சென்செக்ஸ் திடீர் உயர்வு.. 5 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி.. ஜூன் 1 முன் தரமான சம்பவம்..!

சென்னை: மும்பை பங்குச்சந்தை தொடர்ந்து ஐந்து நாட்களாகச் சரிவைச் சந்தித்த பின்னர், இன்று, மே மாதத்தின் கடைசி வர்த்தக நாளில் (மே 31, 2024) உயர்வுடன் துவங்கியுள்ளது பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் கோடைக் காலத்தில் கொட்டி தீர்த்த மழை போல் இருந்தது.

இன்றைய காலை வர்த்தகத்தைப் பார்க்கும் போது, இன்றைய வர்த்தகத்திற்கு முக்கிய நிதி நிறுவனப் பங்குகளின் விலை உயர்வு இந்த உயர்வுக்கு முக்கியக் காரணமாகத் தெரிகிறது. சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனப் பங்குகளில் ஹெச்சிஎல், எஸ்பிஐ, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ், கோட்டாக் மஹிந்திரா, இன்போசிஸ் ஆகியவை சரிவுடன் காணப்படுகிறது.

சென்செக்ஸ் திடீர் உயர்வு.. 5 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி.. ஜூன் 1 முன் தரமான சம்பவம்..!

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தற்போது 157,36 புள்ளிகள் உயர்ந்து 74,034.81 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. சென்செக்ஸ் அதிகப்படியாக 74,478.89 புள்ளிகளை இன்று காலை வர்த்தகத்தில் தொட்டது.

இதேபோல் தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 குறியீடு 32.30 புள்ளிகள் உயர்ந்து 22,520.95 புள்ளிகளைத் தொட்டு உள்ளது.

ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கிய இந்திய பொதுத் தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி அதாவது நாளை உடன் 7ஆம் கட்ட தேர்தல் உடன் முடிவடைகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடக்க இருந்தாலும், ஜூன் 1 ஆம் தேதி மாலை வெளியாகும் எக்சிட் போல் பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வல்லமை கொண்டு உள்ளது.

இதேபோல் இன்று வெளியாகும் இந்தியாவின் நான்காம் காலாண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகள் மீதும் முதலீட்டாளர்களின் கவனம் இருக்கும் வேளையில், இந்தக் காலாண்டில் முந்தைய மூன்று காலாண்டுகளை விடப் பொருளாதார வளர்ச்சி மந்தமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் காலையில் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ் இப்போது 150 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் குறியீட்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, ல Larsen & Toubro, பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், சன் பார்மா, மற்றும் இண்டஸ்இண்ட் வங்கி ஆகிய பங்குகள் அதிகப்படியான உயர்வைச் சந்தித்து வருகிறது. அதே நேரம் மாருதி சுசூகி மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய பங்குகள் சரிவில் உள்ளது.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம், மார்ச் 2024 ம் ஆண்டுடன் முடிவடைந்த காலாண்டில் ரூ.258 கோடி என 77% லாப வளர்ச்சியை அறிவித்ததைத் தொடர்ந்து, அதன் பங்குகள் ஆரம்ப வர்த்தகத்தில் 3% க்கும் மேல் உயர்ந்தன.

இன்றைய வர்த்தகத்தில் துறை ரீதியாகப் பார்க்கும்போது, ஃபீனிக்ஸ் மில்ஸ், லோதா, மற்றும் பிரெஸ்டீஜ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வால் நிஃப்டி ரியால்டி துறை 2.4% உயர்ந்தது.

இதேபோல் நிஃப்டி பேங்க், ஃபைனான்ஸ், ஆட்டோ, மெட்டல், குடியிருப்புப் பொருட்கள், மற்றும் எரிசக்தித் துறைகளின் பங்குகளும் 0.5 முதல் 1% வரை உயர்வில் திறந்தன. மேலும் நிஃப்டி மிட்கேப் 100 மற்றும் நிஃப்டி ஸ்மால்கேப் 100 ஆகிய இரண்டு குறியீடுகளும் 0.6% உயர்ந்தன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+