பொதுத் தேர்தல் பின்பு வெளியான எக்சிட் போல் முடிவுகள் பங்குச்சந்தை வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை வர்த்தகத்தில் காலை வர்த்தகம் துவங்குவதற்கு முன்பு நடந்த ஃப்ரி மார்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 3.55 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்து பங்குச்சந்தை முதலீட்டாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
வெள்ளிக்கிழமை வெளியான எக்சிட் போல் முடிவுகளின் தாக்கம் திங்கட்கிழமை வர்த்தகத்தில் இருக்கும் என ஏற்கனவே கணிக்கப்பட்டது என்றாலும் இன்று காலை பதிவான உயர்வுக்கு எக்சிட் போல் மட்டும் காரணமில்லை.

திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஆசியப் பங்குச்சந்தைகள் உயர்ந்தன, இதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் பணவீக்கத்தைக் கணக்கிடுவதற்கான அமெரிக்க மத்திய வங்கியின் (Federal Reserve) இலக்கு அளவீட்டை அடைவதற்கான சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது என்ற தகவல் தான். இதன் மூலம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகத்தில் ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகள் முன்னேற்றம் கண்டன.
இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சிக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும் என்று எக்சிட் போல் கருத்துக்கணிப்புகள் வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தியப் பங்குச்சந்தையில் பியூச்சர்ஸ் சந்தையில் இருந்து வெளியேறிய அன்னிய முதலீடுகள் மீண்டும் வந்தது இதன் எதிரொலியாகவே ஃப்ரி மார்க்கெட் வர்த்தகத்தில் சென்செக்ஸ் 2600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
கடந்த சில வாரங்களில், சர்வதேச முதலீட்டாளர்கள் அமெரிக்க மத்திய வங்கி விரைவில் தனது நாணய கொள்கையைத் தளர்த்தி வட்டி விகிதத்தைக் குறைக்கும் நம்பிக்கையில் உள்ளனர். இதன் எதிரொலியாக அமெரிக்க டாலர் மதிப்பு பலவீனமாக இருந்த காரணத்தால் ஆசியப் பங்குச்சந்தைகளின் உயர்வுகள் அதிகரித்துள்ளன. மே மாதத்தில் அமெரிக்க டாலர் 1.1% சரிந்தது.
வெள்ளிக்கிழமை, அமெரிக்க மத்திய வங்கியின் விருப்பமான பணவீக்க அளவீடான 'கோர் பர்சனல் கன்சம்ப்ஷன் எக்ஸ்பெண்டிச்சர்ஸ்' (core personal consumption expenditures) இந்த ஆண்டின் மிகக் குறைந்த அதிகரிப்பைக் காட்டியது. ஆனால், மத்திய கிழக்கு மற்றும் அமெரிக்கத் தேர்தலைச் சுற்றிய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், அரசியல் சூழல் பங்குச்சந்தைகளில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனவும் கூறப்படுகிறது.
இதேவேளையில் இன்று கச்சா எண்ணெய் விலைகள் உயர்ந்தன. ஆஸ்திரேலியா பத்திரக் கடன் விகிதங்கள் மற்றும் 10 ஆண்டுக் கால அமெரிக்க ஐக்கிய தேசிய கடன் (US Treasuries) விகிதங்கள் சிறிது குறைந்தன.
இந்திய பங்குச்சந்தைக்கு இன்று உள்நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி சாதகமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் பங்குச்சந்தை தொடர்ந்த 2000 புள்ளிகள் உயர்வுடன் உள்ளது.


Click it and Unblock the Notifications