சரிந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் கண்ணில் ரத்தக்கண்ணீர் வரவழைத்துள்ளன. இன்றைய சரிவுக்கு அமெரிக்காவில் பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்ததாலும், மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்ததாலும் உருவானது. இதன் மூலம் இந்திய பங்குச்சந்தையில் மிகப்பெரிய அளவிலான திருத்தம் ஏற்பட உள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டு உள்ள இன்றைய கரெக்ஷன் மிகவும் அவசியமானது என்றும் பலர் கருத்து தெரிவித்து வரும் வேளையில், இந்த சரிவில் முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்தும் பிரபல பங்குச் சந்தை நிபுணர் asksandipsabharwal.com தளத்தைத் தேர்ந்த சந்திப் சபர்வால் சில முக்கியமான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சந்திப் சபர்வால் கூறுகையில்: " கரெக்ஷன் ஒரு நாளில் முடிந்துவிடாது என்று நான் நம்புகிறேன். எனவே, முதலீட்டாளர்கள் புதிதாக முதலீடு செய்வதைத் தள்ளி வைக்க வேண்டும். ஒரு நாள் சரிவுக்குப் பிறகு சந்தை தொடர்ந்து உயரும் என்று எண்ணும் பலர், இன்றோடு சரிவு முடிந்துவிடும், புதிதாக முதலீடு செய்ய வேண்டும் என்று நினைக்கலாம். ஆனால், கொஞ்சம் பொறுமை காத்திருப்பது நல்லது. உலகளாவிய சந்தைகளில் திருத்தம் மற்றும் அதன் எதிரொலி இந்தியாவில் சில நாட்கள் அல்லது சில வாரங்கள் நீடிக்கலாம். இதனால் இந்த சரிவும், தடுமாற்றமும் முழுமையாக முடிந்த பின்னர் சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும் போது முதலீடு செய்வது உத்தம்."
இன்றைய வர்த்தகத்தில் கொரியா மற்றும் ஜப்பான் பங்குச்சந்தை பெரிய அளவிலான சரிவைப் பதிவு செய்து பெரும்பாலான பங்குகள் லோவர் சர்கியூட் அளவீட்டை தொட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் ஜப்பான் மத்திய வங்கி அந்நாட்டின் பணவீக்கத்தைக் கட்டுக்குள் வைக்க தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. முன்பு 0% முதல் 0.1% ஆக இருந்த நிலையில் தற்போது 0.25 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
இந்த பங்குச்சந்தையில் செய்யப்படும் முதலீட்டுக்கு நீண்ட கால போக்கு நல்லபடியாக இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் என்ன நடக்கலாம் என்ற கேள்விக்கு சந்திப் சபர்வால் பதில் அளிக்கையில் "யென் கேரி டிரேடு (Yen Carry Trade) பெரிய அளவில் குறைவது, மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் அதிகரிப்பு ஆகியவை ஒரே நேரத்தில் வருவதால், இந்திய பங்குச்சந்தை இந்த வீழ்ச்சியில் இருந்து தப்பிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
ஆனால், எல்லாம் சீரான பிறகு, முதலீடு செய்ய எந்த துறையைத் தேர்வு செய்ய வேண்டும்? என்ற கேள்விக்கு சந்திப் சபர்வால் பதில் அளிக்கையில் "எந்த துறை, எந்த பங்குகள் எவ்வளவு சரிவடையும் என்பதைப் பொறுத்து புதிய முதலீட்டுக்கான வாய்ப்புகள் இருக்கும். இருப்பினும், இந்தியாவில் வாகனத் துறை சிறப்பாக இருக்கும். இதைத் தொடர்ந்து இந்தியச் சந்தையில் தற்போது சிறப்பான முதலீட்டு வாய்ப்பு கொண்டிருப்பது நீண்ட கால மூலதனச் செலவு சுழற்சி (Long-term Directional Capital Expenditure Cycle) தொடர்பான தொழில் துறைகள் மற்றும் மூலதனச் செலவு அதிகரிக்கும் துறைகள் (Industrials and Capex), நுகர்பொருட்கள் (Consumer Durables) மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் (Consumer Non-Durables) ஆகிய மூன்று துறைகளும் இந்த கரெக்ஷன் போது முதலீடு செய்ய ஏற்ற துறைகளாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
நிஃப்டி அடிப்படையில் பார்க்கும்போது பெரிய சரிவு என்றால் எவ்வளவு இருக்கும் என்ற கேள்விக்கு பதில் அளித்த சந்திப் சபர்வால், " தற்போதைய நிலையில் இருந்து 7% முதல் 10% வரையிலான கரெக்ஷன் இந்திய பங்குச்சந்தைக்கு சந்தைக்கு நல்லது. இது சந்தையில் உள்ள அதிகப்படியான தடுமாற்றத்தை நீக்கி, நீண்ட கால மதிப்பீடுகளுடன் நிறுவனத்தின் மதிப்பீடுகள் ஒத்துப்போக இது வழிவகுக்கும் என தெரிவித்துள்ளார்.
இந்திய பங்குச் சந்தையில் பெரும்பாலான பங்குகள் தற்போது அதிகப்படியான மதிப்பீட்டில் உள்ளது. இதனால் பங்குச்சந்தை ஒரு ஆரோக்கியமான கரெக்ஷனுக்கு நீண்ட காலமாக காத்திருந்த நிலையில், இன்று பதிவாகியுள்ளது என்று பிற பங்குச்சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications