உலக நாட்டு மக்களுக்கு சனிக்கிழமை வீக்எண்ட் மோடில் ஜாலியாக துவங்கிய நிலையில் இஸ்ரேல் மக்கள் குண்டு வெடிப்பு சத்தத்துடனும், சைரன் சத்தத்துடனும் அதிர்ச்சியில் எழுந்து பாதுகாப்பான இடத்திற்கு குடும்பத்துடன் ஓட துவங்கினர். காசா எல்லை பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீதான தாக்குதல் மூலம் இரு நாடுகளுக்கும் போர் வெடித்துள்ளது.
இஸ்ரேல் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும் ஹமாஸ் அமைப்புக்கு தற்போது சவுதி அரேபியா, ஈரான், கத்தார் ஆகியவை ஆதரவாக குரல் கொடுத்தது. இஸ்ரேல் - ஹமாஸ் போர் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் ஆம், ஞாயிற்றுகிழமை வர்த்தகத்தில் 3 வருடத்தில் இல்லாத சரிவை இஸ்ரேல் பங்குச்சந்தை எதிர்கொண்டது.

இதேபோல் மத்திய கிழக்கு நாடுகளும் அதிகமாக சரிவை பங்குச்சந்தை குறியீடுகளில் பதிவு செய்தது. இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் ஆசிய சந்தை கடுமையான வர்த்தக பாதிப்பை எதிர்கொண்ட நிலையில், இந்திய பங்குச்சந்தை குறியீடுகளும் சரிந்து முதலீட்டாளர்களை பயமுறுத்தியது.
திங்கட்கிழமை காலை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 500 புள்ளிகள் வரையில் சரிந்து மிகவும் மோசமான அளவான 65,434.61 புள்ளிகளை எட்டியது. அடுத்த 45 நிமிடத்தில் மெல்ல மெல்ல மீண்டு 226.21 புள்ளிகள் மட்டுமே சரிந்து 65,769.42 புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் இன்று ஐடி சேவை துறை பங்குகள் அனைத்தும் உயர்வுடன் உள்ளது. காரணம் இந்த வாரத்தில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் செப்டம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது, இதை எதிர்நோக்கி முதலீட்டாளர்கள் அதிகளவில் முதவீடு செய்து வருகிறார்கள்.
ஐடி பங்குகளை தாண்டி ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, மாருதி சுசூகி ஆகியவை மட்டுமே உயர்வுடன் உள்ளது. மற்ற அனைத்து நிறுவனங்களும் சரிவுடன் உள்ளது. இதில் அதிகப்படியாக பஜாஜ் பைனான்ஸ், எல் அண்ட் டி, பஜாஜ் பின்சர்வ், JSW ஸ்டீல், டாடா ஸ்டீல், பவர் கிரிட், எஸ்பிஐ, ஏசியன் பெயின்ட்ஸ், டைட்டன் ஆகியவை 1 சதவீத்திற்கு மேல் சரிந்துள்ளது.
இதேபோல் நிஃப்டி குறியீடு இன்றைய வர்த்தகத்தில் 19,480.50 புள்ளிகல் வரையில் சரிந்து 19500 என்ற முக்கிய பென்ச்மார்க் அளவீட்டை இழந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. அடுத்த 45 நிமிடத்தில் நிஃப்டி குறியீடு 84.90 புள்ளிகள் சரிந்து 19,568.60 புள்ளிகளை எட்டியுள்ளது.
மேலும் நிஃப்டி மிட்கேப், ஸ்மால் கேப், லார்ஜ் கேப் ஆகிய அனைத்தும் சரிவை சந்தித்ததுள்ளது. இதுவே துறை வாரியாக பார்க்கும்போது நிஃப்டி ஐடி,ஹெல்த்கேர், பார்மா ஆகிய 3 துறை சார்ந்த குறியீடுகள் மட்டுமே உயர்வுடன் உள்ளது. மற்ற அனைத்தும் பெரும் சரிவுடன் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications