இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை வரலாறு உச்சத்தை எட்டியுள்ளது, சென்செக்ஸ் 86,000 புள்ளிகளைத் தாண்டியது. நிஃப்டி 50 குறியீடும் செப்டம்பர் 27, 2024 அன்று பதிவு செய்த உச்சத்தை தாண்டி புதிய சாதனை படைத்ததுள்ளது. அமெரிக்க ஃபெடரல் ரிசர்வும் இந்திய ரிசர்வ் வங்கியும் அடுத்த மாதமே தனது பென்ச்மார்க் வட்டி விகிதங்களை குறைக்கும் என்ற எதிர்பார்ப்பே இந்தப் பெரும் ஏற்றத்துக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.
இந்த ஆண்டு முழுவதும் மக்கள் தங்கம் தங்கம் என சென்ற காரணத்தால் பங்குச்சந்தை முதலீடுகள் குறித்த ஆர்வம் மெல்ல மெல்ல குறைந்தது, ஆனால் வருடத்தின் இறுதியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்செக்ஸ், நிஃப்டி வரலாற்று உயர்வை எட்டி 2026ஆம் ஆண்டுக்கு புதிய பாதையை அடைய வழிவகுத்துள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி:
சென்செக்ஸ் குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் 1000 புள்ளிகள் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த நிலையில் இன்று 86,055 புள்ளிகளை தொட்டு புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது. ஜாதகத்தில் 12 கட்டத்தில் சுக்கிரன் சேர் போட்டு உட்கார்ந்தது போல் இந்திய பங்குச்சந்தைக்கு தற்போது பல வகையில் சாதகமான முதலீட்டு சூழ்நிலை உருவாகியுள்ளது.
சென்செக்ஸ் 12.15 மணியளவில் 240.29 புள்ளிகள் உயர்ந்து 85,849.80 புள்ளிகளை எட்டியுள்ளது, இதேபோல் நிஃப்டி குறியீடு 40 புள்லிகள் உயர்வில் 26,245 புள்ளிகளில் வர்த்ககமாகி வருகிறது. இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடும் 26,310.45 புள்ளிகளை தொட்டு புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
இரு நாடுகளின் வட்டி குறைப்பு:
அமெரிக்காவும் இந்தியாவும் ஒரே நேரத்தில் வட்டி விகிதங்களைக் குறைக்கப்போவதாகத் தெரிகிறது. இது மிகவும் அரிதாக நடக்கும் ஒரு நிகழ்வு என்பதால் முதலீட்டு சந்தை முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளது. வட்டி குறைந்தால் கடன் எளிதாகக் கிடைக்கும், நிறுவனங்கள் அதிகம் முதலீடு செய்யும், வீடு வாங்குவோர் முதல் தொழில் செய்வோர் வரை எல்லோருக்கும் செலவு செய்ய பணம் கைவசம் இருக்கும். இதனால் பங்குச் சந்தைக்கு புதிய பணம் பாயும். இந்த ஒரே காரணமே சென்செக்ஸ் நிஃப்டி குறியீடுகள் புதிய உச்சத்துக்கு தூக்கி விட்டிருக்கிறது.
2026-ஐ 'சூப்பர் சைக்கிள்' ஆக பார்க்கும் உலக வங்கிகள்
உலகின் மிகப் பெரிய முதலீட்டு வங்கிகளான ஜேபி மோர்கன், மோர்கன் ஸ்டான்லி, கோல்ட்மேன் சாக்ஸ், எச்எஸ்பிசி, மேக்வரி ஆகியவை இந்தியப் பங்குச் சந்தையைப் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது. இந்த வங்கிகள் 2026-ஐ ஒரு "திருப்புமுனை ஆண்டு" என்று குறிப்பிடுகின்றன. நிறுவனங்களின் லாப வளர்ச்சி பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து உயரும் என்று கணிக்கின்றன.
அதற்கு முக்கியக் காரணங்களாக அவை கூறுவது, இந்தியாவில் மக்களின் நுகர்வு மீண்டும் வேகம் அடையும், அரசு செலவுகளில் புதிய மாற்றம் இருக்கும், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு தெளிவான திட்டம் உள்ளது, உள்நாட்டுத் தேவை வலுவாக இருக்கும் என காரணங்களை பட்டியலிட்டு உள்ளது. இவை எல்லாம் ஒன்றாகச் சேர்ந்தால் இந்தியப் பங்குச் சந்தை பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து ஏறும் என்று அவை நம்புகின்றன.
ஜேபி மோர்கன் கணிப்பு:
ஜேபி மோர்கன் வங்கி 2026 டிசம்பர் முடிவிற்குள் நிஃப்டி 50 குறியீடு 30,000 புள்ளிகளை எட்டும் என மிக முக்கியமான கணிப்பை வெளியிட்டுள்ளது. இது தற்போதைய நிலையைவிட கிட்டத்தட்ட 15 சதவீதம் அதிகமாகும். 2026-ல் இந்திய நிறுவனங்களின் லாப வளர்ச்சி 13 சதவீதமாகவும், 2027-ல் 14 சதவீதமாகவும் இருக்கும் என்று அது கணித்துள்ளது.
இதற்கிடையில் அமெரிக்கா-இந்தியா வர்த்தக உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டால் இந்தியப் பங்குச்சந்தைக்கு உடனடி மதிப்பு உயர்வைத் தரும் என்றும் கூறுகிறது.
சூப்பர் சைக்கிள் என்றால் என்ன?
சூப்பர் சைக்கிள் என்றால் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து பங்குச் சந்தை ஏறிக்கொண்டே போவது. இதற்கு முன்பு 2003 முதல் 2008 வரை இப்படி ஒரு சைக்கிள் வந்தது. இப்போது அதே போன்ற சூழல் உருவாகிறது என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள். இதற்கான திருப்புமுனை ஆண்டாக 2026-ஐ உலக வங்கிகள் பார்க்கிறது என்பது தான் தற்போதைய முக்கிய பேசுபொருளாக உள்ளது.
சாதாரண மக்களுக்கு என்ன பலன்?
சூப்பர் சைக்கிள் மூலம் வட்டி விகிதங்கள் குறையும், பொருளாதாரம் வேகமாக வளரும், நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டும். இதனால் மியூச்சுவல் ஃபண்ட், பங்கு முதலீட்டில் இருப்பவர்களுக்கு பல மடங்கு லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிறு நகரங்களில் வசிப்பவர்களும் இப்போது டிமாட் கணக்கு தொடங்கி சிறுகச் சிறுக முதலீடு செய்தால், அடுத்த சில ஆண்டுகளில் அவர்களது சேமிப்பு பெரிய அளவில் வளரும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
சென்செக்ஸ் 86,000-ஐத் தொட்டது வெறும் எண்ணிக்கை இல்லை; இந்தியப் பொருளாதாரம் ஒரு புதிய பயணத்தைத் தொடங்கி இருக்கிறது என்பதற்கான அடையாளம். 2026-ஐ நோக்கி இந்தியப் பங்குச் சந்தை "சூப்பர் சைக்கிள்" பயணத்தைத் தொடங்கி விட்டதா என்ற கேள்வி இப்போது எல்லோரது மனதிலும் எழுந்திருக்கிறது. பதில் ஆம் என்றால், ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் இது பொற்காலம்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications