கடந்த சில நாட்களாக சென்செக்ஸ், தொடர்ந்து மிகப் பெரிய சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
இன்று காலை கூட சென்செக்ஸ் வர்த்தகமாகத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே, சுமாராக 10 சதவிகிதம் வீழ்ச்சி கண்டது.
எனவே இந்திய பங்குச் சந்தைகளில் சுமார் 45 நிமிடங்களுக்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. இப்போது மீண்டும் பங்குச் சந்தைகள் வர்த்தகமாகத் தொடங்கி இருக்கின்றன.
சென்செக்ஸ்
நேற்று மாலை சென்செக்ஸ் 32,778 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகம் நிறைவடைந்தது. ஆனால் இன்று காலை 31,214 புள்ளிகளுக்கு வர்த்தகமாகத் தொடங்கி 29,388 என்கிற குறைந்தபட்ச புள்ளியைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நிறுத்தத்துக்குப் பிறகு, இப்போது சென்செக்ஸ் சுமாராக 32,800 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
3,300 புள்ளிகள்
ஆக சென்செக்ஸ்-ன் நேற்றைய குளோசிங் புள்ளி உடன், இன்றைய குறைந்தபட்ச புள்ளியை ஒப்பிட்டால் சுமாராக 3,350 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. வர்த்தக நிறுத்தத்துக்குப் பின், தற்போது சென்செக்ஸ் ஒருவழியாக தன் வீழ்ச்சிகளை சரி செய்து கொண்டது. ஆக சென்செக்ஸ் இப்போது 22 புள்ளிகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நிஃப்டி
நேற்று மாலை 9,590 புள்ளிகளைத் தொட்டு நிறைவடைந்து இருந்தது நிஃப்டி. ஆனால் இன்று காலை 9,107 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது. குறைந்தபட்சமாக 8,555 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. ஆக நிஃப்டி சுமாராக 1,035 புள்ளிகள் சரிந்தது.
மீட்சி
சரிந்த புள்ளிகள் எல்லாம், வர்த்தக நிறுத்தத்துக்குப் பிறகான வியாபாரத்தில், மீண்டும் மேலே வரத் தொடங்கி இருக்கின்றன. தற்போது நிஃப்டி வெறும் 57 புள்ளிகள் சரிவில், 9,532 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்றைய வர்த்தகம் ஏற்றத்தில் முடியுமா என்கிற கேள்வி வர்த்தகர்கள் மத்தியில் அதிகரித்து இருக்கிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications