ஆர்பிஐ வட்டி விகிதங்களைக் குறைக்காதது, ஒபெக் நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைத்துக் கொள்ள சம்மதித்து இருப்பதால் கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் அதிகரித்து இருப்பது போன்ற மேக்ரோ பொருளாதார விஷயங்கள் இன்று சந்தையை கீழே இழுத்து இருக்கின்றன. அதோடு தனி நிறுவனங்கள் மற்றும் பங்குகள் சார் செய்திகளும் குறைவாக இருந்ததால் சந்தை ஏற்றத்தைக் காணவில்லை.
நாம் ஏற்கனவே சொன்னது போல, சென்செக்ஸ் டே சார்ட் பேட்டனில் 28 நவம்பர் 2019 அன்றைக்கு, ஒரு மிக சரியான ஹேமர் பேட்டன் உருவானதால், இறக்க டிரெண்ட் தொடங்கி இருப்பதாகச் சொல்லி இருந்தோம். அந்த இறக்க டிரெண்டு இப்போது வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது.

ஒருவேளை சந்தை நாளை, ஏதாவது நல்ல செய்தி வந்து ஏற்றம் கண்டால், 40,650 முதல் ரெசிஸ்டென்ஸாக இருக்கும். 40,800 அடுத்த வலுவான ரெசிஸ்டென்ஸாக இருக்கும்.
டெக்னிக்கலாக, சென்செக்ஸின் டே சார்ட்டில், எலியட் வேவ் தியரி படி பார்த்தால் இப்போது இறக்க டிரெண்டு தான் தொடர்கிறது என்றும் முன் கூட்டியே சொல்லி இருந்தோம். எனவே தற்போதைய சூழலில் சந்தை மேலும் இறக்கம் காணத் தொடங்கினால் 40,125 புள்ளிகளை முதல் சப்போட்டாக வைத்துக் கொள்வோம். 40,000 புள்ளிகளை அடுத்த வலுவான சப்போட்டாக வைத்துக் கொள்வோம். ஏதாவது நல்ல செய்தி வந்து ஒரு நல்ல ஏற்றம் காணவில்லை என்றால்... சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைக் கூட தொடலாம் என முன்பே சொல்லி இருந்ததை, இப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
நேற்று மாலை சென்செக்ஸ் 40,779 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை சென்செக்ஸ் 40,952 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி, 40,445 புள்ளிகளில் நிறைவடைந்து இருக்கிறது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட, இன்றைய குளோசிங் 334 புள்ளிகள் இறக்கம் கண்டு இருக்கிறது.
இன்று காலை நிஃப்டி 12,047 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி வர்த்தக நேர முடிவில் 11,921 புள்ளிகளுக்கு வர்த்தகம் நிறைவடைந்தது. நேற்றைய குளோசிங் புள்ளியை விட இன்றைய குளோசிங் 96 புள்ளி இறக்கம் கண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 07 பங்குகள் ஏற்றத்திலும், 23 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாயின. பிஎஸ்இ-யில் 2,708 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 827 பங்குகள் ஏற்றத்திலும், 1,702 பங்குகள் இறக்கத்திலும், 179 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. 2,708 பங்குகளில் 48 பங்குகளின் விலை 52 வார அதிகத்திலும், 158 பங்குகளின் விலை 52 வார இறக்கத்திலும் வர்த்தகமாயின.
பார்தி இன்ஃப்ராடெல், கோட்டக் மஹிந்திரா, ஜே எஸ் டபிள்யூ ஸ்டீல், டாடா ஸ்டீல், டாக்டர் ரெட்டீஸ் லேப்ஸ் போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின. யெஸ் பேங்க், எஸ்பிஐ, ஜி எண்டர்டெயின்மெண்ட், கெயில், இண்டஸ் இண்ட் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications