ஓரே நாளில் ரூ.5.79 லட்சம் கோடி லாபம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நான்கு நாட்கள் தொடர் சரிவுக்கு பின்பு வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வுடன் முடிந்த காரணத்தால் பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் சந்தை மதிப்பு ஓரே நாளில் பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

அமெரிக்காவின் சிறப்பான பொருளாதார தரவுகள், சீனாவில் அதிகரித்திருக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கை, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி முடிவு என பல முக்கிய காரணங்களுக்காக மும்பை பங்குச்சந்தை கடந்த வாரம் முழுக்க கடுமையான பாதிப்பை எதிர்கொண்டது.

இதனால் இன்றைய வர்த்தகம் துவங்கும் போதே மக்கள் அச்சத்துடன் துவங்கியது, ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் உயர்வுடன் முடிவடைந்துள்ளது.

ரத்தக்களறியானது சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு.. 4 நாளில் 12 லட்சம் கோடி இழப்பு..!ரத்தக்களறியானது சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு.. 4 நாளில் 12 லட்சம் கோடி இழப்பு..!

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை 4 நாள் இடைவிடாமல் அதிகளவிலான பங்கு விற்பனையை எதிர்கொண்ட நிலையில், உலகச் சந்தைகளில் உருவான சாதகமான சூழ்நிலை காரணமாக திங்கட்கிழமை சென்செக்ஸ் குறியீடு சுமார் 1 சதவீதம் வரையில் உயர்ந்தன. இதன் மூலம் பார்மா மற்றும் ஹெல்த்கேர் பங்குகளைத் தவிர அனைத்து துறைகளிலும் இன்றைய வர்த்தகத்தில் முதலீடுகள் குவிந்தது.

 5.79 லட்சம் கோடி ரூபாய்

5.79 லட்சம் கோடி ரூபாய்

இதன் மூலம் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் சந்தை மூலதனமும் இன்றைய வர்த்தகத்தில் 5.79 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 277.91 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதுள்ளது. இதனால் சோகத்தில் இருந்த பல முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைதனர்

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு இன்றைய வர்த்தக முடிவில் 721 புள்ளிகள் உயர்ந்து 60,566 புள்ளிகளையும், நிஃப்டி 50 18,000 புள்ளிகளுக்கு மேல் முடிவடைந்தன. இதன் மூலம் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு தனது அஸ்தான 18000 மற்றும் 60000 புள்ளிகளை எட்டியுள்ளது.

டாப் நிறுவனங்கள்

டாப் நிறுவனங்கள்

சென்செக்ஸ் குறியீட்டில் எஸ்பிஐ, IndusInd வங்கி,பஜாஜ் ஃபின்சர்வ்,டாடா ஸ்டீல், ஐடிசி மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவை 2-4 சதவீதம் உயர்ந்து அதிக லாபம் உடன் முடிவடைந்தது. HDFC வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட், என்டிபிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கணிசமான உயர்வுடன் முடிவடைந்துள்ளது.

மறுபுறம், நெஸ்லே, கோடக் வங்கி, பார்தி ஏர்டெல், HCL டெக், HUL
மற்றும் சன் பார்மா ஆகியவை சரிவுடன் முடிந்தது.

நிஃப்டி

நிஃப்டி

நிஃப்டி துறை வாரியாக பார்க்கும் போது நிஃப்டி பொதுத்துறை வங்கி 7.29 சதவீதம் மற்றும் நிஃப்டி மீடியா 2.85 சதவீதம் உயர்ந்தது. ஆட்டோ, ரியல் எஸ்டேட், நிதி, ஐடி, எஃப்எம்சிஜி மற்றும் உலோகப் பங்குகளும் உயர்வுடன் முடிவடைந்தன. அதேசமயம் நிஃப்டி மிட்கேப்50 2.32 சதவீதம் மற்றும் ஸ்மால்கேப்50 3.52 சதவீதம் முன்னேறியது.

 ஆசிய சந்தை

ஆசிய சந்தை

இன்று ஆசிய சந்தைகளில், சீனாவின் ஷாங்காய் காம்போசிட் 0.65 சதவீதமும், ஜப்பானின் நிக்கேய் 225 0.66 சதவீதமும் மற்றும் தென் கொரியாவின் கோஸ்பி 0.15 சதவீதமும் உயர்ந்தன.

டாலர்

டாலர்

இதே வேளையில் திங்கட்கிழமை வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு அதிகபட்சமாக 82.64 ஐ தொட்ட பிறகு 82.65 ஆக முடிந்தது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் இதன் மதிப்பு 82.8575 இல் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex Breaks 4 day fall; Investor richer by 5.79 lakh crore today

Sensex Breaks 4 day fall; Investor richer by 5.79 lakh crore today
Story first published: Monday, December 26, 2022, 18:52 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X