இந்திய பங்குச் சந்தை குறியீடு இன்று கடுமையான வீழ்ச்சியை கண்டன. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்டெக்ஸ்கள் சுமார் 1.5% வீழ்ச்சியடைந்தன. ஐடி மற்றும் ஆட்டோ துறைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியும், உலகளாவிய பொருளாதார காரணிகள் மற்றும் அமெரிக்க மத்திய வங்கி நாணய கொள்கை குறித்த அச்சங்கள் பங்குச்சந்தை வர்த்தகத்தை கடுமையாக பாதித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று வர்த்தக முடிவில் 1,190 புள்ளிகள் குறைந்து 79,044 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 361 புள்ளிகள் குறைந்து 23,914 புள்ளிகளை தொட்டு 24000 பென்ச்மார்க் அளவீட்டை தொட்டுள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சியடைந்த போதிலும்,2,156 பங்குகள் உயர்ந்த நிலையில், 1,632 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. இதன் மூலம் இன்று இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சந்தை முதலீட்டை இழந்துள்ளனர்.

IT துறை பங்குகள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தது. நிஃப்டி IT இன்டெக்ஸ் 2.4% வீழ்ச்சியடைந்தது. இன்ஃபோசிஸ் (-3.5%), TCS (-1.8%), HCL டெக் (-2.5%) ஆகியவை மிகப்பெரிய இழப்பை சந்தித்த IT நிறுவனங்கள்.
அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை உடனடியாக குறைக்காது என்ற எதிர்பார்ப்பு இந்திய சந்தைகளை கடுமையாக பாதித்தது. அமெரிக்காவின் ஜிடிபி தரவுகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தது, இதனால் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் குறைந்தன. அமெரிக்காவில் அதிக வட்டி விகிதம் உலகளாவிய பங்குச் சந்தைகளை பாதிக்கும்.
இதேபோல் ஆசிய சந்தைகள் வீழ்ச்சியடைந்ததும் இன்று அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டது. சீன பங்குச் சந்தைகள் பெரிய அளவில் வீழ்ச்சியடைந்தன. பெய்ஜிங்கில் நடைபெறவுள்ள முக்கிய கொள்கை கூட்டத்தின் எதிரொலியாக முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக இருக்க முடிவு செய்த காரணத்தால் இன்று பங்குச்சந்தை பெரும் சரிவை சந்தித்துள்ளது.
நவம்பர் மாதம் F&O முடிந்தை முன்னிட்டு முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பனை செய்த காரணமாக கூடுதலாக சரிந்தது. சர்வதேச வர்த்தக சூழ்நிலையால் இந்திய சந்தையின் குறுகிய கால கண்ணோட்டம் நிச்சயமற்றதாக உள்ளது.


Click it and Unblock the Notifications