60000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்.. இதுதான் காரணமா..?

மும்பை பங்குச்சந்தை வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சிறப்பான வளர்ச்சியை எட்டி பல நாட்களுக்கு பின்பு 60000 புள்ளிகளை எட்டி அசத்தியுள்ளது. இதனால் இந்திய ரீடைல் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளனர்.

இன்றைய உயர்வுக்கு 5 விஷயங்களை முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 415.49 புள்ளிகள் உயர்ந்து 60,224.46 புள்ளிகளை எட்டியுள்ளது. பல நாட்களாக சென்செக்ஸ் தனது பென்ச்மார்க் அளவான 60000 புள்ளிகளை தொட முடியாமல் திணறி வந்தது.

 டாப் 30 நிறுவனங்கள்

டாப் 30 நிறுவனங்கள்

இந்த நிலையில் சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டாடா மோட்டார்ஸ் அதிகப்படியாக 2.79 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இதேபோல் அல்ட்ராடெக், சன் பார்மா, இண்டஸ்இந்த், எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்கள் மட்டுமே சரிவை சந்தித்துள்ளது.

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு 117.10 புள்ளிகள் உயர்ந்து 17,711.45 புள்ளிகளை அடைந்தாலும், அதன் பென்ச்மார்க் அளவான 17800 புள்ளிகளை தாண்ட தவறியது. இன்றைய வர்த்தகத்தில் துறைவாரியான குறியீட்டில் பொதுத்துறை வங்கி மற்றும் ரியல் எஸ்டேட் துறை குறியீடு மட்டுமே சரிவில் மாட்டிக்கொண்டது.

 டாலர் மதிப்பு

டாலர் மதிப்பு

அமெரிக்க டாலர் மதிப்பு சர்வதேச சந்தையில் பல்வேறு காரணத்திற்காக தனது டாலர் இன்டெக்ஸ் வலிமையான 105 அளவீட்டை தாக்குப்பிடிக்க முடியால் போனது. இதனால் டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது, இதுமட்டும் அல்லாமல் ரூபாய் ஒரு மாத உயர்வை எட்டி இன்று 81.88 ரூபாயாக உள்ளது.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

மேலும் அமெரிக்க மத்திய வங்கி மார்ச் 21 - 22 ஆம் தேதி நடக்க உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.75 சதவீதம் வரையில் உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சில நாட்களுக்கு முன்பு அட்லாண்டா மத்திய வங்கி 0.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக அறிவித்தது.

இதன் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு குவிய துவங்கியது.

அதானி குழுமம்

அதானி குழுமம்

அதானி குழுமத்தின் நடந்த பலக் டீல் மூலம் அதானி குழுமத்தின் 10 நிறுவன பங்குகள் மீதும் புதிய முதலீடு குவிய துவங்கியது. இது சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு உயரவும் வாய்ப்பு அளித்துள்ளது. மேலும் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு அதன் மோசமான நிலையான 6.9 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 8 லட்சம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.

அமெரிக்க பத்திர முதலீடு

அமெரிக்க பத்திர முதலீடு

அமெரிக்க மத்திய வங்கி மார்ச் 21 - 22 ஆம் தேதி நடக்க உள்ள நாணய கொள்கை கூட்டத்தில் 0.25 சதவீதம் மட்டுமே வட்டி விகிதத்தை உயர்த்தும் வாய்ப்பு உள்ளதாக அட்லாண்டா மத்திய வங்கி அறிவித்தது.

இதன் மூலம் பத்திர சந்தையில் இருந்து முதலீடு குறைந்துள்ளது.

மும்பை பங்குச்சந்தை

மும்பை பங்குச்சந்தை

கடந்த ஒரு மாதமாக அன்னிய முதலீட்டாளர்கள் தங்களது பங்குகளை தொடர்ந்து வெளியேற்றிய நிலையில் தற்போது சர்வதேச முதலீட்டு சந்தையின் போக்கும், டாலர் மதிப்பின் ஆதிக்கமும் மாறிய நிலையில் தற்போது மும்பை பங்குச்சந்தையில் முதலீடுகள் குவிய துவங்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+