சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கணும்..!!

இந்திய பங்குச் சந்தையில் ஐந்தாவது நாளாக தொடர் சரிவு நிலவி வருகிறது. வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 19, 2024) பங்குச் சந்தை கடும் சரிவுடன் தொடங்கியது. இந்தியாவில் 120 லட்சம் கோடி ரூபாய் செலவில் நடக்கும் உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் துவங்கிய நாளில் பங்குச்சந்தை சரிவு, தங்கம் விலை உயர்வு ஆகியவை முதலீட்டாளர்களின் நம்பிக்கை தடுமாற்றத்தை காட்டுகிறது.

மத்திய கிழக்கில் பகுதியில் ஈரான் - இஸ்ரேல் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து பாதுகாப்பான இடத்திற்கு முதலீட்டை மாற்ற முடிவு செய்துள்ளனர்.

சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கணும்..!!

இந்த நிலையில் ஈரான் நாட்டில் இஸ்ஃபஹான் பகுதியில் குண்டுவெடிப்பு சத்தம் கேட்டதாகவும், ஆனால் இது ஏவுகணை இல்லை எனவும் ஈரானிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பங்குச்சந்தை குறியீடுகள் கடும் சரிவில் உள்ளன.

இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது சென்செக்ஸ் 600 புள்ளிகள் சரிந்து 71,816.46 புள்ளிகளுக்கு சரிந்தது. 9.45 மணியளவில் 531.62 புள்ளிகள் சரிவில் 71,957.13 புள்ளிகளை தொட்டு உள்ளது.

சென்செக்ஸ்-ஐ பதம்பார்த்த ஈரான் - இஸ்ரேல் விவகாரம்.. தேர்தல் நாளில் இப்படியா நடக்கணும்..!!

மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் ஐடிசி, பார்தி ஏர்டெல், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர் மட்டும் உயர்வுடன் உள்ளது. மற்ற அனைத்து பங்குகளும் சரிந்துள்ளது.

உலகளாவிய சரிவு: இந்தியா மட்டுமல்லாமல் உலகளாவிய அளவிலும் பெரும்பாலான பங்குச் சந்தைகள் சரிவுடன் காணப்படுகின்றன. மத்திய கிழக்கு பதற்றங்கள் சர்வதேச முதலீட்டாளர்களையும் பாதித்துள்ளன.

துறை குறியீடுகள் அனைத்தும் சரிவு: பங்குச்சந்தையில் உள்ள அனைத்து துறை சார்ந்த குறியீடுகளும் இன்று காலை வர்த்தகத்தில் பெரும் சரிவுடன் துவங்கியது. குறிப்பாக, ரியல் எஸ்டேட் மற்றும் பொதுத் துறை வங்கி துறை குறியீடுகள் மோசமான சரிவைச் பதிவு செய்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்றங்கள் அதிகரிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கடும் சரிவில் உள்ளன. இதேவேளையில், அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாய் மதிப்பு சரிந்து புதிய சாதனை சரிவைச் சந்தித்துள்ளது.

ஈரான் - இஸ்ரேல் மோதலால் சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 3 டாலர் அதிகரித்துள்ளது. பிட்காயின் 60,000 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது.

விப்ரோ, ஜியோ ஃபின் உள்ளிட்ட 15 நிறுவனங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) 4ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளன. இதனால் சந்தையின் சரிவை கணிசமாக காப்பாற்ற முடியும்.

முதலீட்டாளர்களின் கவலை: மத்திய கிழக்கு மோதலால் எரிபொருள் விலை அதிகரித்து பணவீக்கம் உயரும் என்ற அச்சம் முதலீட்டாளர்களிடையே நிலவுகிறது. இதனால், பங்குச் சந்தையில் பணத்தை முதலீடு செய்வதைத் தவிர்த்து பத்திரம், தங்கம் போன்ற பாதுகாப்பான பிரிவில் முதலீடு செய்வது அதிகரித்துள்ளதை சில மணிநேரத்திலேயே பார்க்க முடிகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+