அச்சச்சோ மீண்டும் 1,700 புள்ளிகளுக்கு மேல் சரிவு கண்ட சென்செக்ஸ்.. 6 லட்சம் கோடி காலி..!

மும்பை: கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் இதுவரையில் 62 பேருக்கு இதன் தாக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதிலும் உலகம் முழுக்க 1,18,000 பேருக்கு இதன் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், 4,291 பேர் இதனால் பலியாகியுள்ளனர்.

இந்த நிலையில் தான் இதனை உலக சுகாதார மையம் பெரும் தொற்று நோயாக அறிவித்துள்ளது.கிட்டதட்ட 114 நாடுகளில் பரவி இருக்கும் இந்த வைரஸால் இன்னும் பலர் பாதிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

கடுமையான சோதனை

கடுமையான சோதனை

இதற்கு மத்தியில் மேலும் தாக்கம் அதிகரிக்காமல் இருக்க இந்தியா பல நாடுகளுக்கு செல்ல தடை விதித்துள்ளது. அதே போல வெளி நாடுகளில் இருந்து வரும் ஒவ்வொரு பயணிகளையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். இதன் மூலம் கொரோனா தாக்கம் அடைந்தவர்களை கண்டறியப்பட்டு மேலும் தனிமைபடுத்தி சிகிச்சை அளித்து வரப்படுகிறது.

கடுமைமையான வீழ்ச்சி

கடுமைமையான வீழ்ச்சி

இதற்கு மத்தியில் இந்திய பங்கு சந்தைகள் படு வீழ்ச்சி கண்டு வருகின்றன. குறிப்பாக மும்பை பங்கு சந்தையின் சென்செக்ஸ் 1,727 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 33,969 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதே தேசிய பங்கு சந்தையின் நிஃப்டி 517 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,941 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது. இதே போல ஆய்வாளர்கள் கணித்ததை போலவே டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 74.16 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.

விமான பங்குகள் படு வீழ்ச்சி

விமான பங்குகள் படு வீழ்ச்சி

குறிப்பாக அனைத்து துறை குறியீடுகளும் 3 - 7% வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக விமானத்துறை பங்குகள் படு வீழ்ச்சி கண்டுள்ளன. பல நாடுகளுக்கு பயணங்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், விமான நிறுவனங்கள் தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. ஏனெனில் தங்களின் பெரும்பான்மையான வருவாயை இழந்து வருகின்றன. நிறுவனங்கள் தங்களது வணிகத்தை ஊக்கப்படுத்த பல வாறு ஊக்கப்படுத்தினாலும் கொரோனா பயத்தால் அது எதுவும் கைகொடுக்கவில்லை என்றே கூறலாம்.

இந்த பங்குகள் எல்லாம் வீழ்ச்சி

இந்த பங்குகள் எல்லாம் வீழ்ச்சி

குறிப்பாக ஸ்பைஸ் ஜெட் 18.80% வீழ்ச்சி கண்டு 49 ரூபாயாக உள்ளது. இண்டிகோ 10% வீழ்ச்சி கண்டு 1,039.95 ரூபாயாக உள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் பிஎஸ் இயில் 1700 செயலில் உள்ள பங்குகளில் 126 பங்குகள் மட்டுமே வர்த்தகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் டாடா மோட்டர்ஸ் பங்கு விலையானது 11.92% வீழ்ச்சி கண்டு 88.10 ரூபாயாகவும், இதெ யெஸ் பேங்கின் பங்கு விலையானது 9.2% வீழ்ச்சி கண்டு 26.15 ரூபாகவும், டாடா ஸ்டீல், அதானி போர்ட்ஸ், வேதாந்த மற்றும் ஜே.எஸ்.டபள்யூ ஸ்டீல் உள்ளிட்ட பங்குகள் 8 - 9% வீழ்ச்சி கண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் பங்கு சந்தையில் 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+