ஓரே நாளில் 3 லட்சம் கோடி நஷ்டம்.. சென்செக்ஸ், நிஃப்டி பெரும் சரிவு..!

அமெரிக்க மத்திய வங்கியின் பென்ச்மார்க் வட்டி விகிதத்தைத் தொடர்ந்து, அமெரிக்காவின் டாவ் ஜோன்ஸ், எஸ் அண்ட் பி 500, நாஸ்டாக் ஆகியவை அதிகப்படியான சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலி ஒட்டுமொத்த ஆசிய சந்தையிலும் இருந்தது.

காலை வர்த்தகம் துவக்கம் முதல் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தக முடிவில் யாரும் எதிர்பார்க்காத வகையில் கிட்டத்தட்ட 900 புள்ளிகள் சரிந்து முதலீட்டாளர்களின் பர்ஸ்-ல் பெரும் ஓட்டையை ஏற்படுத்தியது.

இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் சுமார் 3 லட்சம் கோடி ரூபாயை இழந்தனர்.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு தொடர் சரிவு பாதையில் இருந்த நிலையில், ஐரோப்பிய சந்தை திறந்த பின்பும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதனால் 600 புள்ளிகளில் இருந்த சரிவு 900 புள்ளிகளுக்குக் கொண்டு சென்றது.

சென்செக்ஸ், நிஃப்டி

சென்செக்ஸ், நிஃப்டி

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 878.88 புள்ளிகள் சரிந்து 61,799.03 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேவேளையில் நிஃப்டி குறியீடு 245.40 புள்ளிகள் சரிந்து 18,414.90 புள்ளிகளை அடைந்துள்ளது.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

இன்றைய வர்த்தகத்தில் மிட்கேப் இன்டெக்ஸ் 1.05 சதவீதம் சரிந்தும், ஸ்மால் கேப் குறியீடு 0.61 சதவீதமும் சரிந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தகச் சரிவில் 291.25 கோடி ரூபாயாக இருந்த சந்தை மதிப்பு 3.12 லட்சம் கோடி ரூபாய் சரிந்து 288.13 லட்சம் கோடி ரூபாயாகச் சரிந்துள்ளது.

சீனா

சீனா

சீனாவில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கையைப் பார்த்து வரும் போது மீண்டும் கட்டாயம் லாக்டவுன் தேவை என்ற நிலை உருவாகியுள்ளது. இது சர்வதேசச் சந்தையைப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இதனால் சர்வதேச அளவில் மீண்டும் ரெசிஷன் வருமா என்ற அச்சமும் உருவாகியுள்ளது.

ஐரோப்பா

ஐரோப்பா

இதேவேளையில் ஐரோப்பாவிலும் ரஷ்ய கச்சா எண்ணெய் சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளதாலும், குளிர்காலம், விடுமுறைக் காலம் வந்துவிட்டதாலும் ஐரோப்பிய யூனியனில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகம், பொருளாதாரச் சரிவு உருவாகியுள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி

அமெரிக்க மத்திய வங்கி

இதற்கிடையில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்துள்ளதால் பன்னாட்டு முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருக்கும் அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை வெளியேற்றியுள்ளனர். இதன் வாயிலாக அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 31 பைசா சரிந்து 82.45ல் இருந்து 82.76 ஆகச் சரிந்துள்ளது.

பெடரல் ரிசர்வ்

பெடரல் ரிசர்வ்

அமெரிக்க நாட்டின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், 4 நாணய கொள்கை கூட்டத்தில் தொடர்ந்து பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் வரையிலான வட்டி விகிதத்தை உயர்த்தி வந்தது.

ஜெரோம் பவல்

ஜெரோம் பவல்

இந்த நிலையில் புதன்கிழமை நாணய கொள்கை கூட்டத்தில் பெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஏற்கனவே கூறியது போல் வட்டி விகித உயர்வின் வேகத்தைக் குறைக்கப்பட்டுப் பென்ச்மார்க் வட்டி விகிதத்தை 0.50 சதவீதமாக மட்டுமே உயர்த்தினார்.

பென்ச்மார்க் வட்டி விகிதம்

பென்ச்மார்க் வட்டி விகிதம்

இதன் மூலம் 2007க்கு பின்பு அமெரிக்க மக்கள் அதிகப்படியான வட்டி விகிதத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கொள்கை வகுப்பாளர்கள் அந்நாட்டின் பென்ச்மார்க் வட்டி விகிதம் அடுத்த ஆண்டு 5.1 சதவீதத்தில் முடிவடையும் என்றும், 2024 ஆம் ஆண்டு இது 4.1 சதவீதமாகக் குறையும் என்றும் கணிக்கப்பட்டு உள்ளது.

வேலையின்மை , பொருளாதார வளர்ச்சி

வேலையின்மை , பொருளாதார வளர்ச்சி

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2023 ஆம் ஆண்டு 1.2 சதவீதமாக உயரும் எனக் கணித்திருந்தது. ஆனால் தற்போது 0.5 சதவீதமாக மட்டுமே உயரும் எனக் கணித்துள்ளது.

அமெரிக்காவின் வேலையின்மை விகிதம் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் 4.6 சதவீதம் ஆக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது மட்டும் அல்லாமல் 2024 வரையில் இந்த அளவீடு தொடரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+