சர்வதேச முதலீட்டாளர்களுக்கு இந்திய பங்குச்சந்தை முக்கிய முதலீட்டுத் தளமாக மாறியுள்ளது, அமெரிக்காவில் வட்டி விகித குறைப்புக்கு வாய்ப்பு இல்லை என உறுதியாகிவிட்ட நிலையிலும், ஐரோப்பாவில் தொடரும் மந்த நிலை காரணமாகவும், சீனாவில் உற்பத்தி அளவுகளில் ஏற்பட்டு உள்ள தொய்வு ஆகியவற்றுக்கு மத்தியில் நிலையான வளர்ச்சியை உறுதி செய்து வரும் இந்தியா முதலீட்டாளர்களுக்கு ஒரு நீண்ட ஹாலிடே ஸ்பாட் ஆக மாறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றாமல் இருந்தது மூலம் நாட்டின் வர்த்தகம், பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்துள்ளது. டிசம்பர் மாதம் உணவு பணவீக்கம் உயரும் என முன்கூட்டியே கணித்துள்ளது, இதனால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டைப் பாதிக்காத வண்ணம் முதலீடு செய்து வருகின்றனர்.

இதேபோல் இந்திய முதலீட்டாளர்களும் பங்குச்சந்தை உயர்வில் அதிகப்படியான முதலீடு செய்து வருகின்றனர், குறிப்பாக இளம் மற்றும் சிறிய முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்து வருவதால் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கியது மட்டும் அல்லாமல் முதல் முறையாக 70000 புள்ளிகளைத் தொட்டு புதிய உச்சத்தைத் தொட்டு உள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் வரலாற்று உச்சமாக 70,057.83 புள்ளிகளைத் தொட்டு உள்ளது.
சென்செக்ஸ் குறியீடு தற்போது வெறும் 46.55 புள்ளிகள் உயர்ந்து 69,872.15 புள்ளிகளை எட்டியுள்ளது, நிஃப்டி குறியீடு 19.90 புள்ளிகள் உயர்ந்து 20,989.30 புள்ளிகளை எட்டியுள்ளது. இதேபோல் இன்றைய வர்த்தகம் கணிசமான சரிவுடன் முடியவும் வாய்ப்புகள் உள்ளது.
இதேபோல் கச்சா எண்ணெய் விலை 48 சென்ட் உயர்ந்து ஒரு பேரலுக்கு 76.32 டாலராக உள்ளது, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 83.40 ரூபாயாக சரிந்துள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications